பாஜக "சர்ஜிக்கல் ஸ்டிரைக்"! அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து நீக்கமா? சீக்ரெட்டை சொன்ன ரங்கராஜ் பாண்டே
சென்னை: எச். ராஜா தலைமையில் குழு அமைந்த போதும் இதேபோல் செய்திகள் வந்தன. இப்படி அடிக்கடி செய்திகள் வருவது வழக்கம் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் அதே செய்திகள் வருகின்றன.தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள் என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் அண்ணாமலையின் மாற்றம் குறித்து பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே அவர் மாற்றப்பட போவதாக பலர் எதிர்பார்க்கிறார்கள். யாராவது டெல்லி சென்றால் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்று பேச்சு வரும். அண்ணாமலை லண்டனுக்கு சென்ற போது இதேபோல் செய்திகள் வந்தன.
எச். ராஜா தலைமையில் குழு அமைந்த போதும் இதேபோல் செய்திகள் வந்தன. இப்படி அடிக்கடி செய்திகள் வருவது வழக்கம் ஆகிவிட்டது. இப்போது மீண்டும் அதே செய்திகள் வருகின்றன.தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். உடனே அண்ணாமலையை மாற்ற போவதாக செய்திகள் வருகின்றன.
ஆனால் அதில் உண்மை இல்லை. ஒரு விஷயம்தான் உண்மை. அது தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் மாற்றம். அவர் மத்திய அமைச்சர் ஆகிவிட்டார். பாஜகவில் ஒரு தலைவருக்கு ஒரு பதவிதான். அதனால் அவர் தலைவராக நீடிக்க மாட்டார். அதுதான் மாற்றம். அது உறுதி. வேறு மாற்றம் இருக்காது. சில மாநிலங்களில் தலைவர் மாற்றம் இருக்கலாம்.
காங்கிரசில் ஒரே குடும்பத்தில் வருவது போல இங்கே வர முடியாது. தமிழ்நாட்டில் பாஜக தலைவர் மாற்றம் இல்லை. அடுத்த 15 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. அப்படி இருக்க புதிய தலைவரை நியமிக்க முடியாது. அப்படியே போட்டாலும் எல்லாம் புரிந்து அவர்கள் நடவடிக்கை எடுக்க வாய்ப்பே இல்லை . அப்படி செய்தால் அது கட்சிக்கு சிக்கலாகும்.
நிர்வாகிகளை புரிந்துகொண்ட தேர்தல் பணிகளை செய்ய வாய்ப்பு இல்லை. இது என் யுகம்தான். அதன்படி பாஜக தலைவர் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இல்லை. அண்ணாமலையை கொண்டு வந்ததே சர்ஜிக்கல் ஸ்டிரைக்தான். பல சீனியர்கள் இருந்த போது அண்ணாமலையை கொண்டு வந்து அவரை சீனியர்களுக்குக்கு துணை தலைவராக்கி.. பின்னர் தலைவராக்கினர். அண்ணாமலைக்கு 2026ம் ஆண்டு வரை அனுமதி கொடுப்பார்கள்.
அண்ணாமலை இன்னும் 3 ஆண்டுகள் தலைவராக இல்லை. அவர்.. எல் முருகனின் தலைவர் பதவியில் பாதி காலத்தை எடுத்துக்கொண்டார். அவர் சுயமாக 3 ஆண்டுகள் தலைவராக இல்லை. அதனால் அவர் கூடுதலாக 2026 சட்டசபை தேர்தல் வரை இருப்பார் என்பதே என் யுகம். . அண்ணாமலையை கொண்டு வந்ததே சர்ஜிக்கல் ஸ்டிரைக்தான். அப்படி இருக்க 2026 சட்டசபை தேர்தலுக்கு முன் அவரை மாற்ற வாய்ப்பே இல்லை.
பொன்னார் ஏற்கனவே தலைவராகிவிட்டார். தமிழிசை அக்காவிற்கு தரலாம். ஆனால் இரண்டு பேருமே ஏற்கனவே தலைவர் பதவியில் இருந்துவிட்டனர். வானதி சீனிவாசன் மட்டுமே மிச்சம் இருக்கிறார். இதனால் அப்படியே மாற்றினாலும் யார் வருவார் என்ற கேள்வி உள்ளது. பாஜகவில் போட்டி உள்ளது. போட்டி நல்லது தான். அதுதான் கட்சி. அப்படித்தான் இருக்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்.. அதுதான் பாஜக, என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே தெரிவித்துள்ளார்.
-
"அண்ணாமலையை விட்ற கூடாது!" புதிய இயக்கத்தில் முதல் ஆளாக இணைந்த கூமாபட்டி தங்கபாண்டி! பின்னணி என்ன? -
அண்ணாமலையை நம்பி ஏமாறாதீங்க! ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வேண்டாம்! நயினார் அட்வைஸ் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
என்னோட 4% வாக்கு வங்கியை 2% மாத்த இன்னொருத்தன் வந்துட்டானா.. அண்ணாமலையால் புலம்பும் சீமான்.. மீம்ஸ்! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
அண்ணாமலை மாயமான்.. ஆர்எஸ்எஸ்-இன் புதிய அவதாரம்.. வீரமணி விமர்சனம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம்












Click it and Unblock the Notifications