அச்சாரத்தை போட்டாச்சு? ராகுலிடம் விஜய் அதை சொன்னாரா? அதுவிடுங்க, கரூரில் கே.சி. வேணுகோபால் ஆய்வு
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்வதற்காக, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் இன்று கரூருக்கு வருகை தந்துள்ளார்.. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்பேரில் கேசி வேணுகோபால் இன்று கரூருக்கு வந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கரூரில் வேலுசாமிபுரத்தில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டு நின்றிருந்தது.. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து, பிரதமர் மோடி, ஜனாதிபதி முதல் பல்வேறு மாநில தலைவர்களும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பதிவுகளை வெளியிட்டிருந்தனர்.
ராகுல் காந்தி இரங்கல்
அந்தவகையில் காங்கிரஸ் எம்பியும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தியும் தன்னுடைய இரங்கல் பதிவில், "கரூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
அத்துடன், ராகுல் காந்தி நேற்று முன்தினமே முதல்வர் ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.. அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பதிவிலும் தெரிவித்திருந்தார்.
15 நிமிடங்கள் என்ன பேசினார்கள்
"கரூரில் நடந்துள்ள துயரச் சம்பவம் குறித்து உள்ளார்ந்த அக்கறையுடன் விசாரித்து, சிகிச்சை பெற்று வருவோரின் இன்னுயிர் காக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்தார்" என்று பதிவிட்டிருந்தார்.
நேற்றைய தினம் தவெக தலைவர் விஜய்க்கும் போன் செய்து ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.. இருவரும் சுமார் 15 நிமிடங்கள் போனில் பேசியதாக தெரிகிறது.. கரூரில் என்ன நடந்தது என்று கேட்டறிந்த ராகுல்காந்தி, விஜய்க்கு ஆறுதல் சொல்லி, அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த ராகுல்காந்தி அறிவுறுத்தியதாகவும் தெரிகிறது.
ராகுல் விஜய்க்கு அழுத்தம் தருகிறார்
ஆனால், ராகுல் காந்தி விஜய்யிடம் போனில் பேசியிருப்பது, இரு விதமான விவாதங்களை அரசியல் களத்தில் கிளப்பி விட்டுள்ளது.. அதாவது, தமிழக வெற்றி கழகத்தின் குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போக செய்யும் வகையில், உண்மைகளை தடுப்பதற்கு , நடிகர் விஜய்க்கு அழுத்தம் கொடுக்க ராகுல் காந்தி மறைமுக முயற்சி எடுத்து வருவதாக பாஜக குற்றம் சாட்டி உள்ளது..
விஜய்க்கு அழுத்தம் கொடுக்க ராகுல் காந்தி மறைமுக முயற்சி எடுத்து வருவதை தமிழக பாஜக விரைவில் அம்பலப்படுத்தும் என்றும் தன்னுடைய அறிக்கை மூலம் பாஜக தெரிவித்துள்ளது.
ராகுல் - விஜய் நட்பு
மற்றொருபுறம், அரசியல் ரீதியான விஷயங்களையும் ராகுல்-விஜய் இருவரும் பேசியதாக சொல்கிறார்கள்.. அதாவது, கரூர் சம்பவம் குறித்து ராகுல் கேட்டறிந்ததுமே, தான் மேற்கொள்ளவிருக்கும் பிரச்சார திட்டங்கள் குறித்து ராகுலிடம் விஜய் சொன்னதுடன், தன்னுடைய பிரச்சாரத்துக்கும், அரசியல் ரீதியிலான நிகழ்வுகளுக்கும் இடைஞ்சல்களை ஏற்படுத்துகிறார்கள் என்றும் கூறினாராம்.
கூட்டணி அச்சாரம்?
விஜய் இப்படி புலம்பியபோதும், ராகுல் அதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை என்றாலும், விஜய் சொன்ன அனைத்து விஷயங்களையும் நட்புடனும், அக்கறையுடனும் கேட்டுக் கொண்டாராம் ராகுல்..
விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் என்று ராகுலிடம், தமிழக காங்கிரஸின் சில தலைவர்கள் ஏற்கனவே வலியுறுத்தி வரும் நிலையில், விஜய்யுடன் ராகுல் போனில் பேசியிருப்பது, ஒருவேளை கூட்டணிக்கான அச்சாரமா? என்றும் கேட்டு வருகிறார்கள்.
கேசி வேணுகோபால் இன்று வருகை
இப்படிப்பட்ட சூழலில்தான், கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்ல, அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் இன்று கரூருக்கு வந்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்பேரில் கேசி வேணுகோபால் கரூருக்கு வந்திருக்கிறார்.
இந்த கரூர் பயணத்தின்போது, கேசி வேணுகோபாலுடன் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ்குமார் உடன் செல்வார்கள் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டது.. தற்போது வேலுச்சாமிபுரத்தில் கேசி வேணுகோபாலுடன், ஆய்வு செய்தபோது, செல்வப்பெருந்ததகை, ஜோதிமணி விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் ஆகியோர் உடனிருந்து வருகிறார்கள்.
-
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்










Click it and Unblock the Notifications