Gold Rate: தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்கா? பொருளாதார நிபுணர் ராமசேஷன் சொல்வதை பாருங்க!
சென்னை: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தங்கத்தின் மீதான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தங்கம் விலையை குறைக்கும் வகையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்நிலையில், தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு பொருளாதார வல்லுநர் ராமசேஷன் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் பதில் அளித்துள்ளார்.
கேள்வி: தங்கம் விலை அசுர வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில் தங்கம் விலை குறைய வாய்ப்பு இருக்குமா? அதற்கு இந்த பட்ஜெட் வழிவகுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதில் எந்தவொரு மாற்றமும் இல்லையே?

பொருளாதார வல்லுநர் ராமசேஷன்: தற்போது தங்கத்துக்கு 6% சுங்க வரி, 3% ஜிஎஸ்டி வரி உள்ளது. இதனை குறைப்பதால் தங்கம் விலை குறையுமா எனக் கேட்டால் குறையாது. ஏனென்றால், யுஎஸ் டாலரை வைத்து கரன்சி அடிக்கும் நாடுகள் எல்லாம் தங்கத்தை வாங்கிக் குவித்து வருகின்றனர். நாடுகள் தங்கத்தை வாங்கும்போது டிமாண்ட் அதிகரிக்கிறது. டிமாண்ட் அதிகம் இருக்கும்போது சப்ளை குறைவாக இருப்பதால் விலை கடுமையாக உயர்கிறது.
உலக அளவிலேயே தங்கத்தின் விலை அதிகம் உள்ளது. இந்தியாவில் கொஞ்சம் கூடுதலாக இருப்பதற்கு காரணம் டாலர் - ரூபாய் வித்தியாசம். டாலர் மதிப்பு சரியும்போது தங்கம் விலை சற்று குறையும். இறக்குமதி வரியால் தங்கம் வரியால் பெரிய மாற்றம் நிகழப்போவது இல்லை என்பதால் அதில் மாற்றம் இல்லாமலே வைத்துவிட்டார்கள். இங்கும் டிமாண்ட் அதிகம் இருப்பதால் தங்கம் விலை ஏறிக்கொண்டே சொல்கிறது.
கேள்வி: சாமானிய மக்கள் தங்கம் வாங்கவே முடியாதா?
ராமசேஷன்: உண்மையைச் சொல்லவேண்டும் என்றால் சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியாது. கல்யாணத்துக்கு சுமார் 30 சவரன் தங்க நகை வாங்க வேண்டுமென்றால் 45 லட்சம் வரை ஆகிறது. தங்கம் விலை குறையுமா எனக் கேட்டால் அதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்த 9 மாதங்களுக்கு தங்கம் விலை குறைய வாய்ப்பே இல்லை.
தங்கம் விலையை விடுங்கள். வெள்ளி விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. குறுகிய கால முதலீடுகளுக்கு வெள்ளியை நிச்சயம் நம்பலாம். வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்க பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளி, தங்கம் போல மிகவும் மதிப்புமிக்க உலோகமாக மாறும் சூழல் உள்ளது.
கேள்வி: சாமானியர்களுக்கு பயனுள்ள பட்ஜெட்டாக இன்றைய பட்ஜெட் உள்ளதா?
ராமசேஷன்: நேரடி வரியில் என்ன குறைப்பார்கள் என்பது தான் சாமானியர்களுக்கு நேரடியாக பயனளிக்கக்கூடியது. அதில் இந்த ஆண்டு ஒரு சலுகையும் இல்லை. அது ஏமாற்றம் தான். கார்ப்பரேட் வரி 22% ல் வைத்து தற்போது மாற்றம் இல்லை. சாமானியர்களைப் பொறுத்தவரை எதிர்பார்ப்புக்கும் பட்ஜெட்டுக்கும் பெரிய இடைவெளி. அமெரிக்க அதிபர் டிரம்ப் 50% வரி போட்டதால் என்ன தாக்கம் என்றால், தங்க நகைகள், மருந்துகள், தோல் உள்ளிட்ட துறைகள் அடி வாங்கின.
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications