சைக்கிள் கேப் கிடைத்தால் போதும்.. படக்கென உள்ளே நுழைந்து.. மாஸ் காட்டும் திமுக.. செம்ம ஸ்கெட்ச்..!
திருவாடானை தொகுதியில் திமுக வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை: போகிற போக்கை பார்த்தால், திருவாடானை தொகுதியில கருணாஸின் ஓட்டுக்களை அப்படியே திமுக தனக்கு ஷிப்ட் செய்து கொள்ளும்போல தெரிகிறது.. அந்த அளவுக்கு தொகுதி மக்கள் கருணாஸ் மீது அதிருப்தியில் உள்ளனராம்.
ஜெயலலிதாவின் கருணையால் சீட்டை பெற்றவர் கருணாஸ்.. கூட்டணியில் சேர்த்துக் கொண்டு திருவாடானை தொகுதியை வழங்கினார்..
தொகுதி வளர்ச்சி திட்டத்தில் கருணாஸ் நிறைய ஆர்வம் காட்டி வந்தாலும், ஜெ.மறைவுக்கு பிறகு அப்படியே தலைகீழானது. .. 2 அணிகளாக உடைந்தன.

பரபரப்பு
இதற்கு பிறகு கூவத்தூர் சமாச்சாரத்தில் பரபரப்பாக கருணாஸ் பெயர் இடம்பெற்றது.. ஆனால், இதற்கு பிறகு கருணாஸ் தொகுதி பக்கமே செல்லவில்லை. இதை கருணாஸே பலமுறை ஒப்புக் கொண்டிருக்கிறார். அதற்கு காரணம், தனக்கு போதிய பாதுகாப்பு இல்லை, ஆளுங்கட்சி தரப்பிலும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கவில்லை, அதனால் தொகுதி வளர்ச்சியில் முழு கவனம் செலுத்த முடியவில்லை... இருந்தாலும் முடிந்த அளவு வளர்ச்சி பணிகளை செய்திருக்கிறேன்.. இந்த முறை 2 சீட் கேட்டிருக்கிறோம்.. ஆனால், நான் திருவாடானையில் நிற்பது டவுட்" என்றார்.

கருணாஸ்
கருணாஸ் ஓபனாகவே இப்படி சொல்லிவிட்டாலும், தொகுதி மக்களும் அவர்மீது அதிருப்தியில்தான் உள்ளனர்.. நம்பி ஓட்டு போட்டோமே.. இப்படி எங்கள் தொகுதியை காணாமல் போக செய்துவிட்டாரே.. விவசாயிகளைகூட சந்திச்சு பேசவில்லை.. ஆதரவா ஒரு அறிக்கை கூட விடவில்லையே.." என்று பொங்குகிறார்கள். அதுமட்டுமல்ல, தொண்டியில் மீன்பிடி துறைமுகம், பொறியியல் கல்லூரி, நெல், மிளகாய்க்கு கொள்முதல் நிலையம், மணிமுத்தாற்றில் தடுப்பணை என்பன போன்ற கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை என்று புலம்புகிறார்கள்.

மும்முரம்
இப்படிப்பட்ட ஆதங்கத்தைதான் திமுக தனக்கு சாதகமாக்கும் முயற்சியில் இறங்கி வருகிறதாம்.. திருவாடானை தொகுதி அதிருப்திகள் அத்தனையையும், திமுகவின் வாக்குகளாக்கும் மும்முரத்திலும் ஈடுபட்டு வருகிறதாம்.. இந்த 5 வருட காலங்களில் அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் மீதே விமர்சனங்களை முன்வைத்து பிரச்சாரங்களையும் தொடங்க போவதாக கூறுகிறார்கள்.

ரஜினி
எப்படி ரஜினி ரசிகர்களை திமுக வளைத்து போட்டு வருகிறதோ, அதுபோலவே அதிமுகவின் அதிருப்தி ஓட்டுக்களையும் திமுக குறி வைத்துள்ளது.. எங்கெல்லாம் சைக்கிள் கேப் சாதகம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் நுழைந்து கெத்து காட்டி வருகிறது திமுக..!
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications