டெல்லிக்கு வாங்க.. அண்ணாமலைக்கு அழைப்பு? அமைச்சராக்க திட்டம்.. தமிழக தலைவராகும் "பழைய" கை?
சென்னை: பாஜக தலைவர் அண்ணாமலையை ராஜ்ய சபா வழியாக அமைச்சராக்கும் எண்ணம் தேசிய பாஜக தலைமைக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை 118068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டுள்ளார். திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 568200 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக அண்ணாமலை 450132 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக சிங்கை ராமசந்திரன் 236490 வாக்குகள் பெற்றுள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதி இந்தியாவில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதி. இந்திய அளவில் கூகுள் தொடங்கி டிவி வரை பல இடங்களில் இந்த தொகுதி பற்றி தேடப்பட்டது. ஊடகங்களில் இருக்கும் எஸ்இஓ இன்ஜினியர்களுக்கு தெரியும்.. இந்த தொகுதி எவ்வளவு முக்கியமாக இருந்தது என்று. அதற்கு காரணம் அண்ணாமலை.
அண்ணாமலை தமிழ்நாட்டை தாண்டி தனக்கு என்று உருவாக்கிய பிம்பம் பல்வால் தேவனுக்கு பின் இருக்கும் பாகுபலி சிலை போன்றது. தேசிய அளவில் தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்துவிட்டேன் என்று அண்ணாமலை சென்ற இடங்களில் எல்லாம் சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் அவரின் கோவை தொகுதியிலேயே பாஜக படுதோல்வி அடைந்து உள்ளது,
அண்ணாமலை தலைவர் பதவி: அதேபோல் அண்ணாமலை தலைமைக்கு கீழ் அந்த கட்சியும் சரியாக பணிகளை செய்யவில்லை. அதாவது எதிர்பார்த்த அளவிற்கு கட்சியின் முன்னேற்றம் இல்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலையின் தலைமை பதவி மாற்றப்படலாம் என்கிறார்கள்.
தோல்வி: 2024 லோக்சபா தேர்தலில் பாஜக மிக மோசமாக செயல்பட்ட நிலையில் அந்த கட்சிக்கு எதிராக கடுமையான சில பிரஷர் வைக்கப்பட்டு வருகிறதாம். முக்கியமாக பாஜக தேசிய தலைவர் நட்டா, அமித் ஷா ஆகியோருக்கும் கடுமையான பிரஷர் கொடுக்கப்படுகிறதாம்.
அதன்படி பஞ்சாப்பில் பாஜக ஜீரோ எடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில் சரியாக செயல்படவில்லை. தமிழ்நாட்டில் ஜீரோ எடுத்துள்ளது. இதனால் இந்த 3 மாநிலங்களில் பாஜக தோல்வி காரணமாக மாநில தலைவர்களை மாற்றும் எண்ணம் டெல்லி பாஜகவிற்கு உள்ளதாம்.
அண்ணாமலை உட்பட பலருக்கு ராஜினாமா நெருக்கடி கொடுக்கப்படலாம் என்கிறார்கள். இதை மடைமாற்றவே அண்ணாமலை 2026 முதல்வர் என்று பேச தொடங்கிவிட்டார் என்கிறார்கள். இந்த நிலையில்தான் அண்ணாமலை உட்பட பலரின் பதவி காலி ஆகலாம் என்கிறார்கள்.
அதோடு இல்லாமல் ஜேபி நட்டாவின் பதவிக்கு சிக்கல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. பல மாநில தலைவர்கள், தேசிய தலைவர் ஜே பி நட்டா மாற்றப்படலாம். அமித் ஷாவிற்கும் பிரஷர் வரும். அமைச்சர் பொறுப்போடு நிறுத்த வேண்டும், தேர்தல் வியூகங்களை வகுக்க கூடாது என்று பிரஷர் வர உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
சுமுகமாக தீர்வு: இதை எல்லாம் சுமுகமாக தீர்க்க பாஜக தலைவர் அண்ணாமலையை ராஜ்ய சபா வழியாக அமைச்சராக்கும் எண்ணம் தேசிய பாஜக தலைமைக்கு இருப்பதாக கூறப்படுகிறது. வேறு மாநிலங்களில் ராஜ்ய சபா வழியாக இவரை அமைச்சராக்க முடிவு செய்துள்ளார்களாம்.
இவர் அமைச்சர் ஆனால் ஒருவருக்கு ஒரு பதவி முறையில் தலைவர் பதவி பறிக்கப்படும். அதன் மூலம் எல் முருகன் அல்லது தமிழிசை சௌந்தரராஜன் மீண்டும் தலைவர் பதவிக்கு வரலாம் என்று கூறப்படுகிறது. இவர்கள் மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஆக்டிவ் அரசியலுக்கு கொண்டு வர டெல்லி பாஜக யோசிக்கிறதாம்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications