பொறுங்க.. அதை முதல்வரே சொல்வார்.. அன்று உறுதி தந்த அன்பில் மகேஷ்.. இன்று மெகா அறிவிப்பு வெளியாகுமா?
பள்ளிக்கல்வி துறை சம்பந்தமான முக்கிய அறிவிப்புகள் இன்று வெளியாகும் என தெரிகிறது
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற்றுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ், இன்றைய தினம் புது அறிவிப்புகளை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. பட்ஜெட்டில் அதிக நிதி பள்ளிக்கல்வித்துறைக்குதான் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான எதிர்பார்ப்பும் எகிறி வருகிறது.
அன்பில் மகேஷ்.. திமுகவின் முக்கிய தூணான அன்பில் தர்மலிங்கத்தின் பேரன்.. அன்பில் பொய்யாமொழியின் மகன்.. இளைஞரணி செயலாளராக உதயநிதி தேர்வாகும் முன்பே, இளைஞரணியில் பொறுப்பு வகித்து வந்தவர் மகேஷ்.
கூடுதலாக, உதயநிதி ரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராகவும் இருந்தார். உதயநிதியை இளைஞரணி பொறுப்புக்குக் கொண்டுவருவதற்கு, மாவட்டச் செயலாளர்களிடம் கடிதம் வாங்கியதில் இவரது பங்கு அளப்பரியது... முக. ஸ்டாலின் வீட்டிலேயே வளர்ந்ததில், உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமான நண்பராக மாறியதில் வியப்பேதும் இல்லை.

ஸ்டாலின்
என்னதான் வாரிசுள் என்று இவர்கள் கருதப்பட்டாலும், சற்றேறக்குறைய ஸ்டாலினின் போராட்டக் காலத்தையே வயதாகக்கொண்ட இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும், அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் தங்கள் சுறுசுறுப்பு மற்றும் தீவிரமான களப்பணிகளால் திமுகவின் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக உருமாறி கொண்டிருக்கிறார்கள்.

அன்பில்
கடந்த வாரம், உதயநிதி ஸ்டாலின், பேரவையில் தன்னுடைய முதல் உரையாற்றும்போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர் காலத்தில் இருந்த அன்பில் தர்மலிங்கம் தாத்தா, அன்பில் பொய்யாமொழி மாமா, அவருக்கு பிறகு, இன்று என்னுடைய நண்பனாக, தேர்தல் பணி, கழக பணி என்று தோளோடு தோள் நிற்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டுதான் பேச்சை தொடங்கினார்.. அந்த அளவுக்கு அந்த குடும்பத்தினர் மீது நெருக்கத்தை தக்க வைத்து கொண்டிருப்பவர்.

பொறுப்பு
பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பொறுப்பேற்ற நேரம் 2 விதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது.. ஒன்று, கொரோனா காலத்தை முன்னிட்டு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.. மற்றொன்று, எதிர்க்கட்சிகளால் பூதாகரமாக்கப்பட்டு, விவகாரமாக்கப்பட்ட நீட் விவகாரம்..!

அன்பில் மகேஷ்
தற்போது தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதையொட்டி, செப்டம்பர் 1-முதல் பள்ளிகள் திறக்க முடிவாகி உள்ளதாகவும், அதுவும் சுழற்சி முறையில் நடக்க ஏற்பாடாகி உள்ளதாகவும் தெரிகிறது.. இதற்காக அன்பில் மகேஷ் எடுத்து கொண்ட முயற்சிகளும், கல்வி அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைகளும், மாவட்டங்களில் நடத்திய நேரடி ஆய்வுகளும் அதிகம்.

அறிவிப்பு
அடுத்ததாக நீட் தேர்விலும் ஏதாவது அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது.. சில தினங்களுக்கு முன்பு, அதாவது திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற புதிதில் நீட் தேர்வு விவகாரம் தமிழகத்தில் தலைதூக்கியது.. நீட் தேர்வை ஆட்சிக்கு வந்ததும் ரத்து செய்துவிடுவோம் என்று சொன்ன திமுக, அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட நீட் பயிற்சி மையங்களை தொடர்ந்து நடத்த போவதாக ஒரு அறிவிப்பு வெளியானதுமே, அது மிகப்பெரிய விவாதமாகவே உருவெடுத்தது.

பாமக
அதிமுக, பாமக போன்ற கட்சிகள் இதை சுட்டிக்காட்டியே வந்தாலும், பாஜகவும் தன் பங்குக்கு இந்த விவகாரத்தை விமர்சித்தது... இப்படிப்பட்ட நேரத்தில்தான் அமைச்சர் அன்பில் மகேஷ் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதில், "தமிழகத்தில் எந்த காலகட்டத்திலும் நீட் தேர்வை நுழைய விடமாட்டோம்... கொஞ்சம் பொறுமையா இருங்க.. வருகின்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்போது முதல்வர், நீட் குறித்து முக்கிய முடிவுகளை அறிவிப்பார்" என்று நம்பிக்கை வார்த்தைகளை சொல்லி இருந்தார்.. அந்த வகையில் நீட் தொடர்பான அறிவிப்பும் ஏதாவது இன்றைய தினம் வெளிவருமா என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

பட்ஜெட்
அதுமட்டுமல்ல, இந்த பட்ஜெட்டில் அதிக நிதி பள்ளிக்கல்வி துறைக்குதான் ஒதுக்கப்பட்டுள்ளது.. எனவே, மேலும் சில அரசின் அறிவிப்புகளையும் தமிழக மாணவர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.. அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்த போவதாகவும், வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, அரசு பள்ளிகளில் சத்துணவில் வாழைப்பழத்தை சேர்க்கும் திட்டத்தை கொண்டு வரப்போவதாகவும் ஏற்கனவே அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார்.. அந்த வகையில் அதற்கான அறிவிப்பும் வெளியாகுமா என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..

அரசு பள்ளி
சட்டமன்றத்தின் 3வது நாள் கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது பாமக தலைவர் ஜிகே மணி பள்ளிக் கல்விக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.. அதற்கு பதிலளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், "அரசுப்பள்ளி வறுமையின் அடையாளம் அல்ல, அது பெருமையின் அடையாளம்" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் புது புது அறிவிப்புகளை நோக்கி தமிழகம் காத்துள்ளது..

தமிழகம்
முதல்வர் ஸ்டாலினை பொறுத்தவரை மா.சுப்பிரமணியம், பிடிஆர், அன்பில் மகேஷ், இவர்கள் 3பேர் தான் அவரது குட் புக்கில் உள்ளனர்... அன்பில் செய்தியாளர்களை எதிர்க்கொள்ளும் விதமும், கல்வியாளர்கள் ஆலோசனைக் கேட்டு நடப்பதும், கல்விக்கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட விஷயங்களில் எடுத்த நிதான நடவடிக்கையும் அவர் மீது நம்பிக்கை வைத்து தமிழக பட்ஜெட்டில் அதிக தொகை ஒதுக்கப்பட்ட துறையாக பள்ளிக்கல்வித்துறை உள்ளது என்பதையும் மறுக்க முடியாது.
-
Delimitation: பொருளாதாரம், நிதி ஆதாரத்தில் பெரிய ஓட்டை விழும்.. தென்னிந்திய மாநிலங்களுக்கு 'இரட்டை தண்டனையா'? -
Delimitation! தமிழகத்திற்கு மாபெரும் அநீதி! நாளை வீடுகளில் கருப்புக் கொடி போராட்டம்- ஸ்டாலின் -
அப்செட்டில் ஸ்டாலின்.. ராகுல் பிரசாரத்திற்கு வராததால் காங்கிரஸின் 28 தொகுதிகளிலும் சிக்கல்.. பின்னணி -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
நெல் ஊக்கத்தொகை.. கடிதத்தை பொதுவெளியில் வெளியிட தயாரா.. நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால் -
நானும் டெல்டா காரன் தான்.. ஸ்டாலின் சொன்னதில் இதுதான் பெரிய காமெடி! அட்டாக் மோடில் அன்புமணி ராமதாஸ் -
நெல் ஊக்கத்தொகை விவகாரம்.. கடிதத்தை வெளியிட்டு.. ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் -
அவசரமாக தொகுதி மறுவரையறை.. தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்.. பழைய திமுகவை பார்ப்பீங்க.. ஸ்டாலின் எச்சரிக்கை! -
ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை.. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் குறித்த கேள்விக்கு எடப்பாடி ரியாக்ஷன் -
கடுகடு ராகுல்.. கண்டு கொள்ளாத ஸ்டாலின்! கரையேறுமா காங்கிரஸ்? தனி ரூட் எடுத்துப் பாயும் அறிவாலயம்!












Click it and Unblock the Notifications