பா.ஜ.க அமைச்சரவையில் அ.தி.மு.க?... ஓ.பி.எஸ் பதில் இது தான்
Recommended Video
சென்னை: பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளது. இதனையடுத்து, நாடு முழுவதும் உள்ள பாஜ கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு விருந்தளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் பங்கேற்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார்.

டெல்லி செல்வதற்கு முன் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: பாஜக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23ல் நடக்கும் அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்.
பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று வெளியான கருத்துக்கணிப்புகள் மக்களின் முடிவை பிரதிபலிக்கிறது என்றும், கருத்துக்கணிப்புகளை 'கருத்து திணிப்பு' என கூறுவது அவரவர் விருப்பம் எனவும் ஓபிஎஸ் கூறினார்.
கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக தோப்பு வெங்கடாசலம் அளித்துள்ள ராஜினாமா கடிதம் குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என்று கூறிய ஓ.பன்னீர்செல்வம், நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி












Click it and Unblock the Notifications