Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"தலைவர்".. அவருடன் சேர போகிறாராமே.. டக்கென திரும்பி பார்த்த பாஜக.. ஆழம் பார்த்தாரா எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் சீனியர் பொன்னையன் சசிகலா பக்கம் தாவ இருப்பதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொன்னையன் பற்ற வைத்த தீ இன்னமும் கொழுந்துவிட்டு கூட்டணிக்குள் எரிந்து கொண்டிருக்கிறது.. இதையடுத்து, சமாதானங்கள், சாக்கு போக்குகள், சமாளிப்புகள் நிறைந்த பேட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒன்று திமுக, இல்லாவிட்டால் பாஜக என்று சவால்விடுத்து அரசியல் செய்து வருகிறது கமலாலயம்.. ஆரம்பத்தில் இதை பெரிதாக கண்டுகொள்ளாத திமுகவும் சரி, அதிமுகவும் மெல்ல விழித்து கொள்ள ஆரம்பித்தன.

திமுகவை எதிர்க்கிறோம் என்ற பெயரில் பாஜக, தங்களையே ஓவர்டேக் செய்துவிட்டதே என்று அதிமுக நினைத்துள்ளது.. நாளுக்கு நாள் தங்களை டேமேஜ் செய்து வருகிறதே என்ற திமுக நினைத்துள்ளது.. இதையடுத்துதான், கடந்த 4 நாட்களாகவே தமிழக அரசியலில் ஒரு மாற்றம் தென்பட ஆரம்பித்துள்ளது.

 பொன்னையன்

பொன்னையன்

திமுகவோ, பாஜகவுக்கு பதிலடியை தந்து வருகிறது.. கூட்டணியில் அதிமுகவோ, வெளிப்படையாகவே பாஜகவை விமர்சித்துள்ளது.. அதன் வெளிப்பாடாகவே பொன்னையனின் பேட்டி பார்க்கப்படுகிறது. "பாஜக வளருவது ஆபத்து" என்று தெரிவித்துள்ளார்.. இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. அண்ணாமலை ஆவேசமாகி உள்ளார்.. விபி துரைசாமி கொந்தளித்துள்ளார்.. கரு.நாகராஜன் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் தன்னுடைய வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார். "பொன்னையனை விட்டு எடப்பாடி பழனிசாமி ஆழம் பார்க்கிறார்" என்று தெரிவித்துள்ளார்.

 எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

உண்மையிலேயே எடப்பாடி பழனிசாமி ஆழம் பார்க்கிறாரா? அல்லது பொன்னையன் பேசியது தனிப்பட்ட கருத்தா என்ற குழப்பம் இந்த 4 நாட்களாகவே நீடித்து வந்தது.. இப்படிப்பட்ட சூழலில்தான், எடப்பாடியும - ஓபிஎஸ்ஸும் இணைந்து ஒரு விளக்கத்தை தந்துள்ளனர்.. "அண்ணன் பொன்னையன் பேசியது கட்சியின் கருத்து அல்ல, அது அவரின் சொந்த கருத்து" என்று கூறியுள்ளனர். பொன்னையன் குறித்து இரு தலைவர்களும் தெளிவுபடுத்தி விட்டாலும், இந்த பேட்டியானது 2 விதமான சந்தேகங்களை ஏற்படுத்தி வருகிறது.

 அதிமுக சிக்கல்

அதிமுக சிக்கல்

பொன்னையன் பேசியது தனிப்பட்ட கருத்து என்றால், அவர் ஏன் அதிமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்த வேண்டும்? எம்பி சீட் கிடைக்காத வருத்தத்தில் அதிருப்தியில் அப்படி ஒரு கருத்தை சொன்னாரா? என்றார். ஏற்கனவே சசிகலா பக்கம் முக்கிய தலைவர்கள் தாவ போவதாக செய்திகள் கசிந்து வரும் நிலையில், பொன்னையன் இப்படி பேசி வேண்டிய அவசியம் என்ன? இவரும் சசிகலா பக்கம் இணைய போகிறாரா? என்ற சந்தேகங்கள் வலுத்துள்ளன..

 ஆழம் பார்க்கிறார்

ஆழம் பார்க்கிறார்

அதுமட்டுமல்ல, பொன்னையன் பேசியது தனிப்பட்ட கருத்து என்றால், பாஜகவுடன் அதிமுக இணைந்தே பயணிக்குமா? பாஜகவின் தற்போதைய செயல்பாடுகள் அதிமுகவுக்கு திருப்தியை தந்து வருகிறதா? அதிமுகவையும் மிஞ்சி பாஜக தலையெடுத்து வருவதை எடப்பாடி தரப்பு விரும்புகிறதா? அல்லது திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை வேண்டுமென்றே அதிமுக மேலிடம் விட்டுக்காடுக்கிறதா? பாஜகவை பகைத்து கொள்ளவும், விமர்சிக்கவும் அதிமுக தயாராக இல்லையா? போன்ற கேள்விகளும் எழுகின்றன.

 எடப்பாடி செக்

எடப்பாடி செக்

ஆக, மூத்த தலைவர் பொன்னையன் பேசியது அதிமுகவின் பொதுக்கருத்து என்றால், தமிழக அரசியலில் பல நல்ல மாற்றங்கள் வரப்போகும் காலங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது, அல்லது பொன்னையன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என்றால், அது எதிர்கால தமிழகத்திற்கு நல்லதல்ல என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. இவை இரண்டில் எது உண்மை? ஒருவேளை, எடப்பாடி பழனிசாமி பொன்னையனை பேசவிட்டு உண்மையிலேயே ஆழம் பார்க்கிறாரா? அதுவும் தெரியவில்லை.. பார்ப்போம்..!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+