அமைச்சர் துரைமுருகன் கைதாகிறாரா? மூத்த அதிகாரிகள் அவசர ஆலோசனை.. நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு
சென்னை: மூத்த அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்டை அமல்படுத்தச் சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணையில் ஆஜராகாததால் துரைமுருகனுக்கு பிடிவாரண்டை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே இது தொடர்பாக மூத்த போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் துரைமுருகன் கைது செய்யப்படுவாரோ என்ற பேச்சும் எழுந்துள்ளது
கடந்த 2006- 2011 திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர் துரைமுருகன். அப்போது 2007 முதல் 2009 வரை காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து சேர்த்ததாக இவர் மீது 2011ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதாவது 2011 ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.

இது தொடர்பான வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு துரைமுருகன் மற்றும் சாந்தகுமாரியை வேலூர் நீதிமன்றம் விடுவித்தது. இருப்பினும் இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை வைத்த கோரிக்கையை ஏற்றுச் சென்னை ஐகோர்ட், துரைமுருகனை விடுவித்த வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது. துரைமுருகன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு இப்போது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது..
இதற்கிடையே துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது. அமைச்சர் துரைமுருகன் ஆஜராகவில்லை. அவரது மனைவி மட்டும் நேரில் ஆஜராகி பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்ற நீதிமன்றம் சாந்தகுமாரிக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்தது.
அதேநேரம் அமைச்சர் துரைமுருகன் இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராகாத நிலையில், அவருக்கு எதிரான பிடிவாரண்டைச் செப்டம்பர் 15ஆம் தேதி அமல்படுத்தத் தமிழ்நாடு போலீசாருக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவு அரசியல் ரீதியாக மிக முக்கியமான உத்தரவாகப் பார்க்கப்படுகிறது. மேலும், துரைமுருகன் கைது செய்யப்படுவாரா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.
இதற்கிடையே நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் உத்தரவு தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்க்க பிரிட்டன் சென்றுள்ள நிலையில், அவருடன் தொலைப்பேசி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அதில் துணை முதல்வர் உதயநிதி மற்றும் சட்ட வல்லுநர்களும் கலந்து கொண்டுள்ளனர். இதனால் துரைமுருகன் கைது செய்யப்படுவாரோ என்ற பேச்சும் எழுந்துள்ளது
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்











Click it and Unblock the Notifications