எல்லாம் சரிங்க.. அதிமுக செய்யாததை முதல்வர் ஸ்டாலின் செய்வாரா.. சட்டசபை லைவ் வருமா? செம எதிர்பார்ப்பு
தமிழக சட்டசபை நிகழ்வை நேரடி ஒளிபரப்பு செய்ய கோரிக்கை எழுந்துள்ளது
சென்னை: நாளுக்கு நாள் தமிழக சட்டப்பேரவையில் அரசியல் நாகரீகம் மிளிர்ந்து வரும் நிலையில், அப்படியே நேரடி ஒளிபரப்பு அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றினால் நல்லா இருக்குமே? என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.
இன்றைய நாட்களை போலவே, அன்றைய காலக்கட்டங்களிலும் சட்டசபை நிகழ்வுகள் தமிழக மக்கள் மனதில் பிரதான இடத்தை வகித்தது..
மாநிலத்துக்கு நன்மை பயக்கும் எத்தனையோ விதமான அறிவிப்புகள், திட்டங்களை நிறைவேற்ற செய்யும் "மைய களம்" சட்டமன்றம் என்பதால் அதற்கான நன்மதிப்பு இப்போதுவரை கொஞ்சமும் குறையவே இல்லை..

தர்ணா
மேலும் அனல் பறக்கும் விவாதங்களுடன், கூச்சல் குழப்பங்கள், அமளி, வெளிநடப்பு, தர்ணா, என அரசியல் களத்தை எந்நேரமும் பரபரப்புடன் வைத்து வருவதும் இதே சட்டமன்ற நிகழ்வுகள்தான்.. ஆனாலும், இத்தனை இருந்தபோதிலும், அரசியல் நாகரீகத்தையும், மாண்பையும் நம்மை ஆட்சி செய்தவர்கள் கடைப்பிடித்து வந்துள்ளனர் என்பதையும் மறுக்க முடியாது.

முதல்வர்
10 வருடம் கழித்து, மீண்டும் அப்படி ஒரு அரசியல் நாகரீகம் சட்டசபையில் தழைத்தோங்கி வருவதை தற்போது காண முடிகிறது.. "எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசியபிறகு நீங்கள் பதில் சொல்லுங்கள்" என்று அமைச்சர்களுக்கும் திமுக எம்எல்ஏக்களும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பிக்கும் அளவுக்கு நாகரீகம் பளிச்சிடுகிறது.. எனினும், சட்டசபை நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்தால் பயனுள்ளதாக இருக்குமே என்ற கோரிக்கையும் மெல்ல எழ தொடங்கி உள்ளது.

கருணாநிதி
கடந்த 2001-ம் ஆண்டுதான் சட்டசபைக்குள் கேமராக்கள் என்பதே வந்தன.. இதற்கு கூட ஒரு காரணம் உண்டு.. அந்த சமயத்தில், அதிமுக ஆட்சியில் இருந்தபோதுதான், கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்... அந்த கைது காட்சிகளும் வீடியோவாக வெளிவந்து, நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை உண்டு பண்ணியது.. மேலும், அந்த பிரச்சனையை சட்டசபையிலும் திமுக கிளப்பியது... இதற்கு பிறகுதான் திடீரென ஒருநாள் அதிமுக அரசு, வீடியோ கேமராக்களை கொண்டு வந்து சபையில் வைத்தது.

நடவடிக்கை
இதற்கு அப்போதே திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.. "வெறும் ஆளும் கட்சியின் நடவடிக்கைகள் மட்டுமே பதிவு செய்யப்படுவதற்கு கேமராக்கள் எதற்கு?" என்று கேள்வி கேட்டனர்.. அதற்கு ஜெயலலிதா, "இப்படி கேமராக்கள் இருப்பது உறுப்பினர்களின் பாதுகாப்புக்காகத்தான் என்று பதிலளித்தார்.. அதற்கு பிறகு, திமுக ஆட்சியும் இதே வீடியோ கேமராக்களை சபையில் பயன்படுத்தியது..

நிகழ்வுகள்
இப்படிப்பட்ட நிகழ்வுகளை வீடியோ எடுப்பது அரசின் திரைப்படப் பிரிவுதான்... ஆனாலும், அந்த வீடியோக்களை அப்படியே எல்லா சேனலிலும் ஒளிபரப்புவது இல்லை.. ஏதாவது அன்றைய தினம், பரபரப்பு சம்பவம் நடந்தால் மட்டுமே கொஞ்ச நேரம் காட்சிகளை காட்டுவார்கள்.. எனவேதான், அரசே இதனை நேரடியாக ஒளிபரப்பு செய்தால் நல்லா இருக்குமே? மக்கள் பிரதிநிதிகள் பொதுப்பிரச்சினைகள் மீது நிகழ்த்தும் விவாதங்களை சாமான்யனும் அறிந்து கொள்ள உதவுமே? என்ற கோரிக்கைகளும் மெல்ல எழ தொடங்கின..

அதிமுக
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டுமென கோரி 2012-ல் சென்னை ஹைகோர்ட்டில் பொதுநல வழக்கும் ஒன்று தொடுக்கப்பட்டது.. ஆனால், அதிமுக அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.. ஏதேதோ சாக்கு சொல்லி நிலுவையிலும் அந்த வழக்கை போட்டுவிட்டது.

பட்ஜெட்
அதனால்தான், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வோம் என்று திமுக தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது.. அநேகமாக இந்த முறை கவர்னர் உரையின் முழு நிகழ்வையும் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் அப்படி செய்யவில்லை... ஒருவேளை பட்ஜெட் கூட்டத்தொடரில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதுவரை காணோம்.

கமல்
எனவேதான், இதை வெளிப்படையாகவே மநீம கமல் ட்வீட் போட்டு நேற்று முன்தினம் கேட்டிருந்தார்.. "பட்ஜெட் மீதான விவாதம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மானியக்கோரிக்கை விவாதம் துவங்கப்போகிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படி, சட்டசபை நேரடி ஒளிபரப்பு நாளை முதலாவது துவங்க தமிழக முதல்வர் ஆவன செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

குறிப்புகள்
முதல்வர் ஸ்டாலின், இந்த நேரடி ஒளிபரப்பை கொண்டுவந்தால், எதிர்கால சந்ததியினருக்கு சட்டசபைக் குறிப்புகள் நிச்சயம் உதவும்.. அத்துடன் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று சட்ட சபை என்ற முக்கியத்துவத்தையும் ஆழமாக உணர்த்த முடியும்... வெளிப்படையான அரசு நிர்வாகத்தை மக்களும் விரும்புகின்றனர்.. நாளுக்கு நாள் எத்தனையோ நல்ல அறிவிப்புகளை, மாற்றங்களை செய்து கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு, சட்டமன்றத்தின் நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது என்பதும் பெரிய விஷயமில்லை..

திமுக
அப்படி நிறைவேற்ற செய்தால், அதிமுக செய்ய தவறியதை திமுக செய்து முடித்தது என்ற நற்பெயரும் கிடைக்கும்.. தமிழக சட்டமன்ற வரலாற்றில் திமுகவின் பெயர், மேலும் ஒருமுறை அழுத்தமாக பொறிக்கப்பட வாய்ப்பிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.. தன் மாநில மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா முதல்வர் ஸ்டாலின்?
-
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
சட்டமன்ற தேர்தல்.. புல் ஃபோர்ஸில் இறங்கிய ஸ்டாலின்! முதல் நாளே வேட்பு மனு தாக்கல் -
கொளத்தூரில் ஸ்டாலின்.. எடப்பாடியில் பழனிசாமி! ஜாம்பவான்களை எதிர்க்கும் தவெக வேட்பாளர்கள் யார்? யார்? -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications