Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய் நகர்த்தும் அரசியல் காய்கள்.. அதிர்ஷ்டம் பாஜகவுக்கு அடிக்குதா? கூட்டணி கணக்கை திமுக வெல்லுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரப்போகும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உருவாகி வரும் முக்கியமான கேள்வி ஒன்றுதான், விஜய் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறார்? அதிமுகவா, பாஜகவா, அல்லது புதுச்சேரி காங்கிரஸா? இதில் எந்த கட்சியின் கதவை கூட்டணிக்காக விஜய் திறப்பார் என்று இந்த மூன்று கட்சிகளை சுற்றியே தவெகவின் அரசியல் நகர்ந்து கொண்டிருக்கிறது.

முதலில் அதிமுகவை எடுத்து கொண்டால், தமிழகத்தில் இன்னமும் உறுதியான வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சியாகும்.. கிராமப்புறங்களில், மூத்த வாக்காளர்களிடையே அதிமுகவுக்கு ஒரு நிலையான ஆதரவு உள்ளது..

BJP DMK Vijay

திமுகவுக்கு சவால்

விஜயின் இளம் ரசிகர் பட்டாளத்துடன், அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் இணைந்தால், திமுகவுக்கு நிச்சயம் சவால் உருவாகும். ஆனால் "முதல்வர் வேட்பாளர்" யார் என்பதுதான் இங்கே பெரிய சிக்கலாக உள்ளது.. அதிலும், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக விஜய் ஏற்றுக்கொள்வாரா என்பதில் தான் இழுபறியே நீடிக்கிறது.

எனினும், செங்கோட்டையன் போன்ற அதிமுக பின்புலம் கொண்ட தலைவர்கள் தவெகவில் இருப்பது, அதிமுகவுக்கான கூட்டணி கதவை முழுமையாக மூட முடியாத நிலையில் வைத்திருக்கிறது..

பாஜகவுடன் கூட்டணி?

அடுத்ததாக பாஜக வைத்து கொண்டால், தவெகவுக்கு சித்தாந்த ரீதியான எதிரியாகும்... எனினும், அரசியலில் நிரந்தர எதிரி, நிரந்தர நண்பன் இல்லை என்பதும் அதே அளவு உண்மை. பாஜக தேசிய அளவில் ஆளும் கட்சியாகும்.. வளங்கள், அமைப்பு, தேர்தல் இயந்திரம் போன்றவற்றிலும் பாஜக வலிமையானது.

தனித்து நின்று திமுகவை வீழ்த்த முடியாது என்பது விஜய்க்கும் நன்றாக தெரியும்.. அதனால்தான், டெல்லியில் பாஜக தலைவர்களை. தவெக பிரதிநிதிகள் சந்தித்து பேச்சு நடந்ததாம். ஒருவேளை பாஜகவுடன் கூட்டணி வைத்தால்,'மாற்று அரசியல்' இமேஜ் பாதிக்கப்படும் என்ற அச்சம் விஜய்க்கு நிறையவே உள்ளதாம்.

அதனால்தான் "நேரடி கூட்டணி இல்லை என்றாலும், சுமூக உறவு" என்ற சேஃப் ரூட்டில் பயணிக்கலாம் என்பதே விஜய்யின் தற்போதைய கணிப்பாக உள்ளதாம்.

புதுச்சேரி காங்கிரஸ்

மூன்றாவதாக புதுச்சேரி காங்கிரஸ் எடுத்து கொண்டால் இது கொஞ்சம் வித்தியாசமான தேர்வு... தேசிய காங்கிரஸ் கட்சியை நேரடியாக தமிழகத்தில் கூட்டணிக்கு இழுப்பது கடினமான விஷயம்.. எனவே புதுச்சேரியில் உள்ள என்ஆர் காங்கிரஸ், அல்லது காங்கிரசில் இருந்து விலகிய பிரிவுகளை பயன்படுத்தி ஒரு புதிய அரசியல் கணக்கை விஜய் போட முயற்சிப்பதாக தெரிகிறது.

யாருடன் விஜய் கூட்டணி

இதன் பலம் என்னவென்றால், பாஜக, அதிமுக என்ற பழைய அரசியல் சாயலில் சிக்காமல், "மூன்றாவது அணி" என்ற இமேஜை உருவாக்க முடியும். ஆனால் தமிழக அளவில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது தெரியவில்லை.

எனவே, யாருடன் கூட்டணி? புதுச்சேரி காங்கிரஸ்? அதிமுக? பாஜக? எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பதில் உடனடியாக ஒரு பெரிய முடிவை விஜய் எடுப்பார் என்று எதிர்பார்க்க முடியாது... முதலில் திமுக எதிர்ப்பு வாக்குகள் எங்கே செல்கின்றன என்பதை வைத்தே, விஜய்யின் கூட்டணி முடிவு இருக்கும் என்கிறார்கள்.

திமுக வெல்லுமா

அதிமுக தனித்து பலவீனமாக இருந்தால், கூட்டணி வாய்ப்பு திறக்கும்.. பாஜக, அதிமுக இணைப்பு வலுவாகி வந்தால், அதில் ஒரு 'பார்ட்னர்' ஆக விஜய் இணைய வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால் கடைசி வரை தனித்தன்மையை பேணிக்கொண்டு, தேர்தலுக்கு நெருக்கமாக ஒரு அதிரடி கூட்டணி அறிவிப்பும் வரலாம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

ஆக, விஜய் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும், அது தமிழக அரசியல் களத்தில் கடும் அதிர்வை ஏற்படுத்தும் என்பதால்தான், அவர் எடுக்கும் ஒவ்வொரு அடியையும், ஒவ்வொரு சந்திப்பையும் அரசியல் வட்டாரங்கள் மூச்சை பிடித்தபடி கவனித்து வருகின்றன.. முக்கியமாக, விஜய்யின் அரசியல் வியூங்களை முறியடிக்க திமுகவும் தயாராகவே உள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்...!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+