சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"முதல் வேலையே இதுதான்.. ஸ்டாலினிடம் இருந்து பறந்த உத்தரவு.. ரெடியான அதிகாரிகள்.. கிலியில் அதிமுக

மாஜி அமைச்சர்கள் மீதான விசாரணை துரிதமாகிறதாக கூறப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: 2 முக்கியமான விஷயங்கள் அரசியல் உலகில் கசிந்து வருகிறது.. இரண்டுமே அதிமுக மாஜிக்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் என்பதால், அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது.

கடந்த முறை அதிமுக ஆட்சியில், திமுகவை அளவுக்கு அதிகமாக விமர்சித்தது ராஜேந்திர பாலாஜிதான்.. எடப்பாடி பழனிசாமிகூட, ஸ்டாலினை இந்த அளவுக்கு திட்டியதில்லை.. விமர்சித்ததும் இல்லை..

ராஜேந்திர பாலாஜி எப்போதெல்லாம் ஸ்டாலினை விமர்சிக்கிறாரோ, அந்த வீடியோக்கள் அத்தனையும் பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டு வைரலாவதுண்டு.. காரணம் அவைகள் அனைத்திலுமே வார்த்தைகளின் எல்லைகள் மீறப்பட்டிருந்தன.

வாழப்பாடி முருகேசன் இறப்பு.. கடுங்கோபத்தில் ஸ்டாலின்.. டிஜிபி திரிபாதி வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை! வாழப்பாடி முருகேசன் இறப்பு.. கடுங்கோபத்தில் ஸ்டாலின்.. டிஜிபி திரிபாதி வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கை!

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

"நீ ஒரு நல்ல ஆம்பளையா இருந்தால் என் ஊருக்கு வா பார்ப்போம்" என்று கீழ்த்தரமாக, அதேசமயம் ஒருமையிலும் இதுவரை யாருமே அரசியலில் சவால் விட்டதில்லை.. அதைவிட கொடுமை, ராஜேந்திர பாலாஜி பேசிய பேச்சுக்களுக்கு இதுவரை அதிமுக தலைமை வருத்தமும் தெரிவிக்கவில்லை.. ஆனால், எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து, ராஜபாளையம் பிரச்சாரத்தில் ஸ்டாலின் வறுத்தெடுத்துவிட்டார்.

வாக்கு

வாக்கு

"ரவுடித்துறை அமைச்சர்.. பபூன் ரவுடி.. அவரை பார்த்தாலே பபூன் ஞாபகம் தான் வருது.. நான் எங்க போனாலும், வேட்பாளர்களை அறிமுகம் செய்து வாக்கு கேப்பேன்.. ஆனால் முதன்முதலாக ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டுப்போடக் கூடாதுன்னு சொல்லி வாக்கு கேக்கறேன்.. ஜெயலலிதா இருந்திருந்தால் இவரெல்லாம் அதிமுகவிலேயே இருந்திருக்க மாட்டார். ஆட்சிக்கு வந்ததும், அவர் மீதுள்ள சொத்துக்குவிப்பு வழக்கை வேகப்படுத்தி, உண்மையை வெளிக் கொண்டுவந்து, அவரை ஜெயிலுக்கு அனுப்புவது தான் முதல் வேலை"..! என்றார்.

பிரச்சனைகள்

பிரச்சனைகள்

எனவே, எப்போது வேண்டுமானாலும் திமுக அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால் தொற்று பிரச்சனை தலைதூக்கிவிடவும், அந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டியதாகிவிட்டது.. இப்போது மெல்ல தொற்று குறைந்து வருகிறது.. அடுத்தடுத்த பிரச்சனைகளை திமுக அரசும் கையில் எடுத்து வருகிறது.. அந்த வகையில், ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கை பாயும் என தெரிகிறது.

ஊழல்கள்

ஊழல்கள்

அதற்கேற்றார்போல, ராஜேந்திர பாலாஜி, மற்றும் அவரது பினாமிகள் ஆவினில் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு ஊழல் செய்துள்ளதாகவும், அதில் ரூ.61 கோடி ஊழலுக்கான ஆதாரங்களை தற்போதுள்ள அமைச்சரிடம் அளித்துள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்... இதுதான் முக்கிய மேட்டராக கிடைத்துள்ளது.

விஜயபாஸ்கர்

விஜயபாஸ்கர்

ஸ்டாலின் பதவியேற்றதுமே, அவரை ஆஹா, ஓஹோன்று புகழ்ந்து தள்ளி பேட்டி தந்தார் ராஜேந்திர பாலாஜி.. ஒன்றும் வேலைக்காகவில்லை.. அது திமுக தலைமையிடமும் எடுபடவில்லை போலும்.. ஊழல் புகார்கள் ரெடியாகி கொண்டிருக்கிறதாம்.. இந்த லிஸ்ட்டில் விஜயபாஸ்கர், வேலுமணி உள்ளிட்ட பலரும் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிகிறது..

கயிறுகள்

கயிறுகள்

மஞ்சள் சட்டை, கை நிறைய கயிறுகள், நெற்றிய நிறைய குங்குமம் என வலம் வரும் ராஜேந்திர பாலாஜி, தன்னை விடுவித்து கொள்ளும் முயற்சியிலும் இறங்கி இருப்பதாக கூடி வருகிறது.. கூடிக் கொண்டே போகும் நெருக்கடியில் இருந்து, ஆதாரப்பூர்வமான தகவல்களை நிரூபித்து வழக்கில் இருந்து மீள்வாரா? அல்லது சிக்குவாரா? தெரியவில்லை.

உத்தரவு

உத்தரவு

இது தொடர்பாக இன்னொரு விஷயமும் கசிந்துள்ளது.. லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள கந்தசாமியிடம், கடந்த ஆட்சியில் நடந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை சேகரிக்கும்படி, அரசு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதாம்.. இதைதவிர, அமைச்சர்களிடமும், அவர்கள் துறைகளில் நடந்த முறைகேடு, ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்து, கந்தசாமியிடம் வழங்கவும், வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுப்பணித்துறை

பொதுப்பணித்துறை

அதேபோல, எடப்பாடி பழனிசாமியிடம் இருந்த நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணி துறையில் நடந்த ஊழல் குறித்த விபரங்களை, தோண்டி எடுக்கும் பணியும் நடந்து வருகிறது... "பாரத் நெட் டெண்டரில்" நடந்த முறைகேடுகள், உணவு தானியங்கள் கொள்முதலில் நடந்த முறைகேடுகள், உள்ளாட்சி துறையில் நடந்துள்ள ஊழல்கள், மீன் வளத்துறையில் "வாக்கி டாக்கி" ஊழல், சுகாதாரத் துறையில் கொரோனா சிகிச்சை மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த ஊழல் போன்றவை குறித்த விபரங்களை சேகரிக்கும் பணி நடந்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.

பட்ஜெட் கூட்டம் முடியட்டும் என்றுதான் இவ்வளவு நாள் காத்திருந்தார்களாம்.. எனவே, இப்போது ஒவ்வொரு துறை வாரியாகவும் நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது..

English summary
Will CM Stalin take action against Ex Minister Rajendra balaji
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X