Vaiko vs EVKS: என்னது ஈரோடு மதிமுகவுக்கா.. நோ எனக்குத்தான்.. மல்லுக்கட்டும் ஈவிகேஎஸ் இளங்கோவன்
Recommended Video

-கோயா
சென்னை: திமுக கூட்டணியில் ஈரோடு யாருக்கு என்பதில் புதிய குழப்பம் ஏற்படும் போலத் தெரிகிறது. காரணம், அந்தத் தொகுதியை 3 கட்சிகள் குறி வைத்து களம் குதித்துள்ளன.
திராவிடக் கட்சிகளுக்கு நெருக்கமானது ஈரோடு. இங்கு போட்டியிடுவதையும், வெற்றி பெறுவதையும் ஒரு ஆசிர்வாதமாகவே வேட்பாளர்கள் கருதுவார்கள். காரணம், பெரியார் பிறந்த மண் என்பதால்.
இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் ஈரோடுக்கு கடும் போட்டி கிளம்பியுள்ளதாம். இதனால் ஈரோடு யாருக்குப் போகும் என்பதில் சஸ்பென்ஸ் ஏற்பட்டுள்ளது.

2 கட்சிகள் குறி
ஈரோட்டுக்கு மதிமுக மற்றும் காங்கிரஸ் ஆகியவை குறி வைத்துள்ளன. இரண்டுமே எங்களுக்கு ஈரோடு கண்டிப்பாக வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளனவாம். அதிலும் காங்கிரஸ் கட்சி இந்த முறை அடித்துக் கேட்டுள்ளதாம். கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என்று.

விவாதம்
நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலை அறிவாலயத்தில் அளித்து விட்டதாம். அதில் ஈரோடு தொகுதியை காங்கிரசும், மதிமுகவும் கேட்பதால் யாருக்கு கொடுப்பது என விவாதம் நடக்கிறதாம் சித்தரஞ்சன் சாலையில்.

மதிமுக கணேசமூர்த்தி
மதிமுக உருவானது முதல் இப்போது வரை வைகோவுக்கு பக்கபலமாக இருப்பவர் கணேசமூர்த்தி. அவருக்காக ஈரோடு தொகுதியை பெற்றுக்கொடுப்பதில் வைகோ உறுதியாக உள்ளாராம். கணேசமூர்த்தி எத்தனையோ சோதனைக் காலங்களில் வைகோவுடன் பயணித்து தற்போதும் அந்தப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இப்படி இருப்பவரை கவுரவிக்க வேண்டும் என வைகோ பிரயாசைபடுகிறார்.

இளங்கோவனும் பிடிவாதம்
அதேவேளையில் காங்கிரஸ் தரப்பிலும் ஈரோடு தொகுதி வேண்டும் என அழுத்தம் தரப்படுகிறதாம். ஏற்கனவே அந்த தொகுதியில் போட்டியிட்டு மத்திய இணை அமைச்சராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இதனால் ஈரோடு தொகுதியை விட்டுக்கொடுப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறாராம் அவர்.

தலையைப் பிய்த்துக் கொள்ளும் திமுக
இதனால் யாருக்கு ஈரோட்டை கொடுக்கலாம் என தலையை பிய்த்து கொள்கிறதாம் திமுக. போட்டி அதிகம் இருப்பதாலோ என்னவோ தெரியவில்லை, நேற்று திருச்சியில் பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ்., எடப்பாடி கொலையாளி எனக் கூறி திமுகவின் குட்புக்கில் இடம்பெறும் முயற்சியை தொடங்கியிருக்கிறார். பந்து இப்போது ஸ்டாலின் வசம் வந்துள்ளது. அவர் யார் பக்கம் அதை உருட்டி விடப் போகிறார்.. அல்லது அவரே எடுத்து விளையாடப் போகிறாரா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications