அண்ணாசாலை அதிருது.. அறிவாலயத்துக்கு வண்டியை விட்ட "புலி".. சென்னை க்ளைமேட்டே மாறுதே? விழித்த எடப்பாடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், கூட்டணி குறித்த உறுதிப்படுத்தப்படாத பல தகவல்களும் இணையத்தில் றெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. அந்தவகையில், இப்போதும் ஒரு புதிய தகவல் வலம் வந்துகொண்டிருக்கிறது.

திமுகவுக்கு மாற்றான இதே போன்ற பலமான கூட்டணியை அதிமுகவும் முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் பாஜகவையும் சமாளித்து, மெகா கூட்டணியை உருவாக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது. ஆனால், பாஜகவுடனான கூட்டணி உறவை முறித்து கொண்டதில் இருந்தே, அதிமுகவுக்கான ஆதரவு எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லையாம்.

Will Edappadi Palanisamy form Alliance without DMDK and Premalatha may alliance with DMK, say sources

கூட்டணி: திமுகவிலிருந்து சில கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி வைக்க போவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடாமல் சொல்லி கொண்டேயிருக்கிறாரே தவிர, இன்னும் யாருமே கூட்டணிக்கு வரவில்லை.

திமுக கூட்டணியையும் அசைக்க முடியவில்லை. மாறாக, திமுகவுக்குதான் இன்னொரு கட்சி, கூட்டணியில் வந்து சேர்ந்துவிடும் போல. அதுகுறித்த தகவல்கள்தான் தற்போது பரபரத்து கொண்டிருக்கிறது.

ராஜ்ய சபா: 14 + 1 ராஜ்யசபா சீட் தங்களுக்கு வேண்டும் என்று, அதிமுகவிடமும், பாஜகவிடமும் தேமுதிக தொடர்ந்து கேட்டு வந்தது.. ஆனால், 2 கட்சிகளுமே ராஜ்யசபா சீட் இல்லை என்று தேமுதிகவிடம் கை விரித்துவிட்டன. "ராஜ்யசபா கோரிக்கையை கைவிட்டுவிட்டால் வாருங்கள், பேசலாம். அந்த கோரிக்கையுடன் தான் வருவீர்கள் என்றால், வர வேண்டாம்... ராஜ்யசபா சீட் கோரிக்கையை கைவிடுங்கள்" என்று அதிமுக திடமாக சொல்லிவிட்டதாம்.

இதற்கு பிறகு, பாமகவிற்கு ராஜ்யசபா சீட்டை தருவதற்கு, அதிமுக ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. பாமகவுக்கு கொடுத்தால், தங்களுக்கும் ராஜ்யசபா சீட் தந்தாக வேண்டும் என்று தேமுதிக பிடிவாதம் பிடித்திருக்கிறது.

எம்எல்ஏக்கள்: அதிமுகவில் இருப்பதே 62 எம்எம்எல்ஏக்கள் என்பதால், 2 எம்பி சீட் கிடைப்பது கஷ்டம்.. அதனால், ராஜ்ய சபா சீட் தர முடியாவிட்டாலும், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உட்பட 3 தொகுதிகளை தருகிறோம் என்று அதிமுக தெரிவித்திருக்கிறது.

ஆனால், 4+1 சீட்டுகள் வேண்டும், தேர்தல் செலவுகளையும ஏற்கவும், முக்கியமாக மதுரையையும் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்கிறதாம் தேமுதிக. மதுரையை ராஜ் சத்யனுக்கு ஒதுக்கப்போவதாக அதிமுக தெரிவித்துவிடவும், தேமுதிக தரப்பு அதற்குமேல் எந்த பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லையாம்.

திமுக பேச்சுவார்த்தை: இப்படிப்பட்ட சூழலில், இன்னொரு தகவல் கசிந்து கொண்டிருக்கிறது. திடீரென திமுக பக்கம் கவனத்தை திருப்பியிருக்கிறதாம் தேமுதிக. ஆளும் கட்சியின் அதிகார மையம் தரப்புடன் சுதீஷ் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.. அந்தவகையில், தேமுதிகவுக்கு 1 சீட் + தேர்தல் செலவும் ஏற்கப்படுவதாக உறுதி தரப்பட்டு உள்ளதாம்.

இதனை தேமுதிக ஏற்காமல், 2 + 1 சீட்டும் கேட்டு வருகிறதாம்.. இன்னும் இதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆனால், வேறு சில ஸ்மார்ட் மூவ்கள் இரு தரப்பிலுமே நடந்து வருகின்றன.. குறிப்பாக, விஜயகாந்த் மைத்துனரின் தொழில் பிரச்சனையில், அரசு ரீதியான உதவிகளும் செய்யப்பட்டு வருகிறதாம்.. அதேபோல, திமுகவை சாடுவதையும், விமர்சிப்பதையும் தேமுதிக தரப்பு தற்போது தடாலடியாக குறைத்து கொண்டிருக்கிறதாம்.

மாறும் களம்: நேற்றுகூட பிரேமலதா ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "தென்காசி மாவட்டம் புளியரையில், ரயில் விபத்து நடக்காமல் தடுத்த தம்பதியருக்கு, 5 லட்சம் ரூபாய் பரிசு வழங்கிய முதல்வருக்கும், தமிழக அரசிற்கும் பாராட்டுக்கள் என்று சொல்லியிருக்கிறார்.

ஆக மொத்தம், பாஜக + அதிமுக + திமுக என முத்தரப்பிலும் நூல்கள் விடப்பட்டுள்ளதால், இதில் எது ஓகே என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+