Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரஷர் தாங்கல! ஜெயலலிதா வாஜ்பாய்க்கு செஞ்சது தெரியுமா? நாயுடு உருவத்தில் மோடிக்கு வந்த சிக்கல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1999ல் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்ததில் முக்கிய பங்கு ஜெயலலிதாவிற்கு இருந்தது. தற்போது மோடி மைனாரிட்டி அரசை நிறுவும் நிலையில் அந்த நேரத்தில் நடந்த விஷயங்கள் கவனத்திற்கு வந்துள்ளது.

ஜெயலலிதா எங்கள் வீட்டிற்கு வந்தார். பாஜக நிர்வாகிகள் இங்கே இருந்தனர். நாங்கள் எல்லாம் உணவு சாப்பிட்டோம். திமுக ஆட்சியின் கீழ் விசாரிக்கப்படும் வழக்குகளை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி சொன்னார்.

lok sabha election 2024 lok sabha election result 2024 bjp congress 2024 2024 politic

அதன்பின் அவர் தன்னுடைய ஹோட்டலுக்கு போனார். ஆனால் அங்கே திடீரென அரசியல் பூகம்பம் என்று கூறினார். அதோடு நிற்காமல் வாஜ்பாய் அரசுக்கான ஆதரவை வாபஸ் வாங்கினார். அப்போது வாஜ்பாய் சொன்னது.. இந்த ஆட்சியில் நான் பிரதமராக சந்தோசமாக இருந்ததை விட அதிக அழுத்தத்தையே உணர்ந்தேன். நான் பட்ட அழுத்தங்கள் மிக அதிகம் என்று கூறி ஆட்சியை விட்டு விலகினார். அந்த அளவிற்கு ஜெயலலிதா வாஜ்பாய் ஆட்சியை ஆட்டு வித்தார்.

1996ல் வாஜ்பாயின் முதல் அரசு 13 நாட்களும், 1999 இரண்டாவது அரசு 13 மாதங்களும் நீடித்தது. இரண்டு முறையும் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் வாஜ்பாய் அரசு தோற்கடிக்கப்பட்டது. 1996 இல், வாஜ்பாய் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பதவி விலகினார், 1999 நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் போதுமான ஆதரவைப் பெறத் தவறினார். அப்போதுதான் ஜெயலலிதா 1 வாக்குகள் வித்தியாசத்தில் ஆட்சியை கவிழ்த்தார்.

1999ல் பாஜக 182 இடங்களிலும், காங்கிரஸ் 114 இடங்களிலும் வெற்றி பெற்றன. அப்போது ஜெயலலிதா கொடுத்த சப்போர்ட்டில் ஆட்சி அமைத்தார்.

1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி (BJP) கூட்டணி அரசாங்கத்தில் இருந்து அதிமுக வெளியேறியதால், மக்களவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெறத் தவறியது.

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா, சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஆளும் கூட்டணியில் இருந்து ஆதரவை வாபஸ் பெறுவேன், குறிப்பாக மத்திய பாஜக அரசை பதவி நீக்கம் செய்வதாக தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். கடைசியில் அவரின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்பதால் ஆட்சி கலைக்கப்பட்டது.

1999ல் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்ததில் முக்கிய பங்கு ஜெயலலிதாவிற்கு இருந்தது. தற்போது மோடி மைனாரிட்டி அரசை நிறுவும் நிலையில் அந்த நேரத்தில் நடந்த விஷயங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. ஜெயலலிதா வாஜ்பாய்க்கு செய்ததை சந்திரபாபு நாயுடு மோடிக்கு செய்வாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆதரவு: 2024 லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 240 இடங்களில் பாஜக வென்றுள்ளது. பாஜக ஆட்சி அமைக்க என்டிஏவில் உள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், ஆதரவு தேவை. இது போல லோக் ஜனதா கட்சி, ஷிண்டேவின் சிவசேனா கட்சி ஆகியோரின் ஆதரவும் தேவை.

இவர்களின் ஆதரவு எல்லாம் இருந்தால்தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும். இனிமேல் இவர்கள் சொல்வதுதான் சட்டம் என்ற நிலைமை பாஜகவிற்கு ஏற்பட்டு உள்ளது.

பாஜக மெஜாரிட்டி இல்லை: 2024 லோக்சபா தேர்தலில் கிட்டத்தட்ட 292 தொகுதிகளில் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பாஜக தனியாக 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி 229 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் இன்னும் முழுமையான முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.

சந்திரபாபு நாயுடு - நிதிஷ் கிங்: இந்த லோக்சபா தேர்தலில் பாஜகவிற்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் சந்திரபாபு நாயுடு - நிதிஷ் குமார் ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே பாஜக ஆட்சி அமைக்க முடியும்.

பாஜக ஆட்சி அமைக்க பீகாரில் உள்ள நிதிஷ் குமார் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 12 எம்பிக்கள் உள்ளனர். பாஜக ஆட்சி அமைக்க ஆந்திர பிரதேசத்தில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆதரவு தர வேண்டும். அவர்களிடம் 16 எம்பிக்கள் உள்ளனர். இவர்களின் ஆதரவு இன்றி பாஜக ஆட்சி அமைக்க முடியாது.

இப்போது இவர்கள் ஆதரவு கிடைத்த நிலையில் மோடி ஆட்சி அமைக்க உள்ளார். ஆனால் இவர்களின் ஆதரவு எத்தனை காலம் நீடிக்கும், மோடியின் ஆட்சி எத்தனை நாட்கள் நீடிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+