சென்னையில் மழை வெள்ளம் ஏற்பட்டால் கோட் சூட்டுடன் போவாரா? விஜய்யை மறைமுகமாக விமர்சித்த அண்ணாமலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய், தான் பதவியேற்றதில் இருந்து கோட் சூட் காஸ்ட்யூமுடன் இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னையில் மழை வெள்ளம் தேங்குகிறது. 40 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தால் இந்த நிலை மாறவில்லை.. இன்னும் சில மாதங்களில் இன்று கோட் சூட் அணிந்துள்ள முதல்வர் இதனை பார்வையிடுவாரா? என்று விமர்சித்து பேசியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து வெள்ளை நிற சட்டையும், காக்கி நிற பேண்டும் அணிவதை வழக்கமாக வைத்து இருந்தார். பிரசாரம், மாநாடு என மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக விஜய் இதனை பாலோ செய்து வந்தார். இதனால் விஜய்யின் இந்த காஸ்ட்யூமை அப்படியே அவரது ரசிகர்கள், தொண்டர்களும் ஃபாலோ செய்து அணியத் தொடங்கினர். சிலர் இதனை ஆந்திரபிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காஸ்ட்யூம் எனவும் விமர்சித்து இருந்தனர்.

Annamalai Indirect Swipe at Vijay

குறிப்பாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலிலும் கூட இளைஞர்கள் பலர் இதே காஸ்டியூமில் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்ததையும் பார்க்க முடிந்தது. தற்போது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவியேற்றுள்ள விஜய் கோட், சூட் அணிந்தது பலரது மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது. நேற்று முதல்வராக பதவியேற்றதில் இருந்து இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றது, முன்னாள் முதல்வர் ஸ்டாலின், வைகோ, அன்புமணி, சீமான் என தலைவர்களை மரியாதை நிமித்தமாக அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்தது வரை அனைத்து நிகழ்வுகளிலும் விஜய் கோட் சூட் காஸ்ட்யூமிலேயே இருந்தார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னும் ஓரிரு மாதங்களில், சென்னையில் மழை வெள்ளம் வரும் போது, இதே கோட் சூட்டுடன் சென்று பார்வையிடுவாரா என விமர்சித்து பேசியுள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் நடந்த விவாத நிகழ்வில் பங்கேற்றார். அவருடன் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, காங்கிரஸ் சசி தரூர் ஆகியோர் இந்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அப்போது, "இன்னும் இரு மாதங்களில் சென்னையில் மழை வெள்ளம் ஏற்படும் போது, அப்போதும் கோட் சூட் அணிந்தபடி முதல்வர் களத்தில் இருப்பாரா.." என கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் கூறுகையில், 'கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் கருணாநிதி வேட்டி அணிந்து சென்னை வெள்ளத்தை பார்வையிட்டார்.. 2000 ஆம் ஆண்டுகளில் மு.க ஸ்டாலின் வேட்டி அணிந்து சென்னை வெள்ளத்தை பார்வையிட்டார்.. தற்போது உதயநிதி சென்னை வெள்ளத்தை பார்வையிட்டார்.. 40 ஆண்டுகளாக ஒரு குடும்பத்தால் இந்த நிலை மாறவில்லை.. நாளை கோட் சூட் அணிந்த முதல்வரும் வெள்ளத்தை பார்வையிடுவாரா?’ என்று விஜய் பெயரை குறிப்பிடாமல் பேசியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+