3.66% டூ 13%.. தமிழ்நாட்டில் பாஜக வளர்வதாக வரும் கருத்துக் கணிப்புகள் உண்மையா?
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணி 13 சதவிகித வாக்குகளை பெறும் என்று நேற்று வெளியான நியூஸ் 18 கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கணிப்பு மட்டுமின்றி இன்னும் சில கணிப்புகளில் பாஜகவிற்கு கணிசமான வாக்கு வங்கி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கணிப்புகள் உண்மையில் நடக்க சாத்தியம் உள்ளதா? பாஜக இதுவரை பெற்ற வாக்கு வங்கிகள் என்னென்ன என்று ஒரு அலசல் இதோ!
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கருத்து கணிப்புகள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் கட்சியின் நிலை குறித்தும் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.

கணிப்புகள்: 1. 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களுக்கான ஏபிபி சிவோட்டர் கருத்துக் கணிப்புத் தரவுகளின்படி, திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 39 மக்களவைத் தொகுதிகளையும் தமிழ்நாட்டில் கைப்பற்றி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது வாக்குப் பங்கின் அடிப்படையில், 54.7% சதவீதத்துடன், திமுக மீண்டும் தமிழ்நாட்டில் முதலிடம் பிடிக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாறாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 27.8% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது இடம் 10.9% வாக்குகளுடன் NDA க்கு கிடைக்கும், மற்ற கட்சிகள் 6.8% வாக்குகளைப் பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
2. டைம்ஸ் நவ் - மேட்ரைஸ் என்சி சார்பாக கருத்து கணிப்பு மேற்கொள்ளப்பட்டு உள்ளது.. தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39):
- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0
திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக கூட்டணி 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
3. தமிழ்நாட்டில் திமுக 30 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் பாஜக கூட்டணி 5 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதிமுக கூட்டணி 4 இடங்களில் வெற்றிபெறும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திமுக கூட்டணிக்கு 51 வாக்கு சதவிகிதம் கிடைக்கும். பாஜக கூட்டணிக்கு 13 சதவிகித வாக்குகள் கிடைக்கும். அதிமுக கூட்டணிக்கு 17 சதவிகிதம் கிடைக்கும் என்று நியூஸ் 18 கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கணிப்புகள் சொல்வது என்ன? தாமரை மலருமா?: தமிழ்நாட்டில் திமுகதான் பெரும்பான்மை இடங்களை வெல்லும் என்று கணிப்புகள் உறுதி செய்கின்றன. ஆனால் மொத்தத்தில் பார்த்தால், பாஜக தமிழ்நாட்டில் கணிசமான வாக்குகளை பெறும் அல்லது இடங்களை என்றே கூறப்படுகிறது.
முக்கியமாக தந்தி டிவி, நியூஸ் 18 கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 13 சதவிகிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. மற்ற சில கணிப்புகளில் பாஜக கூட்டணிக்கு 20க்கும் அதிகமான வாக்கு சதவிகிதம் கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 2- 5 தொகுதிகளை பாஜக வெல்லும் என்று இதுவரை வெளியான கணிப்புகள் தெரிவிக்கின்றன.
வரலாறு என்ன?: 2019 லோக்சபா தேர்தலை எடுத்துக்கொண்டால் திமுக கூட்டணி 53.15% வாக்கு சதவிகிதம் பெற்றது. இதில்,
திமுக 33.52%
காங்கிரஸ் 12.61%
அதிமுக கூட்டணி 30.57% வாக்கு சதவிகிதம் பெற்றது. இதில்
அதிமுக 19.39%
பாஜக 3.66%
பாமக 5.36%
தேமுதிக 2.16%
நாம் தமிழர் கட்சி 3.90%
சட்டசபை தேர்தல் 2021 வாக்கு சதவிகிதம்:
திமுக 37.70 வாக்கு சதவிகிதம்
காங்கிரஸ் 4.27 வாக்கு சதவிகிதம்
அதிமுக 33.29 வாக்கு சதவிகிதம்
பாமக 3.80 வாக்கு சதவிகிதம்
பாஜக 2.62 வாக்கு சதவிகிதம்
வாக்கு சதவிகிதம் அலசல்; 2019 லோக்சபா தேர்தலில் 3.66% வாக்குகளை மட்டுமே பாஜக அதிமுக கூட்டணியில் இருந்து கொண்டு பெற்றது. ஆனால் இதுதான் பாஜகவின் உண்மையான பலம் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் பாஜக அந்த தேர்தலில் வெறும் 5 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. அதனால் பாஜகவின் உண்மையான பலம் இதை விட அதிகமாக கூட இருக்கலாம்.
இந்த முறை லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இல்லாத பாஜக 25 இடங்களில் போட்டியிடும் என்று அறிவித்துள்ளது. 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிப்போம் என்று இணை அமைச்சர் எல் முருகனும் கூறி உள்ளார்.
அப்படி இருக்க 5 தொகுதிகளுக்கு மூன்றரை சதவிகிதம் எடுத்த பாஜக 25 தொகுதிகளுக்கு 20 சதவிகிதம் எடுத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் அந்த வாதத்தின் அடிப்படையில் வைத்தால் கூட கடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவின் வாக்குகளும் பாஜகவிற்கு வந்தது. அதுவே பாஜகவின் 3.66% சதவிகித வாக்குகளுக்கு காரணம்.
அப்படி இருக்க அதிமுக இல்லாமல் பாஜகவிற்கு அவ்வளவு வாக்கு சதவிகிதம் வருமா , அதிமுக கூட்டணியில் இல்லாமல், அதிக இடங்களில் போட்டியிட்டால் கூட பாஜகவிற்கு அதிக வாக்கு சதவிகிதம் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இப்போதும் கூட கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணிக்குத்தான் 13 சதவிகிதம், 20 சதவிகிதம் வாக்குகள் வழங்கப்படுகிறது. பாஜகவிற்கு தனியாக எவ்வளவு வாக்கு வங்கி என்று கூறப்படவே இல்லை. பாஜக கூட்டணி என்றால் யார்? பாமக, தேமுதிக சேர்த்தது என்றால்.. அந்த கூட்டணியே இன்னும் உறுதியாகவில்லையே.. அப்படி இருக்க இந்த கணிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவின் என்டிஏ என்றுதான் கணிப்புகளில் கூறப்பட்டு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் என்டிஏ என்றால் என்ன, அதில் உள்ள கட்சிகள் என்னென்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படி என்டிஏவே உருவாகாத பட்சத்தில் பாஜக கூட்டணிக்கு 13 - 20 சதவிகித வாக்குகள் சாத்தியமா? கணிப்புகள் உண்மையில் பலிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications