3வது கூட்டணி அமைக்கிறதா பாஜக? எடப்பாடி - அண்ணாமலை இடையே என்ன மோதல்? நாராயணன் சொன்ன பரபர சீக்ரெட்
சிலர் கூட்டணி வேண்டாம் என்று சொல்லுவார்கள். சிலர் கூட்டணி வேண்டும் என்று சொல்லுவார்கள்.
சென்னை: பாஜக மூன்றாவது கூட்டணி அமைக்குமா நேற்று அதன் துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பாஜக கூட்டத்தில் அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை பேசியதாக கூறப்படுகிறது. அதில், பாஜகவை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதற்கான திட்டம் என்னிடம் உள்ளது. ஆனால் அதை நிறைவேற்ற எனக்கு சுதந்திரம் வேண்டும்.
எனக்கு உரிய சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். அதனால்தான் நான் ஒன்னும் மேனேஜர் இல்லை தலைவர் என்று கூறினேன். தமிழ்நாட்டில் நாம் வளர வேண்டும் என்றால் கூட்டணி வைக்க கூடாது. அதிமுகவை நம்பி இருக்க கூடாது. அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று தேசிய தலைவர் சொன்னால் நான் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.

என்ன சொன்னார்?
கட்சியை எப்படி வளர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை செய்ய சுதந்திரம் வேண்டும் என்று பேசி இருக்கிறாராம். திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. கூட்டணிக்காக இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு யாருக்கும் சலாம் போடமாட்டேன். கட்சியின் மாநிலத் தலைவர் என்ற முறையில் கூட்டணி தொடர்பான முடிவை மே மாதம் அறிவிப்பேன். கூட்டணி பற்றிய முடிவை எடுப்பேன்.. மற்றவர்களிடம் நாம் கைகட்டி நிற்க வேண்டியது இல்லை, திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. தேர்தலின் போது யாருக்கும் சால்வை போட்டும் குனிந்து செல்ல விரும்பவில்லை, என்று அண்ணாமலை கூறி இருக்கிறாராம்.

கூட்டணி
இதனால் அதிமுக பாஜக கூட்டணி முறிந்து புதிய மூன்றாவது கூட்டணி உருவாகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதாவது அதிமுக, திமுக அல்லாத மூன்றாவது கூட்டணியை வேண்டுமானால் பாஜக அமைக்கலாம் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன. அதாவது பாஜக - பாமக - தேமுதிக - ஓபிஎஸ் - அமமுக இணைந்து 3வது அணி அமைக்க சான்ஸ் உள்ளது. பாமக திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்றுவிட்டது. அமமுகவை அதிமுக சேர்த்துக்கொள்ளாது. அதேபோல் தேமுதிகவை அதிமுக சேர்த்துக்கொள்வது கடினம். ஓபிஎஸ் கதையும் அப்படித்தான். அப்படி இருக்க பாஜக பெரும்பாலும் மூன்றாவது கூட்டணி அமைக்கலாம் என்று கூறப்படுகிறது.

பேட்டி
இந்த நிலையியில்தான் பாஜக மூன்றாவது கூட்டணி அமைக்குமா என்பது குறித்து நேற்று அதன் துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், அதிமுக பாஜக கூட்டணி பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் கிடையாது. கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் மட்டுமே செய்யப்படும். அதை பற்றி அப்போது பேசலாம். இப்போதே கூட்டணி பற்றி பேச வேண்டிய அவசியம் கிடையாது. மற்றபடி கட்சி வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும். இப்போது கூட்டணி பற்றி பெரிதாக பேச வேண்டிய அவசியம் கிடையாது. அதை பற்றி இப்போது விவாதிக்க வேண்டாம். ஏன் இப்போது பேசுகிறார்கள் என்று தெரியவில்லை.

என்ன சொன்னார்
சிலர் கூட்டணி வேண்டாம் என்று சொல்லுவார்கள். சிலர் கூட்டணி வேண்டும் என்று சொல்லுவார்கள். நாங்கள் பல விவாதங்களை நடத்துவோம். ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் ஒரு கருத்துக்களை கொண்டு இருக்கலாம். கட்சியை வளர்க்க பலர் தங்கள் கருத்துக்களை சொல்லலாம். ஆனால் இப்போது இறுதி முடிவு எடுக்க வேண்டியது அவசியம் இல்லை. எங்கள் தேசிய தலைமை இதில் என்ன முடிவு எடுக்கிறது என்று பார்ப்போம். கட்சியை வளர்ப்பதற்கு ஏற்ற முடிவை எங்கள் கட்சி எடுக்கும்.

நயினார் நாகேந்திரன்
அதைத்தான் நயினார் நாகேந்திரன் கூறி இருக்கிறார். இப்போது நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைப்போமா இல்லையா என்பதை சொல்ல வேண்டியது இல்லை. நாங்கள் எப்போது முடிவு எடுப்போமோ அப்போது சொல்லுவோம். இப்போது தேர்தல் இல்லை. அதனால் இப்போது கூட்டணி பற்றி பேச முடியாது. இப்போது தேர்தலே இல்லை அதனால் கூட்டணியும் இல்லை. நாங்கள் 3வது அணி அமைக்க போவதாக கூறிக்கொண்டு இருக்கிறார்கள். யூகங்கள் அடிப்படையில் இவர்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம்.

பலப்படுத்த வேண்டும்
நாங்கள் கட்சியை பலப்படுத்த வேலைகளை செய்து கொண்டு இருக்கிறோம். பூத் அளவிலான பணிகளை செய்து கொண்டு இருக்கிறோம். அதில் கவனம் செலுத்துகிறோம். கூட்டணி பற்றி பின்னர் பார்க்கலாம். எடப்பாடியை அண்ணாமலை எங்கும் விமர்சனம் செய்யவில்லை. அதேபோல் அண்ணாமலையை எடப்பாடியும் எங்கும் விமர்சனம் செய்யவில்லை. அப்படி இருக்கும் போது அவர்களுக்கு இடையில் மோதல் இல்லை என்பதே அர்த்தம். அவர்கள் இடையே மோதல் இருப்பதாக கூறுவதே பொய்யான செய்திதான். எடப்பாடி அண்ணாமலை இருவரும் எங்கும் மாறி மாறி விமர்சனம் செய்துகொள்ளவில்லை என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications