ரேஷன்தாரர்களுக்கு இனிமேல் "இதுவும்" கிடைக்கும்? அப்போ பாமாயில்? கொப்பரை தேங்காய்? தமிழக அரசு முடிவு?
சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு சலுகையாக, பொருட்கள் விநியோகிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், விவசாயிகள் முக்கிய கோரிக்கை ஒன்றை அரசுக்கு விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயிகள், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கையை வைத்தபடியே உள்ளனர்.. அதற்கேற்றவாறு, ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுவது குறித்த பேச்சு பல மாதங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது..

இதில், முதற்கட்டமாக, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்ட நிலையில், பிறகு மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பிலும் உறுதி தரப்பட்டது.
விவசாயிகள்: இதனிடையே, உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு, விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகள் தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தன.
அதன்படி, தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும், ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்றும், தேங்காய் விவசாயிகளிடம் இருந்தே, தேங்காய்கள் கொள்முதல் செய்து இந்த விநியோகிக்க வேண்டும், கொப்பரைக்கு உரிய விலை வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தன.
என்ன காரணம்: இதற்கெல்லாம் காரணம், கடந்த செப்டம்பர் மாதம் முதல் தேங்காய் விலை சரிவை சந்தித்து வருகிறது.. ஒரு தேங்காய்க்கு ரூபாய் 7 முதல் 8 வரை மட்டுமே கிடைப்பதாக விவசாயிகள் அப்போதே வேதனை தெரிரவித்திருந்தனர். கடந்த 2022ம் ஆண்டு கொப்பரை தேங்காய் ரூபாய் 17 முதல் ரூ.18 வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இப்போது கடும் விலை சரிவை சந்தித்துள்ளது விவசாயிகள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால், தென்னை விவசாயிகள் நஷ்டமடைந்துள்ளனர். மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் விவசாயிகளிடம் ஒரு லட்சத்து10 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 108ரூபாய் 90 காசு வீதம் கொள்முதல் செய்துள்ளது. இதனை வெளி மார்க்கெட்டில் கிலோ 60 ரூபாய்க்கு விற்க உள்ளது.. இதனால் தேங்காய் தேவை குறைந்து விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
கொள்முதல்: எனவே கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, தேங்காய் விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மணிமாதவன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் இதுகுறித்து கலக்கம் தெரிவித்துள்ளார்.
"மாநில தலைமை மூலம் தமிழக அரசிடம் மத்திய அரசு கொள்முதல் செய்துள்ள கொப்பரையை கொள்முதல் செய்து, எண்ணெய் ஆக்கி அதனை ரேஷன்கடைகளில் விற்க வேண்டும். இதனை செய்யாவிட்டால் தென்னை விவசாயிகள் தேங்காய்களுக்கு விலை கிடைக்காமல் இன்னும் விலை வீழ்ச்சியினை சந்திக்கும். இப்போது தேங்காய் 5 முதல் 7 ரூபாய் வரை விற்கிறது. கொப்பரை வெளி மார்க்கெட்டுக்கு வந்தால் மேலும் தேங்காய் விலை சரியும்" என்கிறார்.
எகிறும் எதிர்பார்ப்பு: ஆக, இப்படி நாலாபக்கமிருந்தும் நெருக்கடிகள் வருவதால், ரேஷனில் தேங்காய் எண்ணெய்யை வழங்க, விரைவில் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பப்டுகிறது. ஆனால், தேங்காய் எண்ணெய்யை வழங்கினால், பாமாயிலை நிறுத்திவிடுமா என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications