ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று கிடைக்குமா? சென்னை ஹைகோர்ட்டில் நாளை காலை விசாரணை
சென்னை: விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரிய மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ளது. முன்னதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தது. மேலும் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு பட தயாரிப்பு நிறுவனத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9 ஆம் தேதி பொங்கல் ரீலிசாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த படத்திற்கு சென்சார் சான்று கிடைக்காததால் படம் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு
படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என்று சென்சார் வாரியம் கூறியதால் சென்சார் சான்று வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, ஜனநாயகன் பட நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜனநாயகன் படத்திற்கு உடனே யுஏ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில், டிவிஷன் பெஞ்சில் சிபிஎப்சி சார்பில் முறையீடு செய்யப்பட்டது. சிபிஎப்சியின் முறையீட்டை உடனடியாக ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவத்ஸ்வா, அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்ததோடு, மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.
நாளை காலை 11.30 மணிக்கு விசாரணை
இதற்கிடையே, பட நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு பட தயாரிப்பு நிறுவனத்தை அறிவுறுத்தியது. இந்த நிலையில், தான் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜனநாயகன் படம் தொடர்பான வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது.
தலைமை நீதிபதி எம். ஸ்ரீவத்ஸ்வா, அருள் முருகன் அமர்வு முன்பு வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நாளை காலை 11.30 மணியளவில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதனால் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்று அளிப்பது தொடர்பாக உத்தரவு எதுவும் வருமா? என்ற எதிர்பார்ப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ












Click it and Unblock the Notifications