மதுராந்தகத்திற்கு நாளை மீண்டும் முதல்வர் விஜய் பிரச்சாரம்? மேல்மருவத்தூர் கோயிலிலும் சுவாமி தரிசனம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் தொகுதியில் நாளை மீண்டும் பிரச்சாரம் செய்ய முதல்வர் விஜய் செல்ல போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது போல் நாளை மேல்மருவத்தூர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது.

Maduranthagam

இந்த தேர்தலில் அதிமுக, திமுக, தவெக, மார்க்சிஸ்ட்- கம்யூனிஸ்ட், நாதக ஆகிய 5 முனை போட்டி நிலவுகிறது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்னர், தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதுபோல் நேற்றைய தினம் தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் பிரச்சாரம் செய்தார். அங்கு திமுக- அதிமுக ஆகிய கட்சிகளை விமர்சித்து பிரச்சாரம் செய்திருந்தார்.

இந்த நிலையில் மதுராந்தகத்தில் நாளை மீண்டும் விஜய் பிரச்சாரம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மதுராந்தகத்தில் 40 கி.மீ. தூரத்திற்கு ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருக்கிறாராம். அது போல் வழியில் 15 இடங்களில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறதாம். அங்கு முக்கியமான இடங்களில் பேச போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இதற்காக நாளை மதியம் 2 மணிக்கு மதுராந்தகம் செல்லும் விஜய், வழியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்திற்கு செல்கிறார். அங்கு பராசக்தியை வழிபட்ட பிறகு, பங்காரு அடிகளாரின் நினைவிடத்திற்கு சென்று வழிபாடு நடத்துகிறார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

மதுராந்தகத்தில் கள நிலவரத்தை எடுத்து கொண்டால் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் தாராபுரத்தில்தான் தவெகவுக்கு வெற்றி வாய்ப்பில்லை என்கிறார்கள். இந்த தகவல்கள் எப்படியும் உளவுத் துறை மூலம் விஜய் சென்றிருக்கும். எனினும் மதுராந்தகத்திற்கு மீணடும் செல்வது ஏன் என்பது தெரியவில்லைய

அண்மையில் மதுரையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்க விழாவுக்கு மதுரை சென்ற முதல்வர் விஜய், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+