#Exclusive அண்ணாமலை பிளான் 'சறுக்கல்’.. ‘மார்க்’ செய்த டெல்லி தலைமை? பத்திரிகையாளர் ப்ரியன் பளிச்!
அதிமுக - பாஜக இடையே என்னதான் நடக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ப்ரியன்.
சென்னை : பாஜக தலைமையே அண்ணாமலையைக் கழற்றிவிட்டு விடும். அதிமுக கூட்டணியில் இருக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதும், அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்குவதும் பாஜக தேசிய தலைமையின் கையில் தான் இருக்கிறது என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சமீப நாட்களாக, குறிப்பாக ஈரோடு கிழக்கு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. பாஜக நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தபோது அண்ணாமலை காட்டமாகப் பேசினார்.
அதன்பிறகு, பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில், அதிமுக கூட்டணியில் இருந்தால் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் எனப் பேசியிருக்கிறார்.
அதிமுக - பாஜக இடையே என்னதான் நடக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ப்ரியன்.

எப்போதும் லைம்லைட்டில்
மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறுகையில், "அதிமுக - பாஜக இடையே ஒரு நட்புரீதியான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. 2 விஷயங்களை ரொம்ப புத்திசாலித்தனமாக அண்ணாமலை டீல் செய்கிறார். நெகட்டிவோ, பாசிட்டிவோ, செய்திகளில் இடம்பிடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நினைக்கிறார் அண்ணாமலை. அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவரானது முதலே அவர் சொன்ன எந்த விஷயத்தையும் சீரியஸாக ஃபாலோ செய்ததே கிடையாது. அரியலூர் லாவண்யா விவகாரத்தில் மதமாற்றம் என ஒரு அரசியல் செய்தார். ஆனால், எந்த கமிஷனும் அப்படியான தகவலைச் சொல்லவில்லை. அடுத்து ராணுவ வீரர் கொலை விவகாரத்தை கையில் எடுத்தார். இப்படி தொடர்ந்து ஏதாவது ஒருவகையில் அண்ணாமலை 'பாலிடிக்ஸ்' செய்வதைப் பார்த்து வருகிறோம்.

அண்ணாமலை பாலிடிக்ஸ்
ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவராக இருந்துகொண்டு, மற்ற கட்சியினரை தேசப்பற்று இல்லாதவர்கள் எனக் குற்றம்சாட்டும் அண்ணாமலை, உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டபோது, அப்போது பாஜகவில் இருந்த டாக்டர் சரவணனிடம் இதை வைத்து ஏதாவது அரசியல் பண்ண முடியுமா என கேட்கிறார் என்றால், எவ்வளவு கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார் என்பதைப் பார்க்கலாம். இப்போது விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி, பள்ளிகளிடம் பணம் கேட்டு மிரட்டி கைது செய்யப்பட்டிருக்கிறார். அதைப் பற்றியெல்லாம் அண்ணாமலை எதுவும் பேசவில்லை.

திசைதிருப்ப
ஈரோடு கிழக்கு தொகுதியில் அண்ணாமலையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தோல்வி அண்ணாமலைக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் கிடைத்த தோல்விதான். அந்த தோல்வியை திசைதிருப்ப அதிமுக உடன் ஒரு மோதல் நடப்பது போல கட்டமைத்தார். அண்ணாமலை பொறுப்புக்கு வந்தது முதலே ஆடியோ, வீடியோ அரசியலால் தான் கட்சியே ஓடிக்கொண்டிருக்கிறது என அனைவரும் சொல்கிறார்கள். ஒருவர் அண்ணாமலைக்கு உரை எழுதிக் கொடுத்ததாக வீடியோ போட்டு எக்ஸ்போஸ் செய்ததை மறக்கடிக்க ஒரு அரசியலை கையில் எடுக்கிறார்.

நட்டாவிடமே
கூட்டணியை முடிவு செய்யும் இடத்திலேயே இல்லாத அண்ணாமலை திடீரென அதிமுக கூட்டணி இருந்தால் நான் மாநில தலைவர் பதவியில் இருக்கமாட்டேன் எனக் கூறுகிறார். அதற்கு முன்பு தான் ஜேபி நட்டா, அதிமுகவுடன் தான் கூட்டணி அமைக்கிறோம். அவர்களை அட்டாக் செய்ய வேண்டாம் எனக் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அப்போதே தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கலாமே? அண்ணாமலை ராஜினாமா செய்தாலும் பாஜக தலைமை ஏற்றுக்கொள்ளாத அளவுக்கு தவிர்க்க முடியாத தலைவராகவும் அண்ணாமலை இல்லை. கூட்டணி அதிமுகவுடன் தான் என தேசிய தலைமை தீர்மானித்துவிட்டது.

டெல்லி கையில்
பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்த சிடிஆர் நிர்மல் குமார், 2019க்குப் பிறகு பாஜக 20% தான் இருக்கிறது என்கிறார். எனில் 80% கட்சி போய்விட்டது என்று அர்த்தம். அண்ணாமலை பொறுப்புக்கு வந்தபிறகு கட்சி வளரவில்லை என்றால், தலைமையே அவரைக் கழற்றிவிட்டாலும் கழற்றிவிட்டு விடும். அதிமுக கூட்டணியில் இருக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதும், அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்குவதும் பாஜக தேசிய தலைமையின் கையில் தான் இருக்கிறது. அண்ணாமலை இதைப் பற்றிப் பேசுவதெல்லாம் அவசியமற்றது" எனத் தெரிவித்துள்ளார் ப்ரியன்.
-
மிட்நைட்டில் 4%வாக்குப் பதிவு? 'ஆந்திரா' பாணியில் தேர்தல்? எச்சரித்த நிர்மலா கணவர் -
அண்ணாமலைக்கு 'கல்தா'.. எடப்பாடியின் செல்லப்பிள்ளைகளுக்கு 'சீட்' .. பாஜகவின் திடீர் முடிவு.. ஏன்? -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
ஆதரவாளர்களுக்கு சீட்.. அண்ணாமலை வைத்த டிமாண்ட்.. பாஜக வேட்பாளர் பட்டியல் தாமதமாவதன் பின்னணி! -
"அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள்”.. போட்டு உடைத்த திருச்சி சூர்யா! -
சர்ப்ரைஸ் வானதி சீனிவாசன்.. நோஸ் கட் அண்ணாமலை.. 2021 தேர்தல் பாஜக பிளாஷ்பேக் -
இங்க இருக்குற திருவண்ணாமலைக்கு ஏர்போர்ட்.. அந்த பேச்சு பேசின அஸ்வத்தாமன் பெயர் லிஸ்டில் இல்லையே! -
செருப்பு போடாதவர்.. 75 வயதில் முதல்முறை எம்எல்ஏ.. யார் இந்த நாகர்கோவில் பாஜக வேட்பாளர் காந்தி? -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
அண்ணாமலையை "ஓவர்லுக்" செய்ததா டெல்லி? பாஜக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான பெயர்! ஆட்டம் குளோஸா? -
திருநெல்வேலி 35 வருட அடையாளம் சார்.. யார் இந்த நயினார் நாகேந்திரன்.. சாத்தூரில் மாஸ்டர் பிளான் -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்!












Click it and Unblock the Notifications