சூரியனுக்கு சேதாரமில்லை.. டெல்லி டூ சென்னை ரூட்டில் அதிமுகவில் ஐக்கியமாகும் விஜய்? பயத்தில் திமுக?
சென்னை: அதிமுகதான் நமக்கு பாதுகாப்பு தரக்கூடிய இயக்கம் என்பதை தவெக தலைவர் விஜய் உணர்ந்துள்ளார். எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலையும், எடப்பாடி பழனிசாமியும்தான் நம்மை பாதுகாப்பார்கள் என்பதையும் தாமதமாக புரிந்து கொண்டுள்ளார் விஜய்.. இதனால் டெல்லி வழியாக சென்னை வந்து, அதிமுகவுடன் கூட்டணி வைக்க போகிறார்" என்று ஆரூடம் கூறியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன்.
Makkal Nirubar என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன், "முக்குலத்தோர் சமூகத்துக்காக ஒரு சசிகலா, ஒரு ஓபிஎஸ், ஒரு டிடிவி-க்கு பதிலாக பல சசிகலாக்களையும், டிடிவிக்களையும், ஓபிஎஸ்களையும் உருவாக்கி வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி..

திமுக போடும் கணக்கு
ஆனால், 234 தொகுதிகளில் 2000 ஓட்டுக்களை பிரித்தால்கூட, 5 லட்சம் வாக்குகளை பிரித்துவிட முடியும் என்று திமுக நம்புகிறது.. இதை செயல்படுத்துவதற்கு ஓபிஎஸ், சசிகலா, தினகரனும் தயாராக உள்ளனர். அப்படியிருக்கும்போது இவர்களை எப்படி எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வார்?
அதிமுக ஆதரிக்கக்கூடிய விஜய் தொண்டர்கள், அதிமுகவை எதிர்க்கக்கூடிய டிடிவியை எப்படி ஆதரிப்பார்கள்? பாஜகவும் டிடிவியை கை கழுவிவிட்டது.. 4 சதவீத வாக்குகளை 4 வருடமாக நிரூபிக்கவேயில்லை.. கமலின் நிலைமைதான் டிடிவி தினகரனுக்கும்.. அதிமுக தொண்டர்களால் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி இவர்கள் மூவருமே மறக்கடிக்கப்பட்டு விட்டார்கள். இன்று ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா இவர்கள் மூவருமே இரட்டை இலைக்கு எதிரானவர்கள்..
50 சீட்டுகள்
முதலமைச்சர் நாற்காலி என்று கூவிக்கொண்டிருந்த இப்போது டெல்லி வழியாக சென்னைக்கு அதிமுகவில் ஐக்கியமாகி, 50 சீட்டுகளை பெற்று, அதிகாரத்துக்கு போவதன் மூலம்தான் விஜய்யின் அடுத்தக்கட்ட அரசியல் நகரும்.
சாதாரண சினிமா நடிகராக இருந்த விஜயகாந்த்தை, 29 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்தார். அதுபோல அரசியல் நகர்வுகளை சரியாக நகர்த்த வேண்டுமானால், அதிமுகவில் வந்துதான் ஐக்கியமாக வேண்டும்..
வைகோ, திருமாவளவன், பாமக
அன்று ஜெயலலிதாவுடன் பாமக கூட்டணி வைத்தது, வைகோ கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றார்கள்.. திமுகவுடன் சேர்ந்து விசிக முதல்முறையாக பெறவில்லை.. விசிகவுக்கு இந்த அங்கீகாரம் என்பது, அன்று அதிமுகவில் கூட்டணியில் இருந்ததால்தான்..இப்படி பல தலைவர்களை இரட்டை இலையும் கடந்த காலங்களில் உருவாக்கி வைத்திருக்கிறது. ஆனால், திமுகவோ பல கட்சிகளை காணாமல் செய்துவிட்டது..
எனவே, இதையெல்லாம் விஜய் கருத்தில் கொண்டு, அதிமுகதான் நமக்கு பாதுகாப்பு தரக்கூடிய இயக்கம் என்பதை உணர்ந்துள்ளார். எம்ஜிஆர் உருவாக்கிய இரட்டை இலையும், எடப்பாடியும்தான் நம்மை பாதுகாப்பார்கள் என்பதை தாமதமாக புரிந்து கொண்டுள்ளார் விஜய்..
டெல்லி வழியாக சென்னை
அந்தவகையில் விஜய்யின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கக்கூடிய அதிகாரம் வரப்போகிறது.. யாருமே சொல்லாமலேயே அதிமுக கொடியுடன் விஜய்யுடன் தொண்டர்கள் ஏற்கனவே வர ஆரம்பித்துவிட்டார்கள்.. யதார்த்ததை சரியாக புரிந்து கொண்டுள்ளார்கள் விஜய் ரசிகர்கள்.
ஏற்கனவே சென்னை வழியாக வந்திருக்க வேண்டிய விஜய், இப்போது அரசியல் ஓரளவு புரிந்துகொண்டதால் டெல்லி வழியாக அதிமுகவிடம் அடைக்கலமாகிறார்.. இது காலத்தின் கட்டாயம்.. இது வலுவான கூட்டணி என்பதால், திமுக அதிர்ச்சியில் உறைந்துள்ளது..
காரணம் திமுகவுக்கு 106 பலவீனமான தொகுதிகள் இருப்பதாகவும், அந்த 106 தொகுதிகளிலும் அதிமுக பலமாக இருப்பதாகவும் ரிப்போர்ட் போயுள்ளது.. கடந்த முறை வெறும் மூன்றரை சதவீத வாக்குகளால்தான், அதிமுக ஆட்சியை இழக்க நேரிட்டது.
சூரியனுக்கு சேதாரம்
ஆனால் இப்போது விஜய் கூட்டணி வைப்பதன் மூலம் பெருவாரியாக வெற்றியை அதாவது 200 இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சிக்கும் வர வாய்ப்புள்ளது.. அதனால்தான், அண்ணாமலையை வெளியில் தள்ளி, அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது பாஜக. ஆர்எஸ்எஸ் பிஜேபி, திமுகவை எதிர்க்க வேண்டுமானால் அதிமுக மீது சவாரி செய்தால்தான் முடியும் என்று நம்புகிறது.
எத்தனை டிடிவி வந்தாலும் சரி, எத்தனை ஓபிஎஸ், சசிகலா வந்தாலும் சரி, அதிமுக யாராலும் அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது. சூரியனை பார்த்து யார் குலைத்தாலும், சூரியனுக்கு எந்த சேதாரமும் ஏற்படாது என்பதுதான் கிராமத்து பழமொழி.












Click it and Unblock the Notifications