கம்ருதீன், விஜே பார்வதி கைதாகிறார்களா? விஜய் டிவி பிக்பாஸ் விஜய் சேதுபதிக்கு சமூக பொறுப்பு இல்லை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் சமீபத்தில் நடந்த "கார் டாஸ்க்" பிரச்சனைகள் மற்றும் போட்டியாளர்களின் நடத்தை குறித்து மூத்த வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலரான ஆர்.எஸ். தமிழ்வேந்தன் அவர்கள் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். கஞ்சா, மது எனச் சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்களை இத்தகைய ஆபாசக் காட்சிகள் மூலம் மேலும் தள்ளாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.. அவரது பேட்டியின் முக்கிய விவரங்கள் இதோ:
King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்வேந்தன், "கார் டாஸ்க் பார்ப்பதற்கே படபடப்பாக இருந்தது.. எம்.ஆர். ராதா பெண் குரலில் பேசுவது போல பார்வதியின் குரல் உள்ளது..

பீச்சில் ஆணுறையை எடுத்து காட்டி இது என்ன தெரியுமா? என்று ஆண்களிடம் கேட்டு , அதனை நிகழ்ச்சியாக நடத்தியவர்.. கடந்த 5 வருடங்களில் தாய்லாந்து பயணம், சொகுசு கார், தாய்லாந்து ட்ரிப், ஜீப் கார், லைஃப் ஸ்டைல், ஆடை, அலங்காரம் என பொருளாதார ரீதியாகப் பெரிய வளர்ச்சி பெற்றார்...
சான்ட்ராவுக்கு வந்த வலிப்பு
சான்ட்ராவை கீழே தள்ளியபோது, அங்கிருந்தவர்கள் தப்பு பாரு, தப்பு என்று கத்துகிறார்களே தவிர, பார்வதி கன்னத்தில் பளார் என்று அறை விட முடியாதா? ஒரு கார் விபத்து நடந்தால் கூட ஓடிப்போய் உதவி செய்வோம், ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்கள் சான்ட்ராவைத் தூக்காமல் பார்வதியைப் பார்த்துக் கத்திக் கொண்டிருக்கிறார்கள்.. அல்லது சான்ட்ரா கீழே இறங்க வேண்டியதுதானே? அதென்ன ஷேர் ஆட்டோவா இடம் பிடித்து உட்கார?
சான்ட்ரா கீழே விழுந்தவுடன் அவருக்கு வலிப்பு வருகிறது.. உடனே ஓடுகிறார்கள், தண்ணீர் எடுத்து முகத்தில் தெளிக்கிறார்கள்? அந்தப் பிள்ளை போதையில் விழுந்து கிடக்கிறாரா என்ன?
கமருதீன் - ஹராம்
கமருதீன் என்பது ஒரு இஸ்லாமியப் பெயர்.. இது போன்ற ஆபாசமான அல்லது வன்முறை நிறைந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது அந்த மார்க்கத்தின்படி 'ஹராம்'.. தடை செய்யப்பட்டது... அவர் அந்த மார்க்கத்தையே மதிக்கவில்லை..
முந்தைய சீசன் போட்டியாளர் மும்தாஜ் இன்று தனது தவறை உணர்ந்து புர்கா அணிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.. ஆனால் கமருதீன் போன்றவர்கள் இன்னமும் இப்படி அநாகரிகமாக நடந்துகொள்கிறார்கள். பார்வதியும் கமருதீனும் காதல் செய்கிறார்கள்.. மடியில் உட்காருவது போன்ற செயல்கள் காதலாகாது..
விஜய் சேதுபதி
விவசாயத்தில் டீசல் விலை உயர்வு, மழையினால் ஏற்படும் பாதிப்புகள், தேர்தல், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு, எஸ்ஐஆர் என நாடு பல்வேறு பிரச்சனைகளில் இருக்கும்போது, இளைஞர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் மூழ்கிக்கிடப்பது வேதனையளிக்கிறது.
அதேபோல கமருதீன், பார்வதி மிக அசிங்கமான, பச்சையான வார்த்தைகளை பேசுகிறார்கள்.. தனிமனிதர்களின் அந்தரங்கமான அல்லது ஆபாசமான விஷயங்கள் ரசிக்கக்கூடிய பொருளாக மாறிவிடக்கூடாது; இது வளரும் சிறுபிள்ளைகளுக்குத் தவறான முன்மாதிரியாக அமையும்.. இவர்களும், இந்த நிகழ்ச்சியும், நிகழ்ச்சி நடத்தும் விஜய் சேதுபதி போன்றோர் எல்லாம் சமுதாயத்தை விட்டு ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள்..
சுயமோட்டோ (Suo Motu) வழக்கு
ஒரு விபத்து அல்லது வன்முறை நடந்தால் அதைத் தவிர்க்காமல், டிஆர்பிக்காக அதை ஒளிபரப்புவது தவறு.. நிகழ்ச்சி நடக்கும் ஸ்ரீபெரும்புதூர் எல்லைக்குட்பட்ட இன்ஸ்பெக்டர், பிக் பாஸ் வீட்டிற்குள் புகுந்து பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டிருக்க வேண்டும்.. பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவ சிகிச்சை அளிக்க செய்து, தாக்கியவர்கள் மற்றும் நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஒரு விபத்தோ அல்லது காயமோ ஏற்படும்போது யாராவது புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லை, சட்டம் ஒழுங்கை பொறுத்தவரை காவல்துறையே முன்வந்து வழக்குப் பதிவு செய்வார்கள்.. அதுபோல காயம் ஏற்படுத்துபவர்கள் மீதும் போலீஸே முன்வந்து வழக்கு பதிவு செய்யலாம்.. அந்தவகையில் விஜே பார்வதி, கமரூதீன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீதும் வழக்கு பதிய வேண்டும்
இது ஒரு விளையாட்டு என்று சொல்லப்பட்டாலும், ஒருவேளை யாராவது ஒருவருக்குக் கழுத்திலோ அல்லது நெஞ்சிலோ பலமான அடிபட்டு உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பு?
தயாரிப்பாளர்களுக்குக் கேள்வி
இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் லாபத்தை வைத்து ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கப் போகிறீர்களா? வெறும் காசு சம்பாதிக்க ஒரு குடும்பத்தையே கெடுப்பது நியாயமா?
"பிடிக்காவிட்டால் சேனலை மாற்றிவிடுங்கள்" என்று சொல்வது தீர்வாகாது.. ஒரு குப்பையை அணைத்தால் இன்னொரு இடத்தில் இன்னொரு குப்பை ஓடிக்கொண்டிருக்கிறது.. ஏற்கனவே கஞ்சா, மது எனச் சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்களை இத்தகைய ஆபாசக் காட்சிகள் மூலம் மேலும் தள்ளாதீர்கள்..
பிக் பாஸ் வீட்டிற்குப் பதில், போட்டியாளர்களை ஒரு வயலில் இறக்கி, நாற்று நட்டு, 120 நாட்கள் விவசாயம் செய்யச் சொல்லுங்கள். அது சமூகத்திற்குப் பயனுள்ள ஒரு முன்மாதிரியாக இருக்கும். விஜே பார்வதி போன்றவர்களை ஏர் ஓட்ட சொன்னால் தான் கஷ்டம் தெரியும்.. இதுபோன்ற குப்பைத் தொட்டி நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும்..
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications