Sangeetha Vijay: பிரிட்டன் பயணத்தில்! லண்டனில் உள்ள மனைவி சங்கீதாவை சந்திக்கிறாரா விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலீடுகளை ஈர்க்க பிரிட்டன் பயணம் மேற்கொள்ளும் முதல்வர் விஜய், தனது மனைவி சங்கீதாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரும் 10 ஆம் தேதி விஜய் பிரிட்டன் செல்கிறார்.

தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக முதல்வர் விஜய் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி பிரிட்டன் செல்கிறார். இதற்காக அவர் நேற்றைய தினம் அண்ணா சாலையில் உள்ள வட்டார கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு (Regional passport Office) வருகை தந்திருந்தார்.

Vijay Sangeetha

அப்போது அவர் டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்க வந்திருந்தார். ஏற்கெனவே அவரிடம் பாஸ்போர்ட் இருந்தாலும் முதல்வர்கள், அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு பிரத்யேக பாஸ்போர்ட்டில்தான் செல்ல வேண்டும். அதற்குதான் நேற்று விஜய் விண்ணப்பித்திருந்தார்.

விஐபிகளுக்கான முறையில் அவருக்கு ஓரிரு நாட்களில் பாஸ்போர்ட் வழங்கப்படும். இந்த பிரத்யேக பாஸ்போர்ட் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

விஜய் எவ்வளவு முதலீடுகளை ஈர்த்து வருவார் என்பதை காட்டிலும் சிலருக்கு அவர் லண்டனில் உள்ள மனைவி சங்கீதாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்பதற்கு முன்பே அதாவது சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே அவரிடம் இருந்து விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் சங்கீதா மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தனது கணவர் விஜய்க்கு வேறு ஒரு நடிகையுடன் தகாத உறவு இருக்கிறது. இதனால் என்னை புறக்கணிக்கிறார். அந்த நடிகையுடன் அவர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்கிறார். அவ்வாறு பயணம் செய்யும் போது பல்வேறு புகைப்படங்களை அவர் சமூகவலைதளங்களில் வெளியிடுவது தனக்கும் தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாக கூறியிருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கு 3 முறை விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்கு வந்த போது இருவரும் நேரில் ஆஜராகாமல், அவர்களது வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர். இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி வழங்குமாறு தரப்புகள் கோரிக்கை வைத்திருந்தன.

பின்னர் கடந்த ஜூன் 15 ஆம் தேதி நடந்த விசாரணையின் போது நீதிபதி சில நடைமுறை கேள்விகளை எழுப்பியதுடன் இருவரையும் சமரச மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். பின்னர் வழக்கு ஆகஸ்ட் 7ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்வர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என அவரது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்று வழக்கை முடித்து வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தனது தாய், தந்தையின் இணக்கம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்திருந்தார். எனவே அவர் தலையிட்டு சமரசம் செய்ததன் காரணமாக சங்கீதா வாபஸ் பெற்றிருக்கலாம் என சொல்லப்படுகிறது. மேலும் விவாகரத்து பெறுவதில் விஜய்க்கு உடன்பாடு இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+