தணியாத மோகம்.. 1 கிராம் தங்கம் ரூ.10,000 ஆகப் போவது எப்போது? ஒரு சவரன் ஒரு லட்சமாகலாம்! கணிப்பு
சென்னை: கொரோனா தொற்று, ரஷ்யா உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போதைக்கு ஒரு கிராம் தங்கத்தின் விலை 8300 வரை இருக்கும் நிலையில், ஒரு சவரன் 67 ஆயிரம் ரூபாயை விரைவில் தொட உள்ளது. இந்த நிலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை பத்தாயிரம் அல்லது ஒரு சவரன் ஒரு லட்சம் என்ற நிலை விரைவில் ஏற்படும் என்கின்ற பொருளாதார நிபுணர்கள்.
உலக அளவில் வர்த்தகத்தில் தங்கம் பெரும் பங்கு வகிக்கிறது. வெளிநாடுகளில் மிகச் சிறந்த முதலீடாக தங்கம் பார்க்கப்படுகிறது. போர், பொருளாதார சீரழிவு உள்ளிட்ட காலங்களில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிக்கும் தங்கம் மிகச்சிறந்த முதலாக ஒருபுறம் பார்க்கப்பட்டாலும், அதனை ஒரு கௌரவமாகவே பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இந்தியர்கள் தங்கத்தை வீடுகள், திருமணங்கள், விழாக்கள் என முக்கிய நாட்களில் அணிவரை மிகுந்த கவுரமாகக் கருதுகிறார். அதுவும் தமிழகத்தை பற்றி சொல்லவே தேவையில்லை. எந்த விசேஷமாக இருந்தாலும் தங்கத்தை சீர் செய்வதிலும், அதனை அணிந்து கொண்டு அழகு பார்ப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

வீட்டில் ஒரு பொட்டு தங்கமாவது இருக்க வேண்டும் என கூறுவதை பார்க்க முடியும். தற்போது உலக அளவில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருக்கிறது. தொடர்ந்து விலை அதிகரித்தாலும் மக்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆடம்பர தேவைக்கு என்று இல்லாமல் அதனை அவசர தேவைக்கு உதவும் பொருளாகவும் பார்க்கின்றனர். ஆனால் கடைசி 15 ஆண்டுகளில் தங்கத்தின் விலை சீராகவும், சற்று வேகமாகவும் உயர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, 2020ல் கொரோனா தொற்று, 2022ல் ரஷ்யா-உக்ரைன் போர், 2023ல் ரிசர்வ் வங்கியின் வட்டி உயர்வுகள் ஆகியவை காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக 2025ல் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தினமும் ஏறிக் கொண்டே இருக்கிறது. மே 2025 மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹67,000க்கு அருகே சென்றது. இதைத் தொடர்ந்து, மக்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது "ஒரு கிராம் தங்கம் ரூ.10,000 ஆகும் நாள் விரைவில் வருமா?" என்பது தான்.
கடந்த 15 வருடங்களில் தங்கத்தின் விலை உயர்வை பார்க்கும் போது அந்த நாள் விரைவில் வரும் என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள். 2010 ஆம் ஆண்டு ஒரு கிராம் தங்கத்தின் விலை 1400 ரூபாயாக இருந்த நிலையில், 2015ல் 2600 ஆகவும், 2020இல் 4400 ஆகவும், 2022-ல் 5000 ரூபாயாகவும், 2024ல் 6200 ஆக இருக்கிறது.
2025 மே மாதத்தில் மட்டும் ஒரு கிராம் தங்கத்தின் விலை 8300 வரை உயர்ந்து இருக்கிறது. இந்த பட்டியலை பார்க்கும் போது தங்கத்தின் விலை ஒவ்வொரு ஐந்து வருடங்களிலும் சராசரியாக இரண்டு மடங்காக உயர்ந்திருக்கிறது. தற்போதைய சூழலில் உலக சந்தை நிலவரம், அமெரிக்க டாலர் மதிப்பு, ரிசர்வ் வங்கியின் தங்க கொள்முதல், வங்கிகளின் வட்டி விகிதம், உலக பொருளாதார அவசர நிலை ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை நேரடியாக உயரம் எனக் கூறப்படுகிறது.
தற்போதைய சூழலில் ஒரு கிராம் 8,300 ஆக இருக்கும் நிலையில் பத்தாயிரம் ரூபாயை எட்ட 1700 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும். ஒரே வருடத்தில் 1500 ரூபாய் வரை தங்கத்தின் விலை அதிகரித்து இருப்பதை நாமே பார்த்திருக்கிறோம். அப்படி பார்க்கும்போது 2026 இறுதி அல்லது 2027 தொடக்கத்திற்குள் ஒரு கிராம் தங்கம் 10,000 ரூபாயை எட்டும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சம் ஆகும் நாள் மிகவும் அருகாமையிலேயே இருக்கின்றது என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.
குறிப்பாக இந்தியாவில் தங்கம் மீது உள்ள பேரன்பும், மணப்பெண்களுக்கு நகை வாங்கும் கலாசாரமும் தங்கத்திற்கு தொடர்ந்த தேவை ஏற்படுத்துகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10,000 ஆகி, ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும் நாள், சில ஆண்டுகளில் நிச்சயமாக வரக் கூடிய ஒன்று. முதலீட்டாளர்களும், பொதுமக்களும் இதனை முன்கூட்டியே புரிந்துகொண்டு தங்கள் முதலீட்டு திட்டங்களை திட்டமிடுவது நல்லது என்றும் சொல்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.


Click it and Unblock the Notifications
