புள்ளி வெச்ச செங்கோட்டையன்.. கோலம் போட்டு பாஜகவை உதறும் எடப்பாடி பழனிசாமி? தவெக - அதிமுக இணைகிறதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களுக்கு வெற்றி உறுதி கிடையாது என்பது அனைவருக்குமே தெரியும்.. அப்படியிருந்தும் அந்த புலி கூண்டில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. இனி முடிந்த அளவுக்கு அங்கிருந்து வெளியே வந்துடலாம் என்றுதான் நினைப்பார்.. அதுக்கு செங்கோட்டையன் விவகாரம் ஒரு கருவியாகவும் இருக்கலாம்" என்று சினிமா விமர்சகரும், பத்திரிகையாளருமான வலைப்பேச்சு அந்தணன் கருத்து தெரிவித்துள்ளார்.

AramNaadu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன், "சென்னை வரும்போதெல்லாம் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா சொன்னாலும், கூட்டணி ஆட்சி என்பதை எடப்பாடி பழனிசாமி இதுவரை உறுதிப்படுத்தவில்லை.. இப்போதும் அதிமுகதான் தனி மெஜாரிட்டி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துவருகிறார்.. அதாவது பிஜேபியை கணக்கிலேயே எடப்பாடி பழனிசாமி வைக்கவில்லை போலும்.

Edappadi Palanisamy BJP TVK

செங்கோட்டையன் ஒன்றிணைந்த அதிமுகவாக மாற்றுகிறாரோ இல்லையோ, பாஜக உறவை எடப்பாடி பழனிசாமி உடைத்துவிட்டு விடுவார் என்றே தோன்றுகிறது. எனவே செங்கோட்டையன் எடுத்திருக்கும் முடிவானது, எடப்பாடி பழனிசாமிக்குதான் பிளஸ்ஸாக அமையும்.

செங்கோட்டையன் அரசியல்

ஓபிஎஸ் உள்ளிட்டோரை சேர்க்க போவதில்லை என்று ஆரம்பத்திலிருந்தே பாஜகவிடம் சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.. அப்படியிருக்கும்போது, செங்கோட்டையனை வைத்து முயற்சித்தால் மட்டும் நடந்துவிடுமா என்ன? வெற்றியோ, தோல்வியோ, தனியாக நின்று பார்த்துடுவோம் என்ற நம்பிக்கையில்தான் எடப்பாடி உள்ளார்..

அதிமுகவை இணைப்பதால் டெல்லிக்கு ஒரு லாபமும் இல்லை.. திமுகவை இன்னும் வளர வைப்பதற்கான முயற்சியாகத்தான் அது இருக்கும்.. எல்லாரையும் சேர்க்க வேண்டும் என்று ரொம்ப பிரஷர் தந்தால், பலூன் வெடித்துவிடும்.. அழுத்தம் அதிகமானால், பிஜேபி கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக எடப்பாடி சொல்வதற்கே நிறைய வாய்ப்புள்ளது..

ஒருவேளை வழக்கு சிக்கல்கள் இருந்தாலும், அதனை சமாளித்து கொள்ளலாம் என்ற முடிவையே எடப்பாடி எடுப்பார்.. அதிலும் தேர்தல் சமயத்தில் எடுத்தால், அது பலராலும் பேசப்படுவார்.. இதனால் எடப்பாடிக்கான கிரேஸ் கூடவே செய்யும்..

விஜய் - எடப்பாடி பழனிசாமி

ஒருவேளை பாஜகவை முறித்து கொண்டு வெளியே வந்தால், விஜய்யுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளது..

ஏற்கனவே தவெக, அதிமுக கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடந்தது.. பிறகு ஏதோ ஒரு பதவி பிரச்சனையில் முடிவுக்கு வந்துவிட்டது.. இப்போது இருவரில் யாராவது ஒருவர் இறங்கி செல்லலாம் என்ற முடிவுக்கு வரவும் வாய்ப்புண்டு..

தமிழகத்தை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு வெற்றி உறுதி கிடையாது என்பது அனைவருக்குமே தெரியும்.. அப்படியிருந்தும் அந்த புலி கூண்டில் இறங்கியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.. இனி முடிந்த அளவுக்கு அங்கிருந்து வெளியே வந்துடலாம் என்றுதான் நினைப்பார்.. அதுக்கு செங்கோட்டையன் விவகாரம் ஒரு கருவியாகவும் இருக்கலாம்.

ஏனென்றால், அமித்ஷாவை ஏற்கனவே செங்கோட்டையன் சந்தித்ததற்கு, இனி மீண்டும் செங்கோட்டையனை சந்திக்க கூடாது, செங்கோட்டையனுக்கு எந்த முக்கியத்துவமும் பாஜக தரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் கோரிக்கை வைத்திருந்தார்.. இதற்கு பிறகே கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.. இப்போது மறுபடியும் செங்கோட்டையனை அழைத்து டெல்லி பேசியிருக்கிறது..

எனவே, இதையும் எடப்பாடி பழனிசாமி யோசித்து பார்ப்பார்.. பாஜகவுடன் உறவையும் முறிக்கவே வாய்ப்புள்ளது..

தவெக - அதிமுக கூட்டணி

தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை பிரச்சாரம் செய்ய போகிறார்.. எந்த கட்சியின் கூட்டணியையும் உடைக்க வேண்டும் என்பது விஜய் எண்ணமில்லை.. தான் மக்களிடம் செல்ல வேண்டும், மக்கள் தன்மீது அதிக நம்பிக்கை வைக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய குறிக்கோளாக உள்ளது.. இப்போது கூட்டணியை பற்றி யோசிக்க அவருக்கு நேரமில்லை.

விஜய் வந்தால் ஒரு கூட்டம் கூடும் என்ற எண்ணம் இங்கு வலுவாக உள்ளது.. அந்த எண்ணத்தை இந்த விஜய்யின் சுற்றுப்பயணம் மேலும் வலுப்படுத்தும்..

அதுமட்டுமல்ல, விஜய்யின் சுற்றுப்பயணம் பிளானே வித்தியாசமாக உள்ளது.. உதாரணத்துக்கு திருச்சியில் கூட்டம் நடத்திவிட்டு, உடனே பெரம்பலூரில் சுற்றுப்பயணம் நடத்தினால், கூட்டம் அவ்வளவாக வராது.. அதற்கு பதிலாக திருச்சியில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, உடனே சென்னையில் சுற்றுப்பயணம் நடத்தினால், திருச்சி மாவட்டத்திலும் கூட்டம் கூடும்.. சென்னையிலும் கூட்டம் கூடும்..

எனவே, மிகப்பெரிய கூட்டத்தை கூட்டவே, பயண திட்டத்தை திட்டமிட்டு அமைத்திருக்கிறார்கள்..இது விஜய் அரசியலின் தந்திரங்களில் ஒன்றாகும்.. அதேபோல ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் பிரச்சனைகளை விஜய்யிடம் சொல்ல வேண்டும்.. அவரை சுற்றியிருப்பவர்களும், மாவட்ட செயலாளர்களும்தான், மக்களின் பிரச்சனைகளை விஜய்யிடம் எடுத்து சொல்ல வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+