சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒருவேளை.. அதிமுகவும், தினகரனும் இணைந்தால் என்னாகும்?

Google Oneindia Tamil News

Recommended Video

    அதிமுகவும், தினகரனும் இணைந்தால் என்னாகும்?- வீடியோ

    சென்னை: அத்தனை ஈகோவையும் தூக்கிப் போட்டு விட்டு அதிமுகவும், தினகரனும் இணையும் முடிவுக்கு வந்தால் அது திமுகவுக்கு மிகப் பெரிய சவாலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன. இப்படி ஒரு டாக் சில நாட்களாக ஓடிக் கொண்டிருப்பதையும் புறக்கணிப்பதற்கில்லை.

    அதாவது அதிமுகவின் இரு பிரிவுகளையும் இணைக்க சசிகலா முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பான சிந்தனை மற்றும் செயலாக்கத்தில் அவர் இருப்பதாகவும் கூட பேசிக் கொள்கிறார்கள். சிலரது இருப்பு மட்டுமே சசிகலா - தினகரன் தரப்புக்கு நெருடலாக உள்ளது. மற்றபடி அதிமுகவின் அன்பு இன்னும் சசிகலா - தினகரனுக்கு இருக்கவே செய்கிறது.

    மேலும் சமீப காலமாக வரும் எல்லா வகையான கருத்துக் கணிப்புகள் உள்ளிட்டவற்றிலும் கூட தினகரன் தரப்பு 2வது இடத்தையே பிடித்து வருகிறது. எனவே அதிமுகவுடன் இணைந்தால் அசைக்க முடியாத சக்தியாக வலம் வர முடியும் என்ற எண்ணம் தினகரன் தரப்பிலும், அதிமுகவினர் தரப்பிலும் கூட நிலவி வருகிறதாம்.

    20 தொகுதி இடைத் தேர்தல் நடந்தால்.. இந்த 3 கட்சிகளுக்கும் லாபம் கிடைக்குமாம்! #survey 20 தொகுதி இடைத் தேர்தல் நடந்தால்.. இந்த 3 கட்சிகளுக்கும் லாபம் கிடைக்குமாம்! #survey

    என்ன நடக்கப் போகிறது

    என்ன நடக்கப் போகிறது

    அதிமுக வட்டாரத் தகவல்கள் சில கூறுகையில், அதிமுகவுடன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை இணைக்க ஒரு தரப்பு தீவிரமாக முயன்று வருகிறதாம். அது சசிகலாவா அல்லது வேறு யாருமா என்று தெரியவில்லை. ஆனால் முயற்சி ஆரம்பித்துள்ளதாக சொல்கிறார்கள்.

    இணையலாமே

    இணையலாமே

    அதிமுக தரப்பில் உள்ள ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவருமே சசிகலா தரப்புக்கு ஓகேதான். அவர்களுடன் சசிகலா தரப்புக்கு எந்தப் பிரச்சினையும், மோதலும் இல்லை. பிடிக்காத சிலரை மட்டும் நீக்கி விட்டால் நாம் இணைவதில் சிக்கலே இல்லை என்றும் சசிகலா தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

    இருவரும் இணைந்தால்

    இருவரும் இணைந்தால்

    ஒரு வேளை இரு தரப்பும் இணையும் பட்சத்தில் சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படலாம். தற்போதைக்கு முதல்வர் பொறுப்பில் வேறு ஒருவர் அமர வைக்கப்படலாம். இருவரும் இணைந்து லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தலை சந்திக்கலாம்.

    பாஜகவுடன் கூட்டணி

    பாஜகவுடன் கூட்டணி

    அதிமுகவை இணைத்த பின்னர் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் சாத்தியக் கூறுகளும் அதிகம் உள்ளதாம். இந்தக் கூட்டணியில் மேலும் சிலரை சேர்த்துக் கொண்டு மெகா கூட்டணி போல காட்டிக் கொண்டு தேர்தலை சந்திக்கும் வாய்ப்பும் உள்ளதாக அந்த சோர்ஸ் அடித்துக் கூறுகிறது.

    இப்படியும் நடக்குமா

    இப்படியும் நடக்குமா

    அதிமுக, திமுகவையே இணைக்க ஒரு காலத்தில் முயற்சிகள் நடந்தன. எனவே அதிமுகவின் இரு பிரிவை இணைக்கும் முயற்சிகளை புறக்கணிக்க முடியாது. இது உண்மையாகவும் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். ஆனால் இப்படி ஒன்று நடந்தால் அது திமுகவுக்கு பாதகமாகப் போக வாய்ப்புகள் உள்ளன. எனவே திமுக தரப்பு எந்த விஷயத்திலும் அலட்சியமாக இல்லாமல் சுதாரிப்பாக இருக்க வேண்டியது முக்கியம்.

    சரி, ரஜினி?

    சரி, ரஜினி?

    இப்படி அதிமுக இணைந்து புதுக் கூட்டணி அமைத்தால் அதில் ரஜினியின் பங்கு என்னாவாக இருக்கும் என்பது தெரியவில்லை. இது உண்மையிலேயே நடந்தால் நிச்சயம் ரஜினி தலைமையை ஏற்க சசிகலாவும் சரி, தினகரனும் சரி முன்வர மாட்டார்கள் என்பது உறுதி. எனவே ரஜினியின் பங்கு இப்போதைக்கு புரியாமலேயே உள்ளது.

    English summary
    Sources says there are chances for the merger of both ADMK and Dinakaran's AMMK.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X