இனி "கோ பேக் மோடி" டிரெண்ட் சாத்தியமா? தமிழ்நாடு வரப்போகும் பிரதமர் மோடி.. திமுக பிளான் இதுதானா?
சென்னை: தமிழ்நாட்டிற்கு இன்னும் 2 வாரங்களில் பிரதமர் மோடி வர உள்ள நிலையில் கோ பேக் மோடி டேக்கை திமுக தரப்பு டிரெண்ட் செய்யுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க ஜனவரி 12-ந்தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசுதான் செய்ய வேண்டும்.
திறப்பு விழா நிகழ்வில் பிரதமர் மோடியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மேடையில் இருப்பர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அரசு நிகழ்ச்சி
இந்த நிலையில் இது அரசு நிகழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும். அரசியல் நிகழ்ச்சியாக மாறி விடக்கூடாது என இப்போதே தமிழக அரசின் உயரதிகாரிகள் திட்டமிடுகிறார்கள். ஆனால், அரசியல் நிகழ்ச்சியாக மாற்ற தமிழக பாஜக தலைவர்கள் ஒருசிலர் விரும்புவதாக தகவல் வருகிறது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு கொஞ்சம் மைலேஜ் ஏற்ற இது உதவும் என்று சிலர் கருதுகிறார்களாம்.

மோடி தமிழ்நாடு
ஆனால் பாஜகவிற்கு உள்ளேயே.. அதெல்லாம் வேண்டாம். மத்திய - மாநில அரசு நிகழ்ச்சியாகவே இது இருக்கட்டும் என்று கூறி வருகிறார்களாம். இது ஒருபுறமிருக்க, அதிமுக ஆட்சியின் போது தமிழகத்துக்கு பிரதமர் மோடி வரும்போதெல்லாம் 'கோ பேக் மோடி' என்கிற போராட்டத்தை நடத்தியதுடன், அது தொடர்பான ஹேஸ்டேக்கை வைரலாக்கியது திமுக. இது பெரிய அளவில் வைரல் ஆனது.

கோ பேக் மோடி
திமுகவின் போராட்ட அடையாளங்களில் ஒன்றாக இது மாறியது. குறிப்பாக, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தமிழகத்துக்கு பாஜக வஞ்சகம் செய்வதாக குற்றம்சாட்டி இந்த கோ பேக் மோடியை சர்வதேச அளவுக்கு எதிரொலிக்கச் செய்தனர். தற்போதும், நீட் பிரச்சனை தீரவில்லை. அப்படியே தான் இருக்கிறது.

டிரெண்ட் நடக்குமா?
இந்த சூழலில், கோ பேக் மோடி என்கிற போராட்டத்தை திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் நடத்துமா? என்று அதிமுகவில் சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் திமுக தரப்பில் அப்படி எந்த எதிர்ப்பும் காட்டப்படாது என்று தகவல்கள் வருகின்றன. ஏனென்றால் இது அரசு தரப்பு அழைப்பு, இப்படி ஒரு அழைப்பு நடக்கும் போது கோ பேக் மோடியை திமுக டிரெண்ட் செய்வது தவறாக இருக்கும்.

திமுக திட்டம் என்ன
மாறாக தேர்தல் பிரச்சாரத்திற்கு கட்சி நிகழ்வாக மோடி வந்தால் அதை எதிர்ப்போம். இதை எதிர்க்க மாட்டோம். என்ன இருந்தாலும் அவர் பிரதமர், என்று திமுக தரப்பு தெரிவிக்கிறதாம். ஏனென்றால் அரசு தரப்பில் இருந்து அழைப்பு சென்றுள்ளது. இப்போது அவர் வருகையை எதிர்ப்பது நியாயமாக இருக்காது என்று திமுகவினர் கருதுவதாக கூறப்படுகிறது.

திமுக கோ பேக் மோடி
இதனால் திமுக சார்பாக கோ பேக் மோடி டிரெண்ட் இம்முறை நடக்காது என்று தகவல்கள் வருகின்றன. மாறாக இணைய திமுகவினர் சிலர், இணைய பாஜக எதிர்ப்பாளர்கள் இந்த போராட்டத்தில் சமூக வலைத்தளங்களில் மட்டும் முன்னெடுப்பார்கள் என்று தகவல்கள் வருகின்றன.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார் -
பொய் சொல்றாங்க..ஸ்டாலின் கூறியதற்கும், திமுக செய்வதற்கும் சம்பந்தமில்லை! வெளுத்துவிட்ட மா.கம்யூ -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
சிலுப்பிகிட்டு போகும் சிறுத்தை குட்டிகள்..க்ரீன் சிக்னல் காட்டிய அறிவாலயம்! குறுக்கே நிற்கும் திருமா -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம்












Click it and Unblock the Notifications