மத்தளத்துக்கு 2 இடி.. விஜய் கூட்டணிக்கு வந்தாலும், வராவிட்டாலும் சிக்கல்.. அப்ப எடப்பாடி பழனிசாமி?
சென்னை: விஜய் பெயரை முதலமைச்சர் பெயரை சொல்லவில்லை என்றாலும், தவெக பேச்சு இன்று சட்டமன்றத்தில் எதிரொலித்திருக்கிறது.. அதைவிட முக்கியமாக, தமிழகத்தின் முக்கியமான எதிர்க்கட்சி, தவெகவுக்கு ஆதரவாக சட்டமன்றத்திலேயே கருத்து கூறும் நிலைமைக்கு வந்துட்டாங்க.. ஆனால், அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தாலும் எடப்பாடிக்கு சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்தான் என்று கருத்து கூறியிருக்கிறார் பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.
ஒரு தனியார் யூடியுப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், "விஜய் இப்போதுவரை சைலண்ட்டாக இருக்கிறார்.. இப்படி சைலண்ட்டாக இருப்பதுதான் அவரது சினிமாத்தனம்.. அமைதியாக இருப்பதன் மூலமாக, வழிந்து வழிந்து செல்கிறார்கள்.. ஆனால், பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தனக்கு இத்தனை சீட் வேண்டும் என்று கேட்டால் அதிமுக பதில் என்னவாக இருக்கும்?

இப்போது திமுகவுக்கு தர்மசங்கடம் உள்ளது.. ஆரம்பத்தில் விஜய்க்கு பதில் சொல்லாமல் புறக்கணித்து வந்தார்கள்.. பிறகு பிரச்சனைகள் வந்துள்ள நிலையில், பதில் சொல்லாமல் விட்டாலும் தொல்லையாயிடும்.. எனவே பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது.. சட்டமன்றத்திலேயே இல்லாத ஒரு கட்சி நடத்தியிருந்த பிரச்சார கூட்டத்தை பற்றி, இன்று சட்டமன்றத்தில் பேச வேண்டிய நிலைமை வந்துவிட்டது.
எடப்பாடிக்கு தான் சிக்கல்
விஜய் பெயரை முதலமைச்சர் பெயரை சொல்லவில்லை என்றாலும், தவெக பேச்சு சட்டமன்றத்தில் எதிரொலித்தது.. அதைவிட முக்கியமாக, தமிழகத்தின் முக்கியமான எதிர்க்கட்சி, தவெகவுக்கு ஆதரவாக சட்டமன்றத்திலேயே கருத்து கூற நிலைமைக்கு வந்துட்டாங்க.. ஆனால், அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தாலும் எடப்பாடிக்கு சிக்கல்.. வராவிட்டாலும் சிக்கல்தான்..
விஜய் 100 சீட் கேட்பதாக வைத்து கொண்டால், அதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும்? பாஜக கேட்கும் சீட்டையும் அதிமுக தந்துதானே ஆக வேண்டும்? அன்புமணிக்கும் சீட் தந்தாக வேண்டுமே?
துண்டு விழுந்தது
திமுகவுடன் ஒப்பிடும்போது, அதிமுக, பாஜக கூட்டணியில் துண்டு விழுந்துள்ளது.. இந்த இடைவெளியை விஜய் வந்து நிறைவேற்றுவார் என்று என்டிஏ எதிர்பார்க்கிறது..
ஆனால், ஒரு நடிகர் முதன்முதலாக கட்சி ஆரம்பித்துள்ள நிலையில், அவருடைய எதிர்பார்ப்பே இயல்பாகவே அதிகரிக்கும்.. கரூர் சலசலப்புக்கு பிறகும்கூட, தவெக என்ற கட்சியின் பெயர் இன்று தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் போய் சேர்ந்துவிட்டது.
இப்படித்தான் அன்று அண்ணாமலை வந்ததுமே, தமிழகபாஜகவின் பெயர் மூரலை முடுக்கெல்லாம் போனது.. அப்போது அண்ணாமலை மேலிட பாஜகவிடம், தனித்து போட்டியிடுவோம், நம் தலைமையிலேயே கூட்டணி அமைக்கலாம் என்றார்.
நிறைவேற்ற முடியாத கண்டிஷன்
யாராக இருந்தாலும் இப்படித்தான் முடிவெடுப்பார்கள்.. அதுபோலதான், தவெக மூலை முடுக்கியுள்ள பரவியிருக்கும் நிலையில், விஜய்யும் அதுபோல முடிவெக்கவே செய்வார்.. 150 சீட் வேண்டும், தான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்றெல்லாம் நிறைவேற்ற முடியாத அளவுக்கு கண்டிஷனை போட்டால் அதிமுக என்ன செய்யும்?
விஜய், அதிமுக, பாஜக, பாமக கூட்டணிக்கு வந்துவிட்டார் என்றே வைத்து கொள்வோம்.. இவர்கள் அனைவரும்சேர்ந்து 45 சதவீத வாக்குகளை எடுத்தாக வேண்டும். அதிமுகவுக்கென்று ஒரு ஓட்டு வங்கி தமிழகத்தில் உள்ளது. ஆனால், மேற்கண்ட கட்சிகள் அனைத்தும் ஒன்று சேரும்போது, அதிமுக வாக்கு வங்கி சரியும்.
அதிமுக, பாஜகவினர் அதிருப்தி?
எப்படி தெரியுமா? உதாரணத்துக்கு விஜய் கட்சிக்கு 60 சீட்டுகளை தருவதாக வைத்து கொள்வோம்.,. அந்த 60 தொகுதிகளிலும் அதிமுக தொகுதிகளும் இடம்பெற்றிருக்கும்.. அந்த 60 தொகுதிகளிலும் பாஜக தொகுதிகளும் இடம்பெற்றிருக்கும்..
அப்படியானால் வரப்போகும் தேர்தலுக்காக அதிமுக, பாஜகவினர் அந்த 60 தொகுதிகளிலும் 5 வருடங்களாக காத்திருக்கும்போது, இப்போது திடீரென வந்த புது கட்சிக்கு சீட்டுகளை அள்ளி தந்தால் அதிமுக, பாஜகவினர் எப்படி தேர்தல் வேலை பார்ப்பார்கள்? மாற்று கட்சியை வெற்றி பெற வைக்க யாருமே விரும்ப மாட்டார்கள்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications