அதிமுக கூட்டணியில் கமலும் வரலாம்… எதுவும் நடக்கலாம்.. அமைச்சர் ஜெயக்குமார் பளிச் பேட்டி
சென்னை:அதிமுக கூட்டணியில் கமலுக்கு இடம் அளிக்கப்படுமா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் 160வது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், சென்னையில் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களுஙககுஇ பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:அதிமுக யானை பலத்துடன் கூடிய கூட்டணியை அமைக்கும். புதிதாக அமையும் மத்திய அரசில் அதிமுகவின் பங்கு நிச்சயமாக இருக்கும்.
ஸ்டாலின் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் விமர்சித்திருப்பது சரியானது தான். அப்போது அதிமுக கூட்டணியில் கமலுக்கு இடம் அளிக்கப் படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசியலில் எதுவும் நடக்கலாம்.
அதிமுகவின் அரசியல் எதிரிகள் என்று பார்த்தால் அது திமுக, அமமுக மட்டுமே. எனவே வரும் லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையில் தான் போட்டி என்றும் அவர் தெரவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications