அயோத்தி ராமர் கோவில் திறப்பால் பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு எகிறுதா? பரபர கருத்துக்கணிப்பு ரிசல்ட்
சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டியது வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பலன் தரும் என அக்கட்சி எதிர்பார்க்கும் நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மக்களின் மனநிலை வேறாக உள்ளது. தந்தி டிவி கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தேர்தல் களம் தகித்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரியைப் பொறுத்தவரை மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. இங்கு தற்போதைய சூழலில் நான்கு முனைப் போட்டி நிலவுவது உறுதியாகியுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி, பாஜக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை பிரதான கட்சிகளாக களத்தில் நிற்கின்றன.

லோக்சபா தேர்தலையொட்டி, மக்கள் யார் பக்கம் என தந்தி டிவி சார்பில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதன் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் உள்ள மக்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் பல்வேறு காரணிகள் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அயோத்தி ராமர் கோவில் அலை தமிழ்நாட்டில் எடுபட்டுள்ளதா என்பதும் இந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களிடையே அயோத்தி ராமர் கோவில் தாக்கம் பற்றிய 2 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
அயோத்தி ராமர் கோவில் திறப்பு, பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கை கொடுக்குமா?
ஆம் - 35%
இல்லை - 59%
கருத்து இல்லை - 6%
அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதால் பாஜகவுக்கு வாக்களிப்பீர்களா (தமிழ்நாடு)
ஆம் - 17%
இல்லை - 71%
கருத்து இல்லை - 12%
அதாவது, தந்தி டிவி எடுத்துள்ள இந்த கருத்துக்கணிப்பில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்காக, பாஜகவுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்பதே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பெரும்பான்மை மக்களின் (71%) மக்களின் சாய்ஸாக இருக்கிறது.
வட மாவட்டங்களில் அயோத்தி ராமர் கோவில் பாஜகவுக்கு பெரியளவில் கை கொடுக்கும் எனக் கூறப்படும் நிலையில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த கருத்துக்கணிப்பின்படி நிலை வேறாக உள்ளது தெரியவருகிறது. எனினும், 17% வாக்காளர்கள் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதால் பாஜகவுக்கு வாக்களிப்போம் எனத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications