சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஹா.. கமலுக்கு அடித்த "திடீர்" ஜாக்பாட்.. "அவரை" மட்டும் உள்ளே இழுத்தால்.. ஒரே கல்லில் பல மாங்காய்!

Google Oneindia Tamil News

சென்னை: கமல்ஹாசன் கூட்டணிக்கு திடீர் ஜாக்பாட் அடித்துள்ளது. கமல் கட்சியைப் போலவே ஓரளவு வாக்கு வங்கி உள்ள கட்சி தேமுதிக. எனவே இப்போதைய நிலையில் தேமுதிகவை தனது கூட்டணிக்குள் கமல் சேர்த்துக் கொண்டால் கூட்டணி பலம் பெறுவதோடு திமுக, அதிமுகவுக்கும் சில பல தொகுதிகளில் இழப்பை ஏற்படுத்த முடியும்.

இது பாசிபிளா என்று கேட்டால் நிச்சயம் சாத்தியம்தான். வட மாவட்டங்களில் ரொம்ப காலமாகவே பாமகவுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வரும் கட்சி என்றால் அது தேமுதிக மட்டும்தான்.

உண்மையில் பாமகவுக்கு மாற்று கட்சி போலவே தேமுதிக மாறி வந்தது. ஜெயலலிதா புண்ணியத்தால் அந்த மாயை உடைக்கப்பட்டு இன்று பத்தோடு பதினொன்றாக மாறி நிற்கிறது தேமுதிக.

அன்னைக்கு ராத்திரி.. சுதீஸோடு நடந்த மீட்டிங்.. அப்பவே மனசை விட்ட தேமுதிக.. பரபரக்கும் பின்னணி! அன்னைக்கு ராத்திரி.. சுதீஸோடு நடந்த மீட்டிங்.. அப்பவே மனசை விட்ட தேமுதிக.. பரபரக்கும் பின்னணி!

 தேமுதிக

தேமுதிக

அதேசமயம், அது முழுவதும் பலமிழந்தும் போய் விடவில்லை. இன்னும் தமிழகம் முழுவதும் பரவலாக ஓரளவுக்கு உயிர்ப்போடுதான் இருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் படு தோல்வி அடைந்தது. அதற்கு 2.19 சதவீத வாக்குகளே கிடைத்தன.

 விஜயகாந்த்

விஜயகாந்த்

அதாவது, தமிழகம் முழுவதும் கிராமப்புறங்கள் வரைக்கும் கிளைகள் உள்ள கட்சி என்றால் தேமுதிகவைச் சொல்லலாம். அந்த வகையில் தேமுதிக உடன் இருப்பது ஓரளவுக்கு பலம்தான். சொற்ப வாக்குகளில் பல தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை மாற்றக் கூடிய கட்சிகளில் ஒன்றாக தேமுதிக இன்னும் கூட இருக்கிறது.

 தேமுதிக

தேமுதிக

இந்த நிலையில் இப்டிப்பட்ட ஒரு கட்சி உடன் இருப்பது எந்தக் கூட்டணியாக இருந்தாலும் அதற்குப் பலம்தான். அந்த வகையில் கமல்ஹாசனின் கூட்டணியில் தேமுதிகவையும் இணைக்கலாம். ஏற்கனவே சரத்குமார் இடம் பெற்றுள்ளார். இந்திய ஜனநாயகக் கட்சியும் இருக்கிறது. கூடவே தேமுதிகவையும் சேர்த்து அப்படியே கருணாஸ் உள்ளிட்டோரையும் வாரிப் போட்டால் இது ஒரு வித்தியாசமான கூட்டணியாக மாறக் கூடும். இதில் இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டி உள்ளது..

 சரத்குமார்

சரத்குமார்

கடந்த எம்பி தேர்தலின்போதே, கமல் விஜயகாந்த்துடன் கூட்டணி அமைப்பதாக சொல்லப்பட்டது.. அப்போதே சரத்குமாரும் விருகம்பாக்கம் வீட்டுக்கு சென்று விஜயகாந்த்தை சந்தித்தார்.. ஒரே துறை என்றாலும், அரசியலும் விஜயகாந்த் மீது கமலுக்கும், சரத்குமாருக்கும் நன்மதிப்பும் பாசமும் உள்ளதை மறுக்க முடியாது. ஒருவேளை இவர்கள் கூட்டணி அமைத்தால், இந்தக் கூட்டணியால் எத்தனைத் தொகுதிகளில் வெல்ல முடியும் என்பதை விட எத்தனை தொகுதிகளில் இவை வெற்றி தோல்வியை நிர்ணயிக்கப் போகிறதோ என்ற விவாதம்தான் பலமடையும்... அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் தானே.. பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
Will Kamalhasan alliance with DMDK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X