"விலைமாது".. எம்பி பேசற பேச்சா.. திருமாவளவனும் சீண்டினார்.. விடமாட்டோம்.. பாஜக நிர்மல்குமார் ஆவேசம்
திருமாவளவன், ஆ ராசா குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் பாஜக நிர்மல்குமார்
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது, இதுவரை திமுக அரசில் ஒரு சார்ஜ் ஷீட் கூட பதிவு செய்யவில்லையே.. அப்படி பதிவு செய்தால்தானே, யார் மீது என்ன குற்றம் இருக்கிறது என்று தெரியவரும்? இதெல்லாம் வெறும் கண்துடைப்பு என்று தமிழக பாஜக, திமுகவை சரமாரியாக விமர்சித்துள்ளது.
பாஜக தமிழக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் ஒன் இந்தியா தமிழுக்கு ஸ்பெஷல் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
ஆ ராசா பேசிய பேச்சுக்கள், மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது நிறைய ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும்போது, அவரை உள்துறை அமைச்சர் சந்தித்து பேசலாமா?, திமுக ஐடிவிங் மாநில தலைவர் டிஆர்பி ராஜா செயல்பாடுகள் எப்படி உள்ளன? என்றெல்லாம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு நிர்மல்குமார் தந்த பதில்கள்தான் இவை:

வேசி மகன்
"ஆ. ராசா பேசிய பேச்சை நீங்கள் எல்லாரும் கேட்டிருப்பீர்கள்.. எந்த பெண்ணும், எந்த ஒரு சாதாரண மனிதரும் அந்த பேச்சை ஏற்க மாட்டார்கள்.. இதுபோன்ற பேச்சுக்கள் எல்லை மீறும்போது, யாராவது தட்டிக்கேட்டுதான் ஆக வேண்டும்.. ஒன்னுமேயில்லை, ராகுல்காந்தி ஏன் குழந்தையுடன் விளையாடிட்டு இருக்கார் என்று நான் கேட்டதுக்கே நீங்களெல்லாம் ஊரை கூட்டிட்டீங்க.. ஆனால், இவர் பெண்களை பற்றி, அதுவும் வேசி மகன்கள் என்றெல்லாம் பேசி வருகிறார்..

2 000 வருடம்
மனுதர்மம் என்ற புத்தகத்தை 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி எழுதியிருக்காங்க.. ஒரு சில குறிப்பிட்ட கிராமங்களில், அவர்கள் வாழ்வதற்காக ஒருசில சட்டதிட்டங்களை அவர்கள் எழுதிவைத்திருக்கிறார்கள்.. அந்த புத்தகத்தை யாரோ பின்னாளில் மொழிபெயர்த்து உள்ளார்கள்.. அந்த புத்தகத்தில் உள்ளதை யாராவது இப்போது பின்பற்றுகிறோமோ? நாம பின்பற்றுவது நம்முடைய அரசியலமைப்பு சட்டத்தைதானே? எதுக்காக 2 ஆயிரம் வருஷத்துக்கு முன்னாடி இருந்த புத்தகத்தை எடுத்துட்டு வர்றீங்க? கண்டிப்பா ஆ. ராசா மீது வழக்கு போடுவோம்..

அஃபிடவிட்
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி சபாநாயகருக்கு அபிடவிட் தாக்கல் செய்துள்ளோம்.. இதே ஆ.ராசா, கடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் எடப்பாடியின் அம்மாவை பற்றி தவறாக பேசினார்.. அப்போதும் கண்டனங்கள் பதிவு செய்தோம்.. இப்படி கண்டனங்களை சொன்னால்தான், தாங்கள் பேசியது தவறு என்று இவர்களுக்கு கொஞ்சமாவது தெரியவரும்.. ஆளுநரை இதில் இழுக்கிறார்.. சனாதன தர்மம் என்பது வேறு, மனுதர்ம புத்தகம் வேறு.. இரண்டையும் ஆளுநர் குழப்பி கொள்ளவில்லை.. தெளிவாக பேசுகிறார்.

திருமாவளவன்
அந்த மனுதர்ம புத்தகத்தை யாருமே பின்பற்றுவதில்லை என்று பலமுறை நாங்களும் விளக்கம் தந்துவிட்டோம்.. அந்த புத்தகம் வெறும் புத்தகமாகவே மட்டும் இன்னும் உள்ளது.. மதத்தையும், பெண்களையும் கீழ்த்தரமாக பேசி வருகிறார் ராசா. இப்படித்தான் திருமாவளவனும் அன்று பேசி, மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.. நுபுர் ஷர்மா அன்று என்ன சொன்னார்? என் மீது வழக்கு போடுங்கள், நான் பார்த்துக்கறேன் என்றுதானே சொன்னார்? ஆனால் என்ன நடந்தது? நாடு முழுவதும், உலகம் முழுவதும் கண்டனம் எழுந்ததே? அதை மட்டும் ரசித்த மக்கள், ஆ.ராசாவுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்தால் மட்டும் ஏன் கொந்தளிக்கிறார்கள்?

கொச்சை + ஆபாசம்
கண்டனங்கள் வரத்தான் செய்யும்.. அதற்கு ஆ ராசா பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.. சட்டப்படி சந்திக்க வேண்டும்.. முதல்ல இப்படி ஒரு பேச்சு இப்போது தேவையா? அவசியமா? இன்னைக்கு இருக்கிற சூழலில், ஒரு பொறுப்புள்ள எம்பி பதவியில் இருந்து கொண்டு, இப்படியெல்லாம் பேசலாமா? ஒருசில விஷயங்கள் இப்படி இருக்கிறது என்று சுட்டிக்காட்டலாம்.. ஆனால் கொச்சையாகவும், மனம்புண்படுத்தும்படியும் பேசக்கூடாது என்றுதான் சொல்கிறோம்.

சார்ஜ் ஷீட்
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில், விசாரணைக்கு உள்ளாகி உள்ள எடப்பாடி பழனிசாமியை, உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்தித்து பேசியிருப்பதையும் கேள்வி எழுப்புகிறார்கள்.. அவர் எங்களுடைய கூட்டணி கட்சியை சேர்ந்தவர்.. அதனால் சந்தித்துள்ளார்.. பலமுறை இதுபோல் அமித்ஷாவை சந்தித்துள்ளார்.. திமுக ஆட்சிக்கு ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது.. ஏதாவது ஒன்றை இதுவரை விசாரணையில் நிரூபித்துள்ளார்களா? சிபிஐ விசாரணை, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை என்பதெல்லாம் வேறு.. அதற்கும் எடப்பாடி உள்துறை அமைச்சரை சந்தித்ததற்கும் முடிச்சு போட கூடாது.. சார்ஜ் ஷீட் கூட பதிவு செய்யவில்லையே.. சார்ஜ் ஷீட் திமுக தரப்பில் பதிவு செய்தால்தானே, யார் மீது என்ன குற்றம் இருக்கிறது என்று தெரியவரும்?

ஒரிஜினல் ஐடி
திமுக ஐடி விங் மாநில தலைவர் டிஆர்பி செயல்பாடு பற்றி நான் விமர்சனம் செய்ய முடியாது.. அது எனக்கு தேவையும் இல்லை.. ஆனால், நிறைய போலி தகவல்கள் பரப்புகிறார்.. எங்கள் மாநில தலைவரை பற்றியும், எங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பற்றியும் தவறான தகவல்களை பதிவிடுகிறார்.. இவைகளை அவரே புரமோட் செய்கிறார்.. இதற்கு வரும் கமெண்ட்களை, படிக்கவும் முடியாது.. எதுவுமே ஒரிஜினல் ஐடியும் கிடையாது.. எல்லாம் ஃபேக் ஐடிதான்.. அதிலும் பெண்களை கொச்சைப்படுத்தும்படியான கமெண்ட்கள் இருக்கிறது.. இவைகளை எல்லாம் டிஆர்பி ராஜாதான் கண்டிக்க வேண்டும்.. இல்லாவிட்டால், இவர் சொல்லிதான் இப்படியெல்லாம் கமெண்ட்கள் பதிவாகின்றன என்றே மக்கள் எடுத்துக் கொள்வார்கள்" என்றார்.
-
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக?












Click it and Unblock the Notifications