இன்னும் 10 நாட்கள்தான்.. கவுண்டவுன் தொடங்கியது.. தமிழக பாஜக தலைவர் மாற்றமா? அப்போ அண்ணாமலை?
சென்னை: இன்னும் 10 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு மாநில தலைவர் யார் என்கிற அறிவிப்பு மேலிடத்திலிருந்து வந்து விடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழக பாஜகவில் மாவட்ட தலைவர்கள், மண்டலத் தலைவர்கள் நியமனம் முடிந்த நிலையில், மாநில தலைவர் மற்றும் மாநில நிர்வாகிகளை நியமிப்பது மட்டுமே பாக்கி இருக்கிறது. மாநில நிர்வாகிகள் குறித்த பட்டியல் கட்சியின் தேசிய தலைமைக்கு கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த பட்டியலில் இடம் பெற்றவர்களை ஆராய்ந்து வருகிறது பாஜக மேலிடம். பட்டியலில் இடம்பெற்றவர்களின் ஒவ்வொருவரைப் பற்றிய பின்னணிகளை தற்போது தமிழக பாஜகவிடம் கேட்டுள்ளதாம்.
அந்த பின்னணிகள் கிடைத்து, அதனை ஆராய்ந்ததும் மாநில நிர்வாகிகளுக்கு ஒப்புதல் கிடைக்குமாம். அந்த ஒப்புதலுடன், மாநில தலைவர் யார்? என்பதையும் முடிவு செய்து அறிவிக்கப்படவிருக்கிறது. அனேகமாக இன்னும் 10 நாட்களுக்குள் தமிழக பாஜகவுக்கு மாநில தலைவர் யார் என்கிற அறிவிப்பு மேலிடத்திலிருந்து வந்து விடும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள் கமலாலய நிர்வாகிகள்.
அண்ணாமலைக்கு எதிரான அதிமுக - பாஜக கூட்டணி பிளான்
ஏற்கனவே தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி பற்றி சில மூத்த தலைவர்கள் அமித் ஷாவிடம் பேசி உள்ளார்களாம். அதாவது அதிமுக - பாஜக கூட்டணி ஏன் முக்கியம். திமுகவை எதிர்க்க ஏன் இந்த கூட்டணி அவசியம் என்றும் பேசி உள்ளார்களாம்.
தமிழ்நாட்டில் நாம் தமிழர், விஜய், அதிமுக, பாஜக என்று திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறுகின்றன. அப்படி சிதறினால் திமுகவை வீழ்த்தவே முடியாது. மனஸ்தாபங்களை களைந்து கூட்டணியை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் அமித் ஷாவிற்கு மெசேஜ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. இதை பற்றி ஆலோசிக்கலாம் என்று அமித் ஷாவும் உறுதி அளித்துள்ளாராம். இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலையின் பதவி குறித்த பேச்சுக்கள் கவனம் பெற்று வருகின்றன.
ஏனென்றால் பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்பவர். அதிமுக உடன் அவ்வப்போது நட்பாக இருந்தாலும் கூட.. எடப்பாடி பழனிசாமியிடம் அவ்வளவு நட்பாக இல்லை. எடப்பாடிக்கும் - அண்ணாமலைக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் உள்ளன. இப்படி பல கருத்து வேறுபாடுகள் காரணமாக அதிமுக - பாஜக கூட்டணிக்கு அண்ணாமலை இடைஞ்சலாக இருக்கலாம்.
அண்ணாமலைக்கு சாதகமான விஷயம்
இப்படிப்பட்ட நிலையில்தான் அண்ணாமலை மாற்றப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். அண்ணாமலை மாநில தலைவராக பதவி ஏற்ற காலத்தில் இருந்தே அவர் மாற்றப்பட போவதாக பலர் எதிர்பார்க்கிறார்கள். யாராவது டெல்லி சென்றால் அண்ணாமலை மாற்றப்படுகிறார் என்று பேச்சு வரும். அண்ணாமலை லண்டனுக்கு சென்ற போது இதேபோல் செய்திகள் வந்தன.
எச். ராஜா தலைமையில் குழு அமைந்த போதும் இதேபோல் செய்திகள் வந்தன. இப்போதும் தமிழக பாஜகவின் மாநில தலைவர் தேர்தல் நடக்க போவதாக சொல்கிறார்கள். உடனே அண்ணாமலையை மாற்ற போவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் உண்மையில் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அண்ணாமலையை மாற்ற வாய்ப்பு குறைவு. ஏனென்றால் அவரை வைத்தே கட்சி திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன. ஒரு வருடத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு அவரை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளன.












Click it and Unblock the Notifications