Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷிண்டே தான்.. ஆனா ‘கணக்கு’ வேற.. எடப்பாடிக்கு பதிலாக ‘கொங்கு’ புள்ளி.. பற்றவைக்கும் எக்ஸ்பர்ட்!

அதிமுகவில் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பது பற்றி நம்முடன் பேசியுள்ளார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி.

Subscribe to Oneindia Tamil

சென்னை : "ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக 2024ல் கணிசமான வாக்கு பலத்தைக் காண்பிப்பார். அதன்பிறகு தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆப்பு வரும். தொடர் தோல்வியை சந்தித்து வரும் உங்கள் தலைமையில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. செங்கோட்டையன் போன்ற ஒருவர் தலைமையை ஏற்க ஓபிஎஸ் தயார் என்று வருவார்." என அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பை அளித்ததைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம், ஈபிஎஸ்ஸை இடைக்கால பொதுச் செயலாளராக அங்கீகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசியுள்ள அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, தேர்தல் ஆணையம் சிவசேனா வழக்கில் பாஜக ஆதரவு பெற்ற ஷிண்டேவுக்கே சின்னம் கொடுத்தது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சின்னம் விஷயத்தில் மற்ற மாநிலங்கள் போலவே தேர்தல் ஆணையம் இதிலும் நடக்கும் என்று சொல்ல முடியாது. பாஜகவின் நலனை பொறுத்துத்தான் தேர்தல் ஆணையம் செயல்படும் எனக் கூறியுள்ளார். அவரது பேட்டி வருமாறு:

பாஜக விளையாட்டு

பாஜக விளையாட்டு

கேள்வி : உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் கேம் முடிந்துவிட்டதா? எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கத் தயாராகிவிட்டதா?

பதில் : ஓ.பன்னீர்செல்வம் இனி அடுத்தகட்ட வேலையைப் பார்க்க வேண்டிய இடத்தில் பார்க்கப்போவதாகச் சொல்லிவிட்டார். தேர்தல் ஆணையத்தை நோக்கி ஓபிஎஸ் நகர்ந்துள்ளார். இரு தரப்பும் தேர்தல் ஆணையத்தில் தங்கள் கருத்தைச் சொல்லும். தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பீகாரில் சிராக் பஸ்வான், பசுவதிகுமார் பராஸ் இடையேயான மோதலில், எம்.பிக்கள் ஆதரவு அடிப்படையில் பராஸ் கையில் தான் சின்னத்தை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், இருவருமே மோடிக்கு நெருக்கமானவர்கள் என்பதால், இருவருக்கும் பாதகம் வரக்கூடாது என்ற அடிப்படையில் சின்னத்தை முடக்கி வைத்தார்கள். அதேபோல சிவசேனா விவகாரத்தில் பாஜகவுக்கு விசுவாசமாக இருக்கும் ஷிண்டே கைக்கு சின்னம் போயிருக்கிறது. இங்கேயும், சின்னம் விவகாரத்தை வைத்துத்தான் பாஜக விளையாடுகிறது.

தேர்தல் கமிஷனின் பிளான்

தேர்தல் கமிஷனின் பிளான்

அரசியலில் செண்டிமெண்ட்களுக்கு இடமில்லை. நாளை எடப்பாடி பழனிசாமி கையில் இரட்டை இலை சின்னம் கிடைத்தால் அவர் பாஜகவை கழற்றிவிடப் பார்ப்பார். அல்லது வெறும் 5 சீட்டுகளை கொடுப்பார். எனவே அதில் பாஜக அலெர்ட்டாக இருக்க வேண்டும். சிவசேனா சின்னம் இப்போது ஷிண்டேவிடம் சென்றிருந்தாலும், விதிகளை படித்துப் பார்க்க நேரமில்லை என்று கூறி அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் சின்னம் முடக்கப்பட்டது. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரின் மனுக்களையும் தேர்தல் ஆணையம் உடனே பரிசீலிக்குமா என்றால் அது கேள்விக்குறிதான். தேர்தல் வரும் நேரத்தில் தான் அதனை கையில் எடுப்பார்கள். ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்க முடியாது என்பதற்கான காரணங்களை ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் முன்வைக்கும். அதில் தேர்தல் ஆணையம் கையில் தான் பந்து இருக்கிறது. சிறுபான்மையினர் வாக்குகள் 13% வாக்குகளுக்காக பாஜகவை கழற்றிவிட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கலாம். எனவே, சின்னம் விஷயத்தில் மற்ற மாநிலங்களில் நடந்தது மாதிரியே தேர்தல் ஆணையம் இதிலும் நடக்கும் என்று சொல்ல முடியாது. பாஜகவின் நலனை பொறுத்துத்தான் தேர்தல் ஆணையம் செயல்படும்.

ஏமாந்துவிட்டாரா

ஏமாந்துவிட்டாரா

கேள்வி : ஓபிஎஸ், பாஜகவை நம்பி ஏமாந்துவிட்டார் என்ற பேச்சுகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு அதிகமாக எழுந்துள்ளதே..

ரவீந்திரன் துரைசாமி :இன்றும் நாடாளுமன்றத்தில் ஓபி ரவீந்திரநாத் அதிமுக மக்களவை உறுப்பினராகத்தான் இருக்கிறார். பாஜக ஓபிஎஸ்ஸை ஏமாற்றிவிட்டதாக மருது அழகுராஜ், புகழேந்தி போன்றோர் கொதிக்கின்றனர். ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பாஜகவை நம்புவார். பாஜகவை நம்பி இருப்பதில் எதிர்காலத்தில் ஓபிஎஸ்ஸுக்கு நிச்சயமாக பலன் உண்டு. 2026ல் முதல்வர் வேட்பாளராக வேண்டும் என்பதுதான் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரின் விருப்பம். அதற்கிடையே 2024ல் நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. எடப்பாடி பழனிசாமி கையில் இரட்டை இலை சின்னம் இருக்கும்போது ஓபிஎஸ் அவரை எதிர்க்கப் போகிறாரா, ஈபிஎஸ் கையில் இரட்டை இலை இல்லாதபோது ஓபிஎஸ் அவரை எதிர்க்கப் போகிறாரா என்பதுதான் கேள்வி. ஓபிஎஸ் எடப்பாடிக்கு எதிரான சண்டையை விட்டுவிட்டுப் போகமாட்டார்.

அந்த ஐந்தரை சதவீதம்

அந்த ஐந்தரை சதவீதம்

ஓபிஎஸ் எவ்வளவு நிதானமாக பிரஸ்மீட்டில் பேசினார். எடப்பாடி பழனிசாமிதான் டென்ஷனாக இருக்கிறார். ஓபிஎஸ் நிதானமாகவே காய்களை நகர்த்தி வருகிறார். ஒருவேளை இரட்டை இலை சின்னம் முடங்கினால், 2024ல் ஓபிஎஸ் பெரியளவில் வாக்குகளைப் பெறுவார். ஆட்சி அதிகாரத்தில் இருந்த, இரட்டை இலை சின்னம் வைத்திருந்த ஈபிஎஸ் + ஓபிஎஸ்ஸை அவர்கள் பாஜக + பாமகவுடன் கூட்டணியில் இருந்தபோதும் எதிர்த்து டிடிவி தினகரன் 5 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளைப் பெற்றார். இன்று தோற்றுப்போன எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து ஓபிஎஸ் நிற்கிறார். எடப்பாடிக்கு சின்னம் கிடைக்கிறது என்றே வைத்துக்கொண்டாலும், ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரையும் எதிர்த்து தினகரனே ஐந்தரை சதவீதம் வாக்குகள் எடுக்கும்போது, எடப்பாடியுடன் இருந்த ஓபிஎஸ் நிச்சயம் அதிக வாக்குகளை எடுப்பார். சின்னம் முடக்கப்பட்டால், ஓபிஎஸ்ஸால் இன்னும் அதிகம் பெற முடியும்.

யாருக்கு எவ்வளவு வாக்கு பலம்?

யாருக்கு எவ்வளவு வாக்கு பலம்?

ஓ.பன்னீர்செல்வம் கண்டிப்பாக 2024ல் கணிசமான வாக்கு பலத்தைக் காண்பிப்பார். அதன்பிறகு தான் எடப்பாடி பழனிசாமிக்கு ஆப்பு வரும். தொடர் தோல்வியை சந்தித்து வரும் உங்கள் தலைமையில் ஆட்சியைப் பிடிக்க முடியாது. செங்கோட்டையன் போன்ற ஒருவர் தலைமையை ஏற்க ஓபிஎஸ் தயார் என்று வருவார். தொடர் தோல்விகள் ஏற்படும்போது, எடப்பாடி பழனிசாமியால் ஸ்டாலினை தோற்கடிக்க முடியாது என்ற புள்ளி வரும். தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதாவின் விசுவாசி என்ற பார்வை, ஓபிஎஸ் அமைதியானவர் என்ற பார்வை ஓபிஎஸ் மீது எளிய மக்கள் மத்தியில் இருக்கிறது. கள்ளர், மறவர், அகமுடையார் சமூகத்தைச் சேர்ந்த மக்களின் பெருவாரியான ஆதரவும் ஓபிஎஸ் வசமே உள்ளது.

செங்கோட்டையன்

செங்கோட்டையன்

2024க்குப் பிறகு ஓபிஎஸ் கணிசமான வாக்குகள் பெறக்கூடிய பட்சத்தில் எடப்பாடியால் ஸ்டாலினை வீழ்த்தமுடியாது, அவர் ஒரு சாதி ஆதிக்கத் தலைமை, அவரைத் தவிர இன்னொருவர் தலைமையில் சந்திப்போம் என்ற புள்ளிக்கு வருவார்கள். பண்ருட்டி ராமச்சந்திரன் அதை நோக்கியே கொண்டு செல்கிறார். செங்கோட்டையன் போன்ற தலைவர் தலைமையில் சந்திக்கலாம் என்ற நிலைக்கு வருவார்கள். சசிகலாவை எதிர்த்து நின்றவர், ஜெயலலிதாவே செங்கோட்டையனின் எழுச்சியைக் கண்டு பயந்தார் என்ற விஷயம் அனைவருக்கும் தெரியும். எனவே எடப்பாடி தவிர வேறொருவர் தலைமையேற்க வேண்டும் என்ற நிலை வரும். அதை சொல்லக்கூடிய 'வெயிட்டேஜ்' பன்னீர்செல்வம் எடுக்கக்கூடிய கணிசமான வாக்குகள் மூலம் அவருக்கு கிடைக்கும். ஆணவத்தில் ஆடும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் க்ளீனாக முடிவுகட்டப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+