Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினின் "விஸ்வரூபம்".. இதோ அங்கே இன்னொரு விக்கெட்டும் காலியாக போகுது.. அமைச்சரின் பலே வேலை..!

திமுகவில் தோப்பு வெங்கடாசலம் இணைவதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறுபடியும் ஒரு மெகா புள்ளி திமுக பக்கம் தாவ போகிறதாம்.. இந்த கட்சி தாவலுக்கு பின்னணியில் அதே செந்தில்பாலாஜி தூணாக இருந்து வருகிறார் என்ற தகவல்கள் கசிந்து வருகின்றன..!

Recommended Video

    இன்னொரு முக்கிய புள்ளியை குறிவைக்கும் DMK? ஸ்கெட்ச் போடும் Senthil Balaji

    பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம், அதிமுகவில் ஒரு சீனியர்.. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது இவருக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி அழகுபார்த்துள்ளார்.

    அவர் மறைவுக்கு எனினும் ஆரம்பத்தில் அமைச்சர் பதவிக்காக முயன்றார்.. ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. அதனால் எம்பி தேர்தலுக்கு பிறகு, இவர் வேறு கட்சிக்கு தாவ போகிறார் என்றெல்லாம் செய்திகள் பரபரத்தன.

    திமுக

    திமுக

    ஆனால், கடந்த எம்பி தேர்தலில் கோபிசெட்டிபாளையம், பவானி தொகுதியைவிட, அவருடைய பெருந்துறை தொகுதியில் திமுகவின் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்தது.. இதற்கு காரணம், சாட்சாத் தோப்பு வெங்கடாசலத்தின் கடினமான உழைப்புதான்.. ஆனாலும், உட்கட்சி பூசல் என்னவோ தொகுதிக்குள் நிலவி கொண்டுதானிருந்தது..

    கடிதம்

    கடிதம்

    மாஜி அமைச்சர் கருப்பண்ணனுடனான மோதலும் நீடித்தது.. அன்று, தோப்பு வெங்கடாசலம் கையில் இருந்த சுற்றுச்சூழல் துறை பறிக்கப்பட்டு கருப்பண்ணனிடம்தான் ஒப்படைக்கப்பட்டது... அப்போது முதலே இருவருக்கும் இடையே முட்டல் மோதல்கள் இருக்கின்றன.. ஒருகட்டத்தில், கட்சி பொறுப்பிலிருந்து விலகுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தோப்பு வெங்கடாசலம் கடிதமும் எழுதியிருந்தார்.

    கருப்பணன்

    கருப்பணன்

    இப்படிப்பட்ட சூழலில்தான் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் தரப்போவதில்லை என்ற தகவல் கசிந்தது.. அதுமட்டுமல்ல, கருப்பணன் ஆதரவாளரான ஜெயகுமாருக்கு சீட் கிடைத்ததுமே அதிர்ந்து போன தோப்பு வெங்கடாசலம், நான் என்ன தப்பு செய்தேன் என்று கதறி கதறி அழுத நிகழ்வுகளும் உண்டு. ஆனால், இதற்கு பிறகுதான் தோப்பு திறன்பட செயல்பட்டார்..

    சுயேச்சை

    சுயேச்சை

    திடீரென சுயேச்சையாக போட்டியிட முடிவு செய்வதாக அறிவித்து எடப்பாடிக்கே ஷாக் தந்தார்.. காரணம், தன்னை நம்பிய பெருந்துறை தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற முனைப்புடனேயே இருந்து வருவதால், இப்படி ஒரு அதிரடியை கையில் எடுத்தார்.. இதில் போதுமான வெற்றி தோப்புக்கு கிடைக்கவில்லை என்றாலும், செல்வாக்கை வலுவாகவே தொகுதிக்குள் தக்க வைத்துள்ளார்.

     செந்தில்பாலாஜி

    செந்தில்பாலாஜி

    இதையடுத்துதான், இவர் திமுகவில் இணைய முயற்சிகளை எடுத்து வருகிறார்.. இதற்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பின்னணி இருப்பதாக சொல்லப்படுகிறது.. ஒருவேளை தோப்பு, கட்சியில் இணைந்தால் அது திமுகவுக்கு பலமாக இருக்கும்.. காரணம், தொகுதிக்குள் இவர் செய்த நலத்திட்டங்கள், மக்களிடம் பழகும்முறை, உள்ளிட்டவைகள்தான் இன்றளவும் இவர் பெயரை உச்சரிக்க காரணமாக இருந்து வருகிறது.. அதுமட்டுமல்ல, அன்று எம்பி தேர்தலில் பெருந்துறையில் திமுகவின் வாக்குகளை குறைத்தவரும் இவரேதான்.. கொங்கு மண்டலத்தில், கடைசிவரை திமுகவால் நிமிர்ந்து எழ முடியாத வரும்நிலையில், தோப்பு போன்ற சீனியர்கள் இருந்தால், அது கட்சிக்கு பலம் தரும்.

     முன்னெடுப்பு

    முன்னெடுப்பு

    அதேசமயம், அதிமுகவின் பிரபலமான முகங்கள், அதாவது "பிராண்டு" நபர்கள், கட்சியின் திமுகவில் இணைய மிகப்பெரிய துணிச்சல் வேண்டும்.. திடுதிப்பென்று இணைவது மட்டுமல்லாமல், அதிமுகவை மறந்து, திமுகவுக்கான முன்னெடுப்புகளையும் சிறப்பாக எடுக்க வேண்டும்.. அன்றைக்கு செந்தில்பாலாஜிக்கும், தங்க தமிழ்செல்வனுக்கும், சேகர்பாபுவுக்கும் இருந்த துணிச்சல்தான் அவர்களை இப்போது உச்சத்தில் உயர்த்தியுள்ளது..

    பலம்

    பலம்

    அதேபோல, தோப்புவும் கட்சியில் இணைவது திமுகவுக்கும் பிளஸ்.. தோப்பு-வுக்கும் பிளஸ் ஆக இருக்கும் என்கிறார்கள்.. ஆனால், இதற்கு பிரதிபலனா தனக்கு மாவட்ட செயலர் பதவி தரணும் என்று தோப்பு கேட்டு வருகிறாராம்.. இதற்கு ஈரோடு தெற்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான முத்துசாமி தடை போட்டுட்டு வருகிறாராம்.. தோப்புக்கு எங்கே போனாலும் அங்கே ஒருவர் "கேட்" போட்டுவிடுகிறார் போலும்.. இருந்தாலும், முத்துசாமியை சமாதானம் செய்து தோப்புவை, திமுக தட்டி தூக்கிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. ஆக, அதிமுக சரிய சரிய.. திமுகவின் பலம் எகிறி கொண்டே இருக்கிறது..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+