இந்த பக்கம் வாங்க.. எடப்பாடியை இழுக்கும் மாஜி.. தடுக்கும் "மணிகள்".. சாட்டையை சுழற்ற ரெடியான பாஜக!
சென்னை: அதிமுக பாஜகவோடு கூட்டணி வைக்குமா.. 2024 லோக்சபா தேர்தலில் என்ன நடக்கும்.. எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுப்பார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணியாக இது இருக்கும். அதிமுக அழிந்துவிடும் என்று நினைப்பவர்களின் கனவு பலிக்காது. பல காலமாக இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நினைப்பவர்கள் ஏமாந்து போய் இருக்கிறார்கள். அதுதான் இப்போதும் நடக்கும். தமிழ்நாட்டில் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியை நிலைநிறுத்துவோம். எங்கள் மீது வழக்குகளை போட்டு எங்களை முடக்க முடியாது. அதற்கு நாங்கள் விட மாட்டோம், என்று கூறினார்.
எடப்பாடியின் இந்த மெகா கூட்டணி முன்னெடுப்பு மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில்தான் சமீபத்தில் சிவி சண்முகம் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், திமுக - பாஜக காட்சிகள் கூட்டணி வைக்க போகின்றன. இவர்கள் கருப்பு துண்டு. அவர்கள் காவி துண்டு. ஆனா ரெண்டுமே ஒன்னு தான். திமுக - பாஜக கூட்டணி வைக்க போகிறார்கள், என்று குறிப்பிட்டு இருந்தார்.
அப்படி என்றால் அதிமுகவின் மெகா கூட்டணியில் பாஜகவிற்கு இடம் இல்லையா? எடப்பாடியின் திட்டம் அதுதானா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் எடப்பாடி யாருடன் கூட்டணி வைப்பார் என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன்இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி பின்வருமாறு..

பேட்டி
கேள்வி: எடப்பாடி இல்லாமல் மற்றவர்கள் எல்லோரையும் வைத்தும் புதிய அதிமுகவை உருவாக்குவோம் என்று புதிய பார்முலாவை ஓபிஎஸ் தரப்பில் சொல்லி வருகிறார்களே?
பதில்: அதற்கான சாத்தியம் குறைவு. அது எடப்பாடிக்கு பாதகமாக முடியும். எடப்பாடி பாஜகவை கைவிட மாட்டார். கடைசி கட்டத்தில் பாஜகவுடன்தான் போவார். எடப்பாடி தனியார் நிற்க வாய்ப்பே இல்லை. தனியாக நிற்பார் என்று சிலர் வதந்திகளை பரப்புகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை.

கூட்டணி
கேள்வி: பாஜகவுடன் இல்லை என்றால் எடப்பாடிக்கு சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கத்தானே செய்யும்? எடப்பாடி அதை விரும்ப மாட்டாரா?
பதில்: சிறுபான்மையினர் வாக்கு அப்படியே கிடைத்துவிடாது. எடப்பாடி தனியாக இருந்தால் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காது. அதிமுகவில் எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அதாவது எடப்பாடி + ஓபிஎஸ் + பாமக + டிடிவி தினகரன் + சசிகலா எல்லோரும் ஒன்றாக இருக்க வேண்டும். அப்போது மட்டுமே இந்த வெற்றி சாத்தியம் ஆகும். அப்போது மட்டுமே சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவிடம் இருந்து அதிமுகவிற்கு வரும்.

திமுக கூட்டணி
கேள்வி: திமுக கூட்டணி உடைய போவதாக சிவி சண்முகம் சொல்லி இருக்கிறாரே?
பதில்: திமுக கூட்டணி உடையுமா.. அதில் இருந்து சிலர் நம்முடைய கட்சிக்கு வர மாட்டார்களா என்று அவர் நினைக்கிறார். ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை. பாஜக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் வலிமையாக இருக்கிறார். அப்படி இருக்கும் போது எடப்பாடி, ஓபிஎஸ், தினகரன், சசிகலா இவர்கள் யாராவது பாஜக எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை கையில் எடுக்க முடியுமா? இவர்கள் எல்லாம் பாஜகவை எதிர்க்காமல்.. திமுக கூட்டணியில் இருப்பவர்களை எப்படி அதிமுக தங்கள் பக்கம் இழுக்க முடியும்.

இழுக்கப்படும் எடப்பாடி
கேள்வி: பாஜக வேண்டாம் என்று சிவி சண்முகம் ஒரு பக்கம் எடப்பாடியை இழுக்கிறார்.. பாஜக வேண்டும் , நீங்கள் இந்த பக்கம் வாங்க என்று வேலுமணி தங்கமணி எடப்பாடியை இழுக்கிறார்கள்.. எடப்பாடி என்னதான் செய்வார்?
பதில்: இந்த தற்காலிக மோதல் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் அதிமுகவை எப்படியாவது முழுமையாக கைப்பற்ற எடப்பாடி முயற்சி செய்வார். ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் பாஜக சொல்வதைதான் எடப்பாடி கேட்பார். பாஜகவோடு சேர்ந்துதான் எடப்பாடி கூட்டணி வைக்க வேண்டும். சிவி சண்முகம் கடைசியில் பாஜகவை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதிமுகவில் எல்லோரும் பிரிந்து இருந்தால் வரும் இடங்களை விட கூடுதலாக 5 இடங்களை வேண்டுமானால் அதிமுக கூட்டணி பெறும்.
-
கோவை தெற்கில் இருந்து ஆரம்பிக்கும் திமுகவின் தோல்வி.. சவால் விட்ட அண்ணாமலை -
அவிநாசியில் முருகன்.. மத்திய அமைச்சராகும் மலை? ரூட் போடும் அண்ணாமலை! எகிறும் எதிர்பார்ப்பு! -
அண்ணாமலை நேர்மையானவரா.. அரவக்குறிச்சியில் நடந்தது என்ன.. செந்தில் பாலாஜி சம்பவம் -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
மாஸ் லீடர்.. அண்ணாமலை பிம்பம் உடைந்ததா? எந்த தொகுதியா இருந்தால் என்ன? வென்று காட்ட முடியாதா? -
“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஜெயிக்கணும்னே நினைக்கலயா?”.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை -
தோல்வி பயம்.. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் அதுதான்.. விளாசிய கனிமொழி! -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம்











Click it and Unblock the Notifications