Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் விரைவில் உருவாகும் புதிய மாவட்டம்? அதுவும் அந்த நகரமா? இது லிஸ்ட்லயே இல்லையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் விரைவில் புதிய மாவட்டம் ஒன்று உருவாகலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த முடிவு இன்னும் ஆலோசனை அளவிலேயே உள்ளது.

தமிழ்நாட்டில் 11 நகராட்சிகள் தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பழனி, திருச்செங்கோடு, குன்றத்தூர், உடுமலைப்பேட்டை, நந்திவரம்-கூடுவாஞ்சேரி, பல்லடம், ராமேஸ்வரம், மாங்காடு, வெள்ளக்கோயில், அரியலூர், அம்பாசமுத்திரம் ஆகிய நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

மாநில அரசு நிர்ணயித்த வருவாய் அளவுக்கு உட்பட்டு இருந்ததால் நகராட்சிகளின் தரம் உயர்த்தப்பட்டன; சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பின்படி நகராட்சிகளின் தரத்தை உயர்த்தியது தமிழ்நாடு அரசு.

இந்த நிலையில்தான் விரைவில் புதிய மாவட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த ஆட்சியில் ராணிப்பேட்டை உள்ளிட்ட பல புதிய மாவட்டங்கள் உருவாகின. ஒன்றுபட்ட வேலூர் மாவட்டத்திலிருந்து நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. இந்த நிலையில் அதே போல புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

Will Mannargudi be announced as the new districts in Tamil Nadu soon

அந்த வகையில் கும்பகோணம் மாவட்டம் உருவாக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டம், கும்பகோணம் மாநகராட்சி மற்றும் கும்பகோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவை அமைந்து உள்ளன. இந்த கும்பகோணத்தை தனி மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. தனி மாவட்டம் வேண்டும், நாங்கள் மிகப்பெரிய நகரம். மற்ற பல மாவட்டங்களை விட நல்ல வருவாய் ஈட்டுகிறோம்.

கடந்த ஆண்டு கூட கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் எண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக எம்.எல்.ஏ.அன்பழகன் கோரிக்கை விடுத்தார். இதற்கு அரசு செவி சாதிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏன் கும்பகோணம்

மற்ற மாவட்டங்களை விட அதிக வருமானம் ஈட்டி வருகிறோம். அப்படி இருக்கும் போது எங்களுக்கு மட்டும் மாவட்ட அந்தஸ்து கொடுக்காமல் இருப்பது ஏன் என்று கும்பகோணம் மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதோடு கும்பகோணம் மக்கள் பொதுவாக ஆட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் கூட தஞ்சாவூர் செல்ல வேண்டி உள்ளது.

இதற்கு கிட்டத்தட்ட 1 மணி நேரம் வரை ஆகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் கும்பகோணத்தை உடனே மாவட்டமாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். விரைவில் அது தொடர்பான அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மன்னார்குடி மாவட்டம்

இப்படிப்பட்ட நிலையில்தான் கும்பகோணத்திற்கு பதிலாக மிக வேகமாக வளர்ந்து வரும் மன்னார்குடியை மாவட்டமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதாவது பட்டுக்கோட்டை உள்ளட்ட பகுதிகளை உள்ளடக்கி மன்னார்குடி மாவட்டத்தை உருவாக்க அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

மன்னார்குடியில் புதிய பேருந்து நிலையம், அவுட்டர் ரிங் ரோடு, விரைவில் டைடல் பார்க் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இவை காரணமாக மன்னார்குடி வேகமாக வளர்ச்சி அடையும் சூழல்கள் உள்ளன. இதனால் தமிழ்நாட்டில் விரைவில் புதிய மாவட்டமாக் மன்னார்குடி உருவாகலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த முடிவு இன்னும் ஆலோசனை அளவிலேயே உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+