துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட்
சென்னை: நடிகர் விஜய் கட்சி, பிரிக்கும் வாக்குகள் ஆளுங்கட்சியான திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா அல்லது எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கியில் கைவைக்குமா என்ற கேள்வி தற்போதே எழத் தொடங்கியுள்ளது. அதுகுறித்த 2 விதமான கருத்து கணிப்புகள், சோஷியல் மீடியாவின் கவனத்தையும் பெற்று வருகின்றன. இந்த இரண்டு கணிப்புகளுமே தவெக ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்து மாறுபட்ட, அதேசமயம் அதிர்ச்சிகரமான தகவல்களை முன்வைக்கின்றன.
பொதுவாக ஒரு புதிய கட்சி களம் இறங்கும்போது, அது ஏற்கனவே இருக்கும் பெரிய கட்சிகளின் வாக்குகளை கவர்வது இயல்பு என்றாலும், விஜய்யின் வருகையானது, திராவிட கட்சிகளுக்கு பெரும் சவாலாகவே பார்க்கப்படுகிறது.

திமுக அதிமுக
குறிப்பாக, திமுக மற்றும் அதிமுக ஆகிய 2 துருவ அரசியலில் அதிருப்தியில் இருக்கும் இளைஞர்களின் வாக்குகளை விஜய் குறிவைப்பதாக தெரிகிறது. விஜய்க்கு இருக்கும் மிகப்பெரிய பலமே மாநிலம் முழுவதும் பரவி கிடக்கும் அவரது ரசிகர் பட்டாளம்தான். இவர்கள் பெரும்பாலும் முதல்முறை வாக்காளர்களாகவும், அரசியல் மாற்றத்தை விரும்புபவர்களாகவும் இருப்பது, விஜய்க்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட்,
இதுவரை சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்கு சென்று கொண்டிருந்த இளைஞர்களின் வாக்குகள், இப்போது விஜய்யின் பக்கம் திரும்புவதற்கு அதிக சான்ஸ் உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கணிக்கிறார்கள்.. இதனால் 'தம்பிகளின்' வாக்கு வங்கியில், தவெக கைவைக்கும் பட்சத்தில் நாம் தமிழர் கட்சிக்கு அது பின்னடைவாக அமையக்கூடும்.
விஜய் உடைக்கும் ஓட்டு யாருடையது
அதேசமயம் திமுகவின் வாக்கு வங்கியிலும் விஜய் கணிசமான பாதிப்பை ஏற்படுத்துவார் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சியில் அதிருப்தியில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்கள் மற்றும் சிறுபான்மையின வாக்குகளில் ஒரு பகுதியை விஜய் ஈர்க்கக்கூடும். இது ஆளுங்கட்சிக்குத் தேர்தல் சமயத்தில் நெருக்கடியைக் கொடுக்கலாம்.
ஆனால் கடந்த எம்பி தேர்தலில் திமுக கூட்டணிக்குக் கிடைத்த அமோக வெற்றி, சட்டமன்ற தேர்தலிலும் நீடிக்குமா என்பது விஜய்யின் வரக்கூடிய அரசியல் நகர்வுகளை பொறுத்தே அமையும்.. அதாவது விஜய் தனது கொள்கைகளையும், திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் விதத்தை பொறுத்தே அவர் யாருடைய வாக்குகளை பிரிக்கிறார் என்பது இன்னும் தெளிவாகத் தெரியும்.
அதிமுக எடப்பாடி பழனிசாமி
இன்னொருபக்கம் அதிமுகவின் நிலைப்பாடும் கேள்விக்குறியாகவே உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, தனது கோட்டையைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி வரும் நிலையில், விஜய்யின் வருகை அதிமுகவின் வாக்கு சிதறலுக்குக் காரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது.
ஆக, விஜய்யின் தவெக ஒரு மாற்று சக்தியாக உருவெடுத்தால், அது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்பையுமே பாதிக்கும் என்பதே தற்சமய கள நிலவராக உள்ளது..
2 கருத்து கணிப்புகள்
இப்படிப்பட்ட சூழலில், ஏ.என்.எஸ். அமைப்பு இப்போது ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளது.. அதில், தவெக என்பது ஒரு மாய உலகத்தைப் போலவே காட்சியளிக்கிறது. குறிப்பாக நகர்ப்புறங்களில் மட்டும் தவெகவிற்கு ஆங்காங்கே வாக்குகள் உள்ளது. வேளச்சேரி போன்ற பகுதிகளில் விஜய்யின் கட்சிக்கு 18 சதவீத வாக்குகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது.
சென்னை மாநகரில் அதிமுகவின் பாரம்பரிய வாக்குகள் தவெகவை நோக்கி நகரத் தொடங்கியுள்ளன. கோயம்புத்தூர் தொகுதியில் அண்ணாமலை ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்பார், அதிமுகவின் வாக்கு வங்கியை விஜய் கைப்பற்றுவார்" என்று அந்த கணிப்பு கூறுகிறது.
ஜான் பாண்டியன் சொல்வது என்ன
இதற்கு நேர்மாறான கருத்தை தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் முன்வைத்துள்ளார்.. ஒரு சேனலுக்கு ஜான் பாண்டியன் தந்த பேட்டியில்,"விஜய்யின் வருகை சிறுபான்மை வாக்குகளில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். விஜய் ஒரு கிறிஸ்தவர் என்பதால், இத்தனை ஆண்டுகளாக திமுகவிற்குச் சென்று கொண்டிருந்த சிறுபான்மையினரின் வாக்குகள் அப்படியே மடைமாற்றமாகி தவெக பக்கம் செல்லும்.
அதேபோல விசிக மீது அதிருப்தியில் இருப்பவர்களின் வாக்குகளும் தவெகவிற்கு செல்லும். இது ஒட்டுமொத்தமாக திமுக கூட்டணிக்குத்தான் பின்னடைவாக அமையும்.
திமுக எதிர்ப்பு வாக்குகளை இதுவரை நாம் தமிழர் கட்சி அல்லது நோட்டாவிற்குப் போட்டு வந்தவர்கள், இனி தவெகவை நோக்கித் திரும்புவார்கள் என்பதால் அதிமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இருந்தாலும் விஜய் 20 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெறுவார் என்பதை ஏற்க முடியாது" என்று தன்னுடைய கணிப்பை தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட 2 மாறுபட்ட கருத்துக்கணிப்புகளும் விஜய்யின் அரசியல் வருகை தமிழகத்தின் 2 பெரும் திராவிடக் கட்சிகளுக்கும் ஒருசேர சவாலை உருவாக்கியுள்ளதையே உறுதிப்படுத்துகின்றன. அடுத்து என்ன நடக்க போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!
-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர்












Click it and Unblock the Notifications