"காக்கா" பிடிச்சாங்க! தமிழ்நாட்டில் பாஜக முதல்வர்? சல்லி சல்லியாக நொறுக்கிய சு.சாமி! இப்படி சொல்றாரே
சென்னை: தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவின் பலம் குறித்து தி இந்து தமிழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
பாஜகவில் ஆக்டிவ் உறுப்பினராக இருந்தால் சுப்பிரமணியன் சாமி கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடியை நேரடியாக விமர்சனம் செய்து வருகிறார். பாஜகவில் இருந்து கொண்டே பாஜகவின் பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக சுப்பிரமணியன் சாமி விமர்சித்து வருகிறார்.

சமீபத்தில் இவர் பிரதமர் மோடி அரசின் ரிப்போர்ட் கார்டை கூட வெளியிட்டார். அதில், நிதி நிலை - தோல்வி, வெளியுறவுத்துறை - தோல்வி, தேசிய பாதுகாப்பு - பீகாஸஸ் தோல்வி, எல்லை பாதுகாப்பு - சீனா ஊடுருவலால் தோல்வி, உள்நாட்டு பாதுகாப்பு - காஷ்மீரில் தோல்வி என்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
அதேபோல் பிரதமர் மோடி வெளிநாடு செல்வதை விமர்சனம் செய்து இருந்த சுப்பிரமணியன் சாமி, மோடியின் இந்திய பயணம் எப்போது என்று கிண்டலாக கேட்டார். இது மட்டுமின்றி பிரதமர் மோடியை ட்விட்டரில் வெளிப்படையாக சுப்பிரமணியன் சாமி சில இடங்களில் விமர்சனம் செய்து இருக்கிறார். பல கொள்கை முடிவுகளை கண்டித்து உள்ளார். முக்கியமாக பெட்ரோல் டீசல் விலை குறித்தும், பொருளாதார நிலை குறித்தும் தொடர்ந்து இவர் விமர்சனங்களை வைத்து வந்தார்.
இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் ஆட்சி அமையுமா என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜகவின் பலம் குறித்து தி இந்து தமிழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் என்னை முதல்வர் வேட்பாளர் ஆக்கினால் பாஜக தலைமையில் ஆட்சி அமையும் என்று கூறினேன். ஆனால் அப்போது தமிழ்நாட்டில் வேறுவிதமான அரசியல் சூழல் நிலவியது. இப்போது வேறு சூழ்நிலை நிலவுகிறது.
தமிழ்நாட்டில் பாஜக பலத்துடன் இருக்கிறதா இல்லையா என்று சொல்ல முடியாது. எனக்கு அதை பற்றி எதுவும் தெரியாது. அண்ணாமலை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.
ஆனால் கட்சியின் நிலைக்கு அண்ணாமலை மட்டும்தான் காரணம் என்று சொல்ல மாட்டேன். தமிழ்நாட்டில் முதலில் பாஜக தனித்து நிற்கட்டும். ஒரு 5 இடங்களில் தனியாக வென்று காட்டட்டும். தமிழ்நாட்டில் பாஜக சார்பாக முதல்வர் அவ்வளவு எளிதாக வந்துவிட முடியாது என்று சுப்பிரமணியன் சாமி தி இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக தன்னை எதிர்க்கட்சி என்று கூறிக்கொண்டு இருக்கும் நிலையில், . ஒரு 5 இடங்களில் தனியாக வென்று காட்டட்டும் என்று சு. சாமி விமர்சனம் செய்துள்ளார்.
அதேபோல் திமுக - பாஜக கூட்டணி சாத்தியம் மற்றும் அதிமுக குறித்த கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்துள்ளார்;.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் தலைமைக்கு வந்த தலைவர்கள் டெல்லியை காக்கா பிடித்தனர். வழக்கில் சிக்காமல் இருக்க இப்படி அவர்கள் காக்கா பிடித்தனர்.

ஆனால் இப்போது அதிமுகவும் ஆட்சியில் இல்லை. அதனால் பாஜகவும் இவர்களை கண்டுகொள்ளவில்லை. சசிகலா என்னிடம் அதிமுகவை ஒன்றிணைக்க உதவி கேட்டால் செய்வேன். ஆனால் அவருக்கு அந்த ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.
தமிழ்நாட்டில் பாஜக - திமுக கூட்டணிக்கு, உறவிற்கு வாய்ப்பு இல்லை. திமுக தலைவர்களே அதை கடுமையாக எதிர்ப்பார்கள். திமுக தலைவர்கள் ஏதாவது தவறு செய்யும் பட்சத்தில் கண்டிப்பாக மத்திய அரசும் இதில் தலையிடும். ஆனால் மத்திய உளவுத் துறையினர் இப்போது வரை ஆளும் திமுக அரசுக்கு எதிராக எந்த விதமான குறைகளையும் அறிக்கையாக அனுப்பவில்லை, என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.
Credit: தி இந்து தமிழ்
-
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்?











Click it and Unblock the Notifications