"கருவாடு" மீன் ஆக போகுது.. ரெடியா இருங்க.. ஓபிஎஸ்ஸிடம் சாயும் அதிமுக.. எடப்பாடிக்கு தலைவர் தந்த ஷாக்
தனியரசு, எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் குறித்து தன்னுடைய கருத்தை கூறியுள்ளார்
சென்னை: கருவாடு மீன் ஆகாது, கறந்த பால் மடி புகாது என்று ஓபிஎஸ் விவகாரத்தில், மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து, கொங்கு இளைஞர் பேரரவை தனியரசு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
நேற்றையதினம் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, டிடிவி தினகரன், சசிகலா மற்றும் ஓபிஎஸ்ஸிடமும் கோடி கோடியாய் பணம் குவிந்திருக்கிறது.
அந்த பணத்தைவைத்து இன்று ஆள்பிடிக்கும் வேலையைத்தான் செய்து கொண்டுள்ளனர்... அதனுடைய முதற்கட்டமாக ஐயப்பனை பிடித்துள்ளனர். எத்தனை பேரை பிடித்தாலும், அதிமுகவை ஒன்னும் அசைக்கவே முடியாது.

பின்னடைவு
இதனால், அதிமுகவுக்கு எந்தவொரு பின்னடைவும் கிடையாது.. அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு இடம் இல்லை. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாது" என்றார். ஜெயக்குமாரின் இந்த திட்டவட்டமான கருத்து குறித்து, தனியரசு ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.. அந்த பேட்டியில் பாக்யராஜ் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தந்தது குறித்தும், கருவாடு மீனாகாது என்ற ஜெயக்குமார் கூறியது குறித்தும், கருத்து கேட்கப்பட்டது. அதற்கு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், எம்எல்ஏவுமான தனியரசு சொன்ன பதில்கள்தான் இவை:

இணக்கம் - நெருக்கம்
எடப்பாடியைவிட பாக்யராஜ் அதிமுகவின் விசுவாசி.. எம்ஜிஆரின் விசுவாசி.. ஜெயலலிதாவுடனும் இணக்கமாக இருந்தார்.. பாஜகவுடனும் இணக்கமாக இருந்தார்.. அவருக்கான அரசியல் தாக்கம் இன்னமும் உள்ளது.. இன்றுகூட அவரது வருகை, மத்தியிலும், கட்சிக்குள்ளும் விவாதப்பொருளாகவும் உருமாறி உள்ளது.. மேற்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதாலும், கட்சி ஒன்றாக இணைய வேண்டும் என்ற ஓபிஎஸ் எண்ணத்தை அவர் பிரதிபலிக்கிறார்..

பாக்யராஜ்
ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக மீதான தன் பற்றை வெளிப்படுத்துகிறார்.. ஆனால், பாக்யராஜ் முயற்சி எடுத்தாலும், எடப்பாடி அதற்கு ஒப்புக் கொள்ள மாட்டார்.. எடப்பாடியைவிட சீனியராக பாக்யராஜ் இருந்தாலும், அவர் பேச்சை எடப்பாடி கேட்க மாட்டார்.. ஏனென்றால், சசிகலா பேச்சுக்கு கட்டுப்படாத எடப்பாடி, டிடிவி தினகரன் பேச்சுக்கு கட்டுப்படாத எடப்பாடி, தன்னுடைய மூத்த தளபதி ஓபிஎஸ் பேச்சுக்கும் கட்டுப்படாமல், அவரையே வீழ்த்த நினைக்கும் எடப்பாடி, ஒரு மூத்த திரைக்கலைஞர் பாக்யராஜ் பேச்சை கேட்க மாட்டார்.. இருந்தாலும் பாக்யராஜ் எடப்பாடியிடம் தன்னுடைய கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்பதே என் விருப்பம். முயற்சித்து பார்க்கட்டும்..

கருவாடு மீன் ஆகுமா?
ஜெயக்குமார் கருவாடு மீன் ஆகாது, கறந்த பால் மடி புகாது என்று சொல்லி உள்ளார்.. இப்படிதான் அன்னைக்கு மூத்த தலைவர் காளிமுத்து சொன்னார்.. ஆனால், கருவாடு மீன் ஆகியது.. கறந்த பால் மடி புகுந்தது.. ஜெயலலிதாவுடன் இணைந்து, தமிழக சட்டப்பேரவை தலைவராக பதவியை அலங்கரித்தார் காளிமுத்து.. உதிர்ந்த முடி, ரோமம் என்று நெடுஞ்செழியன் மீது சொன்ன அந்த கூற்று, மீண்டும் இணைந்து பயணித்ததையும் பார்த்தோம்.. எனவே, அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை.. நிரந்தர பகைவனும் இல்லை என்பதால், ஜெயக்குமார் அப்படி சொல்லியிருக்கக்கூடாது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications