பயில்வான் ரங்கநாதனின் "அந்தரங்கம்".. ஓவர் ஆபாசம்.. பிரபல நடிகை ஆதரவு.. பின்னணியில் உள்ள "புள்ளி" யார்

பயில்வான் ரங்கநாதன் விரைவில் கைதாவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளுக்கு நாள் பயில்வான் ரங்கநாதன் மீது புகார்கள் குவிந்தும், வலுத்தும் வரும் நிலையில், அவரது பேச்சுக்கு ஒரு நடிகை ஆதரவு தருவது போல பேசியுள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது.

சினிமா பத்திரிகையாளரும், பல படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன்.. இப்போது எந்த பத்திரிகையிலும் வேலை பார்க்கவும் இல்லை.. சினிமாவில் நடிக்கவும் இல்லை.

இவர் கடந்த சில காலங்களாகவே யூட்யூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வருகிறார்... சினிமா ரிப்போர்ட்டர் என்பதால், நடிகர் - நடிகைகள் சம்பந்தப்பட்ட பேட்டிகளை தந்து கொண்டிருக்கிறார் என்று ஆரம்பத்தில் கருதப்பட்டது..

 அந்தரங்கங்கள்

அந்தரங்கங்கள்

ஆனால், நாளடைவில், அவர்களின் அந்தரங்கங்களை பேச ஆரம்பித்தார் பயில்வான்.. சொந்த துறையை பற்றி, பொதுவெளியில், அநாகரீகமாக, ஆபாசமாக, அந்தரங்கங்களை, வாய்கூசாமல் இவர் பேசுவதை பார்த்து, சினிமா துறை உட்பட பொதுமக்களும் அதிர்ந்து போனார்கள். இப்படித்தான் ராதிகா - விஜய்காந்த் பற்றி பேசி வம்பில் சிக்கி கொண்டார் பயில்வான்.. ஒருநாள் பீச்சில் எதேச்சையாக பயில்வானை சந்தித்த ராதிகா, நடுரோட்டிலேயே சண்டைக்கு போய், பயில்வானை திணறடித்துவிட்ட சம்பவமும் நடந்தது..

சுசித்ரா

சுசித்ரா

கடந்த வாரமும், பாடகி சுசித்ரா போலீஸ்வரை புகாரை கொண்டு போயுள்ளார்.. எனினும், பயில்வான் சொன்ன நடிகை, நடிகைகளை கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒருசிலரை தவிர, அவர்கள் யாருமே பயில்வானை எதிர்க்கவும் இல்லை.. திட்டவும். இல்லை.. கோர்ட், கேஸ் என்று போகவும் இல்லை.. குறைந்தபட்சம் கண்டனம்கூட சொல்லவில்லை. ஆனால் இப்படி பேசுவதற்கு பின்னணியில் யாரோ ஒரு பிரபலம் இருக்கிறார் என்றும், புகார்களில் சொல்லப்பட்டு வருகிறது.

 நடிகை பேட்டி

நடிகை பேட்டி

ஒருவேளை "பயம்" காரணமா? அல்லது இவரை எல்லாம் விமர்சித்து பிரபலமாக்க வேண்டாம் என்ற மனப்பான்மையா அதுவும் தெரியவில்லை... இப்படிப்பட்ட சூழலில், நடிகை ஐஸ்வர்யாவின் பேட்டி சில அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.. இவர் சமீபத்தில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.. அதில் பயில்வானை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது..

ஷூட்டிங்

ஷூட்டிங்

அதற்கு அவர், "அவர் ஒரு ரிப்போர்ட்டர்.. அவர் வேலையைதானே அவர் செய்கிறார்? ரிப்போர்ட்டரின் வேலையே அது தானே.. அவர் என்ன செய்தாலும், அது அவர் கர்மா.. அதேமாதிரி, பொதுவாழ்க்கைக்கு நாம வந்துவிட்டாலே நம்மை பற்றி நல்லதும் பேசுவார்கள், கெட்டதும் பேசுவார்கள்... இப்படித்தான் ஒருமுறை, ஷூட்டிங் ஒன்றிற்கு நான் சென்றிருந்தபோது, திடீரென கூட்டத்தில் இருந்து ஒரு குரல், "ஐஸ்.. வர்றியா" என்று.. நான் ஹீரோயினாக நடித்தபோதே இதையெல்லாம் எதிர்கொண்டுதான் வந்திருக்கிறேன்..

 ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்திற்கு நாமும் வந்துவிட வேண்டும்... அப்போது தான் நிம்மதியாக இருக்க முடியும். இல்லாவிட்டால், மன அழுத்தம் ஏற்பட்டு நாலு தூக்க மாத்திரைகளை முழுங்கி சாகும் நிலை ஏற்பட்டுவிடும்" என்று நடிகை ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார்.. பயில்வான் ரங்கநாதனுக்கு, ஐஸ்வர்யா தன்னுடைய ஆதரவை சொல்கிறார் என்பதைவிட, யதார்த்தத்தை சொல்கிறார் என்றே இதை பலர் எடுத்துக் கொள்கின்றனர்.

கிசுகிசுக்கள்

கிசுகிசுக்கள்

அதற்காக பயில்வான் செய்து கொண்டிருப்பது சரியாகாது.. பத்திரிகையாளர் என்ற முறையிலும் இல்லாமல், சீனியர் நடிகர் என்ற முறையிலும் இல்லாமல், வயதில் பெரியவர் என்ற முறையிலும் இல்லாமல், ஒருவரின் அந்தரங்க விஷயத்தை, அவர்களின் அனுமதி இல்லாமல் பொதுவெளியில் பேசிவருவது பலரையும் தொடர்ந்து அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. அதேபோல இவர் சொல்லும் கிசு கிசு தகவல்களை பெறுவதற்காக, ஏகப்பட்ட யூடியூப் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு இவரை பேட்டி எடுத்து வருகின்றன.. அதற்காக ஒரு கணிசமான தொகையை கொடுக்கவும் தயாராக இருக்கின்றன..

 சென்சார்கள்

சென்சார்கள்

இந்த வீடியோக்களை, மலிவு ரசனைவாதிகள் பார்த்து, பெருமளவு ஆதரவு தருவதே பயில்வானுக்கு பெருத்த பலமாக போய்விட்டது.. "என் சேனலை இத்தனை பேர் பார்க்கிறார்கள்" என்று பயில்வான் கணக்கு சொல்கிறார் என்றால், அவரையும், அந்த யூடியூப் சேனல்களையும் ஊக்குவித்து, ஆதரவு தரும் பொதுமக்கள்தான் முதல் காரணம் என்பதை மறுக்க முடியாது... மலிவு ரசனைவாதிகள் தங்களை திருத்திக் கொள்ளாதவரை, பயில்வானை குறை சொல்லி பிரயோஜனம் இல்லை. அதேபோல, இதுபோன்ற யூடியூப் சேனல்களுக்கும் கட்டுப்பாடுகள், விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது..!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+