கர்நாடகா தந்த நம்பிக்கை.. மொத்தமாக உயர்த்தப்பட்ட டெஸ்டிங்.. முழு லாக்டவுன் தளர்வுக்கு தமிழகம் ரெடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மொத்தமாக லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. இதற்கான ஆலோசனைகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் தற்போது தளர்வுகளுடன் கூடிய கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளது. சென்னையில் முழு லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் தற்போது தளர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவும் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

மற்ற மாவட்டங்களில் மட்டும் தற்போது தமிழகத்தில் கேஸ்கள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுக்க தற்போது இதனால் அடிப்படை செயல்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு, தளர்வுகளுடன் லாக்டவுன் உள்ளது.

கேஸ்கள் வருகிறது

கேஸ்கள் வருகிறது

சென்னையில் கேஸ்கள் இப்படி குறைந்து வந்தாலும் இன்னொரு பக்கம் மற்ற மாவட்டங்களில் கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 5849 பேருக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 186492 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.சென்னையில் 89561 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 1184 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

மோசம்

மோசம்

சென்னையை விட மற்ற மாவட்டங்களில் தமிழகத்தில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இந்த நிலையில் ஜூலை 31-க்கு பின் தமிழகத்தில் கொரோனா தளர்வுகளை கொண்டு வர திட்டமிட்டுள்ள, மொத்தமாக கொரோன லாக்டவுன் கட்டுப்பாடு கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதற்காக தமிழக அரசு இரண்டு விதமான திட்டங்களை வைத்து இருப்பதாக கூறுகிறார்கள்.

திட்டம் 1 என்ன

திட்டம் 1 என்ன

தற்போது தமிழகத்தில் கொரோனா சோதனைகள் அதிகமாக்கப்பட்டுள்ளது . தினசரி சோதனை 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ஆக உயர்த்தப்பட்டு, மொத்தமாக பாதிப்பு 60 ஆயிரமாக உயர்ந்துள்ளது. தினமும் 60+ சோதனைகளை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது . இதன் மூலம் தமிழகம் முழுக்க எவ்வளவு கேஸ்கள் பரவி உள்ளது. சமூக பரவல் எப்படி உள்ளது என்று கண்டுபிடிக்க முடியும்.

கேஸ்கள் அதிகம் இருந்தால்

கேஸ்கள் அதிகம் இருந்தால்

இந்த கடைசி ஒரு வாரம் தினமும் 60 ஆயிரம் + சோதனைகளை செய்வார்கள். இதன் மூலம் கொரோனா பரவல் எப்படி உள்ளது என்று கண்டுபிடிக்க முடியும். தினமும் கேஸ்கள் அதிகரித்தால், அதாவது அடுத்த 7 நாட்கள் தினமும் கேஸ்கள் அதிகரித்தால், லாக்டவுனை மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதனால்தான் டெஸ்ட்களை உயர்த்தி, நிலைமை எப்படி உள்ளது என்பதை சோதனை செய்கிறார்கள்.

கேஸ்கள் குறைவாக இருந்தால்

கேஸ்கள் குறைவாக இருந்தால்

அதே சமயம் இன்னொரு பக்கம் அடுத்த 7 நாட்கள் டெஸ்ட்களை உயர்த்த உயர்த்த கொரோனா கேஸ்கள் குறைவாக இருந்தால், லாக்டவுன் தளர்வு மொத்தமாக கொண்டு வரப்படும். அதாவது அதிக டெஸ்ட்கள் செய்யப்பட்டும் கொரோனா கேஸ்கள் வரும் நாட்களில் குறைவாக வந்தால், கண்டிப்பாக முழு லாக்டவுன் தளர்வு கொண்டு வரப்படும் என்கிறார்கள்.

படிநிலைகள் எப்படி

படிநிலைகள் எப்படி

பின்வரும் முடிவுகளை டெஸ்ட்களை பொறுத்து எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.

1. அதிக கொரோனா டெஸ்ட் - அதிக கேஸ்கள் - நீடிக்கப்படும் லாக்டவுன்

2. அதிக கொரோனா டெஸ்ட் - குறைவான கேஸ்கள் - லாக்டவுன் முடிவிற்கு வரும்.

கர்நாடகா நம்பிக்கை கொடுக்கிறது

கர்நாடகா நம்பிக்கை கொடுக்கிறது

இன்னொரு பக்கம் இதில் கர்நாடகா தமிழகத்திற்கு நம்பிக்கை அளித்து இருக்கிறது. கர்நாடகாவில் மொத்தமாக லாக்டவுன் தளர்வு கொண்டு வரப்பட்டு உள்ளது. லாக்டவுன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாது என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார். இதனால் கர்நாடகாவை பின்பற்றி தமிழகத்திலும், குறைந்தது சென்னையிலாவது லாக்டவுன் தளர்வுகள் மொத்தமாக அமலுக்கு வரும் என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+