50 தொகுதிகளில் பாஜக போட்டியா..? நயினார் நாகேந்திரன் வெளியிட்ட பட்டியலால் பரபரத்த அதிமுக கூட்டணி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக சார்பில், 50 சட்டசபை தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுகள் நடந்து வரும் சூழலில் பாஜக வெளியிட்டுள்ள இந்த பட்டியல் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த 50 தொகுதிகளில் தான் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

Will BJP Contest 50 Seats Tour Coordinator List Stirs AIADMK Alliance

அதிமுக கூட்டணி

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக (அன்புமணி), அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 23 ஆம் தேதி மதுராந்தகத்தில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பரப்புரை மேற்கொண்டார்.

பாஜக பொறுப்பாளர்கள்

இந்நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு பாஜக சார்பில் தொடர் சுற்றுப்பயணம் செய்வதற்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதில் இரண்டு முதல் ஏழு சட்டசபை தொகுதிகள் ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் சட்டப்பேரவை தொகுதிகளின் பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகளுக்கு பாஜகவின் சுற்றுப்பயண பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய தொகுதிகளுக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சுற்றுப்பயண பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

50 தொகுதிகள்

தமிழிசை சவுந்தரராஜனுக்கு, மயிலாப்பூர், கும்மிடிப்பூண்டி, நாங்குநேரி, பொள்ளாச்சி, கிள்ளியூர் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பழனி, தென்காசி, மேட்டுப்பாளையம், பரமக்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வானதி சீனிவாசனுக்கு திருப்பூர் தெற்கு, குன்னூர், கோயம்புத்தூர் தெற்கு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கேடி ராகவனுக்கு வானூர், பூவிருந்தவல்லி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதுகுளத்தூர், விளவன்கோடு, திருப்பத்தூர் சிவகங்கை, உடுமலைப்பேட்டை ஆகிய தொகுதிகளுக்கு எச்.ராஜா சுற்றுப்பயணம் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். விபி துரைசாமிக்கு எழும்பூர், ராசிபுரம், பரமத்திவேலூர் தொகுதிகளும், பொன் ராதாகிருஷ்ணனுக்கு தென்காசி, பரமக்குடி, மேட்டுப்பாளையம், பழனி ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

50 சீட்களில் பாஜக?

தமிழகத்தில் உள்ள 50 தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளதால் தமிழகத்தில் பாஜக 50 தொகுதிகளில் போட்டியிட போகிறதா என்ற யூகங்கள் எழுந்துள்ளன. பாஜக பொறுப்பாளர்களுக்கு ஒதுக்கி உள்ள இந்த 50 தொகுதிகளில் தான் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிடப் போகிறதா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அதிமுக கூட்டணியில் பாஜக 56 தொகுதிகளை கேட்பதாக முன்பு தகவல்கள் வெளியாகி இருந்தன. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் என்டிஏ கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கும் அதிமுக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து கூறி வருகிறார். அப்படி தனிப்பெரும்பான்மையை பெற வேண்டும் என்றால் சுமார் 150 தொகுதிகளில் அதிமுக போட்டியிட வேண்டும். அப்படி போட்டியிட்டால் தான் 118 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.

கூட்டணியில் கேள்வி

இந்நிலையில், பாஜக 50 தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்துள்ளது என்றால், அந்த 50 தொகுதிகளை பாஜகவுக்கு ஒதுக்கினால் மற்ற கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு சீட்கள் ஒதுக்கப்படும் என்ற ஏள்வி எழுந்துள்ளது. பாஜக இந்த 50 தொகுதிகளை குறிப்பிட்டு சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்துள்ளது அதிமுக கூட்டணிக்குள் பல்வேறு விவாதங்களைக் கிளப்பி விட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+