பீஸ் பீஸாகுது ப்ளான்.. "பல்ப்" வாங்கும் பாஜக? விஸ்வரூப அதிமுக.. பதறாத பாமக.. சபாஷ் திமுக.. பலே டீம்
சென்னை: தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக கூட்டணிகள், நாம் தமிழர் கட்சி என நான்கு அணிகளுமே மும்முரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பிரதான கட்சிகள் தீவிர ஓட்டு சேகரிப்பில் உள்ள நிலையில், சுயேட்சைகளும் இந்த முறை அதிகமாகவே களமிறங்கியிருக்கிறார்கள். அந்தந்த கட்சியின் தலைவர்கள், தீவிரமான ஓட்டுவேட்டையையும், பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

பிரச்சாரங்கள்: அதேபோல, நட்சத்திர பேச்சாளர்களும் பிரச்சாரத்தில் களமிறங்கி உள்ளனர்.. மொத்தம் 29 கட்சிகளை சேர்ந்த 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையமும் அனுமதி தந்துள்ளது..
திமுக நட்சத்திர பேச்சாளர்கள் லிஸ்ட்டில், மு.க ஸ்டாலின், உதயநிதி உட்பட மொத்தம் 40 பேர் இடம்பெற்றுள்ளனர். அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் லிஸ்ட்டில் எடப்பாடி பழனிசாமி, தமிழ்மகன் உசேன், ஜெயக்குமார் உட்பட 40 பேர் இடம் பெற்றுள்ளனர். பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் லிஸ்ட்டில், அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி தினகரன், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
லிஸ்ட்: முன்னதாக, தங்கள் கட்சிகளின் சார்பில் பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் லிஸ்ட்டை தேர்தல் ஆணையத்தில் கொடுத்து கட்சிகள் சார்பில் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. அந்தவகையில், அதிமுகவில் பிரச்சாரம் செய்வதற்காக, ஏகப்பட்ட நடிகர், நடிகையரை அக்கட்சியின் தலைமை களம் இறக்கிவிட்டுள்ளது..
குறிப்பாக பிரபல டைரக்டர் உதயகுமார், ரங்கநாதன், அனுமோகன், லியாகத் அலிகான், ஜெயப்பிரகாஷ், அன்பழகன், மனோஜ்குமார், ஷக்தி சிதம்பரம், நடிகர்கள் சிங்கமுத்து, காதல் சுகுமார், ரவிமரியா, அருள்மணி, சரவணன், வையாபுரி, தியாகு, கஞ்சா கருப்பு, சவுந்தரராஜன், சுப்புராஜ், விஜய்கணேஷ், கிங்காங், குண்டுகல்யாணம், சுந்தர்ராஜன் ஆகியோர், பல்வேறு தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய தயாராகி கொண்டிருக்கிறார்களாம்.
நட்சத்திர பட்டாளங்கள்: அதேபோல, கட்சியின் கொள்கை பரப்பு செயலரும், நடிகையுமான விந்தியா, நடிகைகள் கவுதமி, காயத்ரி ரகுராம், எமி, ஜெயதேவி, கலா, பாத்திமா பாபு, பபிதா, ரஜினி நிவேதா, பசி சத்யா பாடலாசிரியர் முத்துலிங்கம் ஆகியோரும் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
பாஜகவை பொறுத்தரை, ராதிகா போன்ற சீனியர்களே களமிறங்கி உள்ளதால், பிரச்சார களங்கள் பரபரக்கிறது.. இதில், குஷ்புவின் பிரச்சாரத்திற்காக அவரது ரசிகர்களும், பாஜக தொண்டர்களும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். ஆனால், இதுவரை குஷ்புவின் பிரச்சாரப் பயணம் குறித்த எந்த விவரமும் வெளியாகவில்லை. அவர் எப்போது பிரச்சாரத்தைத் தொடங்குவார் என்றும் தெரியவில்லை.
தென்சென்னை: தென் சென்னையில் தமிழிசை செளந்தரராஜன், விருதுநகரில் ராதிகா, கோவையில் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு குஷ்பு முக்கியமாக பிரச்சாரம் செய்யக்கூடும் என்கிறார்கள்.. எனவே முக்கிய தொகுதிகளில் பலரும் குஷ்புவைு எதிர்பார்த்து காத்துள்ளனர்.
அதேபோல, பாமகவை பொறுத்தவரை, 10 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதால், தீவிரமான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.. இந்த முறை சௌமியா அன்புமணி களத்தில் குதித்துள்ளது, பாமகவினருக்கு புதிய உற்சாகத்தை தந்து வருகிறது.. அதிலும் தர்மபுரியில் சவுமியாவுக்கான ஆதரவு அபரிமிதமாகவே இருக்கும் என்கிறார்கள்..
சபாஷ்: சவுமியா அன்புமணி போலவே, டைரக்டர் தங்கர்பச்சானும் முதல்முறையாக போட்டியில் குதித்துள்ளார்.. தங்கர்பச்சானுக்கு கடலூர் தொகுதி சொந்த தொகுதியாகும். அதனால், எளிதாகவே வெற்றி பெற்று விடுவார் என்ற நம்பிக்கை பாமகவுக்கு இருக்கிறது.
எனினும், தங்கர் பச்சானுக்கு அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய திரை பிரபலங்கள் சிலரை தங்கர்பச்சான் தரப்பில் அணுகினார்களாம்.. தங்கர்பச்சானுக்காக கடலூர் தொகுதியில் வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் கேட்டார்களாம்.
மறுப்பு: அதற்கு "எங்கள் டைரக்டருக்காக நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறோம். ஆனால் அவர் பாஜக கூட்டணியில் இருப்பது, எங்களுக்கு நெருடலாக இருக்கிறது. அதனால், அவருக்காக நாங்கள் பிரசாரம் செய்வது முடியாது என்று, அந்த நடிகர், நடிகைகள் சொல்லிவிட்டார்களாம்.
இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஆனால், தங்கர்பச்சான் எதற்கும் அசரவில்லை. தன்னுடைய தொகுதி மக்கள் மீது அபரிமிதமான நம்பிக்கையை வைத்திருக்கிறார்..
அதிலும் சோஷியல் மீடியாவில் அரசியல் செய்வதில் நம்பிக்கையில்லாமல், நேரடியாகவே தொகுதி மக்களை சந்தித்து பேசிவருகிறார். மேலும், இளைஞர்களின் ஆதரவையும் அபரிமிதமாகவே தங்கர்பச்சான் பெற்றுள்ளது அவரது கூடுதல் பலமாகும்.
அதிரடி : எனவே, பாமக தொண்டர்களின் ஆதரவுடன் தேர்தல் களத்தில் தீவிரம் காட்டி வருகிறார். எனினும், பாஜகவுடன் கூட்டணி வைத்தது, அந்தந்த கட்சிகளுக்கு அதிருப்திகளை தந்து வருவதாக தினமும் செய்திகள் கசிந்தவாறே உள்ள நிலையில், கடலூர் தகவலும் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில், தமிழக களமே பிரபலங்களின் பிரச்சாரங்களினால் அனலடித்து கொண்டிருக்கிறது.
-
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
இரட்டை இலை சீட் இந்த முறை குறையுது.. கடந்த தேர்தலில் அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிட்டது? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications