அன்பில் மகேஷ்க்கு நாளை ஜாமீன்? தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்திற்கான லஞ்ச வழக்கில் சரவணன் சரண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தர லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கைதாகி முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் மிக முக்கிய நபராக இருக்கும் சரவணன் என்பவர் தலைமறைவாக இருந்ததால் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் தான் இன்று திடீரென்று சரவணன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

முந்தைய திமுக ஆட்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ். இவர் லஞ்ச புகாரில் சிக்கி கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Anbil Mahesh

முந்தைய திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடி முதல் ரூ.400 கோடி வரை லஞ்சம் பெறப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் கேஷ், தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி அரசக்குமார், முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார், முத்துக்குமாரின் கார் டிரைவர் சரவணன் உள்பட இன்னும் சிலர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன்பிறகு அடுத்தடுத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அன்பில் மகேஷ், அரசக்குமார் கைதான நிலையில் முத்துக்குமார் சரணடைந்தார். அவரை தொடர்ந்து இந்த வழக்கில் 6-வது நபராக குற்றம்சாட்டப்பட்டுள்ள சரவணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த சரவணன் முன்னாள் எம்எல்ஏ முத்துகுமாரின் கார் டிரைவர் ஆவார். தனியார் பள்ளிகள் சங்க நிர்வாகி அரசக்குமார், முத்துக்குமார் ஆகியோர் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி வசூலிக்கும் பணத்தை சரவணன் தான் அன்பில் மகேஷ்க்கு கைமாற்றியதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் தான் வழக்கில் தேடப்பட்டு வந்த சரவணன் இன்று சரணடைந்தார். சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரவணன் சரணடைந்தார். இதையடுத்து அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி எல்எஸ் சத்தியமூர்த்தி உத்தரவிட்டார்.

சரவணன் சரணடைந்து இருப்பது அன்பில் மகேஷ்க்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அன்பில் மகேஷ் ஜாமீன் கோரிய நிலையில் சரவணன் தலைமறைவாக உள்ளார். இதனால் அன்பில் மகேஷ்க்கு ஜாமீன் வழங்க கூடாது என்று போலீஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. அதனை ஏற்று சிறப்பு நீதிமன்றம் நேற்று அன்பில் மகேஷ்க்கு ஜாமீன் மறுத்தது. அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதனால் மீண்டும் அன்பில் மகேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் தான் இன்று அன்பில் மகேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி நாளை வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. தற்போது சரவணன் சரணடைந்துள்ளதால் நாளைய வழக்கு விசாரணையில் அன்பில் மகேஷ்க்கு ஜாமீன் கிடைக்குமா? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+