காதலிக்கு சாக்லேட் கொடுத்து விட்டு.. காதலை சொன்னால் ஓகே ஆகாதாம்.. உண்மையை தெரிஞ்சுக்க இதை படிங்க
சென்னை: பொதுவாக சாக்லேட் கொடுத்து பிரபோஸ் செய்தால் ஓகே ஆகிவிடும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நம் ஊரில் இருக்கும் பிரபல நிறுவனம் கூட இதை வைத்து எடுத்த விளம்பரம் ஹிட் அடித்தது. ஆனால், இது உண்மை தானா என்பது குறித்துப் பார்க்கலாம்.
உலகெங்கும் காதலர் தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தின கொண்டாட்டங்கள் களைகட்டியே வருகிறது. இந்த காதலர் தினத்தன்று பலரும் தாங்கள் விரும்பிய பெண்களிடம் பிரபோஸ் கூடச் செய்வார்கள்.

அப்படி பிரபோஸ் செய்யும் போது கூடவே சாக்லேட்டையும் தருவார்கள். எதற்காக சாக்லேட் தருகிறார்கள். சாக்லேட் தந்துவிட்டு லவ்வை சொன்னால் அது ஓகே ஆகுமா என்பது குறித்துப் பார்க்கலாம்.
சாக்லேட்: இந்த சாக்லேட்டில் பெருமளவு இருப்பது கொக்கோ தான். அனைத்து சாக்லேட்களின் அடிப்படை இந்த கொக்கோ தான்.. மத்திய அமெரிக்க நாடுகளில் விளையும் ஒரு வகை பழத்தின் கொட்டைகளை அரைப்பதன் மூலம் இது நமக்குக் கிடைக்கிறது.. அதை பிராசஸ் செய்து கொக்கோ பட்டர் செய்கிறார்கள். இந்த கொக்கோ விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்குக் கொக்கோ விதைகளை வாங்குவதாகப் புகார் இருப்பது தனிக் கதை.
இதை வைத்துத் தான் சாக்லேட்டை அவர்கள் தயார் செய்கிறார்கள். ஆனாலும், இதன் அளவு குறைவாகவே இருக்கும். பெரும்பாலான சாக்லேட்டை பார்த்தோம் என்றால் அதில் 50% கொழுப்பு, 20% சுகர் தான் இருக்கும். இது தவிரப் பல பொருட்கள் குறைந்த அளவில் மிக்ஸ் செய்து இருப்பார்கள். இதில் மூளையைத் தூண்டும் முக்கியமான விஷங்கள் என்றால் அது பிளாவனாய்டு (flavonoid) மற்றும் தியோப்ரோமின் (theobromine) ஆகிய இரண்டும் தான்.
என்ன பலன்: இதில் பிளாவனாய்டு நமது உடலில் இருக்கும் ரத்த நாளங்கள் வழியாக மூளைக்குச் சென்றடைகிறது. அப்போது அதை மூளை முழுக்க பரவுகிறது. இந்த பிளாவனாய்டு நமது உடலின் கற்றல் மற்றும் ஞாபகசக்தியை மேம்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும், இது நமக்குள் அமைதியான மூடை உருவாக்கும். அடுத்து தியோப்ரோமின்- இது நமது உடலின் மத்திய நரம்பு மண்டலத்தில் நல்ல ஒரு ரோமென்டிக் மூடை ஏற்படுத்தும். இதை வைத்துத் தான் நமக்குக் காதலையும் சாக்லேட்களையும் இணைக்கிறார்கள்.
ஆனால் விஷயம் என்னவென்றால் 100 கிராம் கொக்கோ பவுடரில் வெறும் 0.266 கிராம் தான் பிளாவனாய்டு இருக்கும். மேலும், ஒன்று முதல் 2.5 கிராம் வரை தியோப்ரோமின் இருக்கும். இந்த அளவும் அது பவுடராக இருக்கும் போது தான்.. அதை பிராசஸ் செய்துதான் சாக்லேட் செய்கிறார்கள். எனவே, அதன் அளவு மேலும் குறையும்.. அறிவியல்பூர்வமாக இந்த இரண்டும் மூளையில் காதல் உணர்வை தூண்டை என்றாலும் கூட ஆனால் நாம் சாப்பிடும் சாக்லேட்களில் மிக குறைவாகவே இருக்கும்.
எத்தை சதவிகிதம் இருக்கு: சராசரியாக ஒரு 100 ரூபாய் சாக்லேட்டில் கொக்கோ 15% இருக்கும். அதாவது 100 கிராம் சாக்லேட்டில் அதிகபட்சம் 1.5- 2 கிராம் தான் இந்த இரண்டும் இருக்கும். டார்க் சாக்லேட்களில் கொக்கோ அளவு அதிகமாக இருக்கும் என்றாலும் அதன் அளவு அதிகபட்சமும் 2 கிராம் தான்.. ஆனால் அதில் கசப்பு கலந்த சுவை இருக்கும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, சாக்லேட் மூலம் ரோமெண்டிக் மனநிலையை உருவாக்க வேண்டும் என்றால் நாம் பல நூறு கிராம் சாப்பிட வேண்டும்.
அறிவியல்பூர்வமாக சாக்லேட்களில் ரோமெண்டிக் மனநிலையை உருவாக்கும் வேதியியல் பொருட்கள் இருக்கிறது என்றாலும் கூட அது மிகக் குறைந்த அளவே இருக்கிறது. எனவே, சாக்லேட் கொடுத்துவிட்டு பிரபோஸ் செய்தால் எல்லாம் ஓகே ஆகாது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications