ரூட் மாறுதே.. இது புதுசா இருக்கே.. பாமகவை "அந்த" கட்சியும் அது பக்கமா இழுக்குதாமே.. அப்போ அதிமுக..?!
அமமுகவுடன் பாமக கூட்டணி வைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
சென்னை: நித்தம் ஒரு காட்சி, நித்தம் ஒரு அதிரடி என்று தமிழக அரசியல் நகர்ந்து வருகிறது.. அந்த வகையில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்த பல யூகங்களும், சந்தேகங்களும், ஆர்வங்களும் எழுந்து கொண்டே இருக்கின்றன.
டாக்டர் ராமதாஸை பொறுத்தவரை, யார் நிறைய சீட் தருகிறார்களோ அவர்களுடன்தான் அந்த தேர்தலில் கூட்டணி வைப்பார்.. இதைதான் இந்த தமிழகம் 30 வருஷமாக பார்த்து வருகிறது... அதே நேரத்தில் இது பெரிய விஷயமாகவும் எடுத்து கொள்ளப்படுவதில்லை.
ராமதாஸ் கூட்டணி வைக்கும் கட்சி சற்று பலம் வாய்ந்து இருக்கும்.. வடமாவட்ட ஓட்டுக்களை அப்படியே வாரி சுருட்டி கொண்டு வந்து கூட்டணி தலைமையிடம் தந்துவிடுவார். எனவே யார் முதலில் பாமகவை கூட்டணிக்குள் சேர்த்து கொள்வது என்று திமுக, அதிமுகவுக்குள் ஒரு போட்டியே நடக்கும்.

பாமக
கடந்த எம்பி தேர்தலில் திமுகவை முந்திக் கொண்டுவிட்டது அதிமுக.. அதற்கு காரணம், ஆட்சியமைக்க போதுமான பலம் அப்போது அதிமுகவுக்கு தேவையாக இருந்தது.. அதனால் பாமகவின் தயவும் தேவைப்பட்டது. இந்த முறை என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.. ஒருத்தரும் பாமகவை கூட்டணிக்குள் இழுத்தும் போடும் முயற்சியில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை.

தைலாபுரம்
2 அமைச்சர்கள் தைலாபுர தோட்டத்துக்கு போனார்கள்.. கூட்டணியை உறுதி செய்ய சென்ற அவர்களிடம், 3 கண்டிஷன்களை பாமக தரப்பு வைக்க, அந்த அமைச்சர்கள் அதிர்ச்சியுடன் அங்கிருந்து கிளம்பி செல்ல.. அத்துடன் அந்த விவகாரம் அடுத்தக்கட்டத்துக்கு போகாமல் அப்படியே நிற்கிறது.

அமமுக
இப்படிப்பட்ட சூழலில்தான் ஒரு செய்தி கசிந்து வருகிறது.. அதாவது இதுவரை இல்லாத புதுமாதிரியான கூட்டணிக்கு பாமகவிடம் போடப்பட்டுள்ளது.. அப்படி ஒரு நூலை விட்டது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்தான்.. வரப்போகும் தேர்தலில் ஒரு வலுவான கூட்டணியை தினகரன் ரெடி செய்து வருகிறாராம்.. அந்தவகையில்தான், ராமதாஸ் தரப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.. ஆனால் , இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை..

டிடிவி தினகரன்
தினகரன் தன் கோரிக்கையை பாமக தரப்பில் வைத்ததற்கு, எந்தவித உறுதியான தகவலையும் பாமக தரப்பு சொல்லவில்லையாம்.. தேர்தலுக்கு டைம் நிறைய இருப்பதால், யோசித்து சொல்வோம் என்று சொல்லி உள்ளது.. பாமகவுக்கு கூட்டணி வைப்பதானால் திமுக ஆப்ஷனிலேயே கிடையாது.. அதிமுகவிடம் ஏகப்பட்ட விஷயங்களில் முரண்பட்டு நிற்கிறது..

கூட்டணி யாருடன்?
முக்கியமாக முதல்வர் வேட்பாளராக எடப்பாடியாரை ஏற்கவே இல்லை.. ரஜினியும் வரவில்லை.. தனித்து நிற்கவும் பாமக முடிவெடுக்கவில்லை.. இப்படிப்பட்ட சூழலில்தான், நேரம் பார்த்து தினகரன் காய் நகர்த்தி உள்ளார்.. அவரது மூவ் மிகச்சரியாகவே இருந்தாலும், கடைசியில் பாமக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்விதான் வருகிறது!
-
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
அதிமுக முன்னாள் எம்.பி இளவரசன் கட்சியிலிருந்து விலகல்.. எடப்பாடி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! -
GOAT படத்துல Traffic Police மாதிரி பேசிட்டு.. இது சினிமா இல்ல! மக்கள் பணி! அமைச்சரை விளாசிய அதிமுக! -
அதிமுக சிதறி சின்னாபின்னமாகிடுச்சு.. தவெகவில் இணைந்த கையோடு எடப்பாடியை வெளுத்த வெல்லமண்டி நடராஜன்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
சிலுப்பிகிட்டு போன சிவி சண்முகம்.. வேற வேலையைப் பார்க்கப் போன வேலுமணி! அதிமுகவின் ஓயாத பஞ்சாயத்து! -
தவெகவில் இணைந்தவர்களை கைவிட மாட்டோம்.. அதிமுகவினருக்கு மறைமுக சிக்னல் கொடுத்த புஸ்ஸி ஆனந்த்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
ரெண்டு பேருமே பெரிய புள்ளி.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்! ரெடியான சண்முகம்! எடப்பாடிக்கு சிக்கல்! -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications