வாய் விட்டு கேட்ட வைகோ.. டக்குன்னு பதில் சொல்ல முடியாமல் அமைதி காத்த ஸ்டாலின்.. கேட்டது கிடைக்குமா?
வைகோ திமுகவிடம் 20 சீட்டுக்களை கேட்டு வருகிறாராம்
சென்னை: வைகோவின் சீட் கோரிக்கையை கேட்டு முக ஸ்டாலின் அப்படியே அமைதியாகிவிட்டாராம்.. இன்னும் அதைபற்றி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை என்கிறார்கள்.
Recommended Video
தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. அனைத்து தரப்பிலும் சீட் பேரங்கள் நடக்க ஆரம்பித்துவிட்டன.. ஒவ்வொரு கட்சிக்காரர்களும் களப்பணிகளில் இறங்கிவிட்டனர்.
அதிமுக, திமுக என்ற பிரமாண்டமான கட்சிகள் இன்னும் தங்களுடைய கூட்டணிகளை முடிவு செய்யவில்லை.. எந்த பக்கம் திரும்பினாலும் இழுபறியாகவே இருக்கிறது.

உறுதியா?
அதிமுக கூட்டணியில் பாஜக இருக்கிறதா இல்லையா? அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமிதானா? அவரை பாஜக ஏற்கிறதா இல்லையா? போன்ற கேள்விகளுக்கு இன்னும் தெளிவான, உறுதியான விடை கிடைக்கவில்லை. அதேபோல, திமுக கூட்டணியில் எந்த கட்சியுமே இன்னும் இறுதியாகவில்லை.. எவ்வளவு சீட் தந்தாலும் வாங்கி கொள்வோம் என்று காங்கிரஸ் சொல்லி கொண்டிருக்கிறதே தவிர, திமுக இன்னும் அதைபற்றி வாயே திறக்கவில்லை.

மதிமுக
இதேதான் விசிகவும், மதிமுகவும்.. இவர்களுக்கு சின்னம் பிரச்சனை இருக்கிறது.. இவர்களின் கட்சியை சார்ந்தவர்கள் திமுகவில் பதவியில் உள்ளனர்.. அதனால், வேறு கட்சிகளுடன் இணையவும் முடியாது.. தனியாக நின்று போட்டியிடவும் சாத்தியமில்லை.. அதேசமயம், 200 தொகுதிகளிலும் நாங்கள்தான் நிற்போம் என்று திமுக தரப்பில் அடிக்கடி செய்திகள் வருவதும் இவர்களை கலங்கடித்து வருகின்றன.

சந்திப்பு
இந்த சமயத்தில்தான் மற்றொரு தகவலும் கசிந்துள்ளது.. டிசம்பர் 26-ம் தேதி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து பேசியிருக்கிறார்.. மதிமுகவுக்கு கூட்டணியில் 20 தொகுதிகள் வேண்டும், இந்த முறை நிறைய பேர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.. கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் என்று வைகோ சொல்ல, அதற்கு ஸ்டாலின் அமைதியாகவே இருந்தாராம்.. அனைத்தையும் உன்னிப்பாக கேட்டுக் கொண்டாராம்.. எனினும் அவருக்கு எந்த உறுதியான பதிலையும் ஸ்டாலின் சொல்லவில்லை போல தெரிகிறது.. மற்ற கூட்டணி கட்சிகளிடம் பேசிவிட்டு சொல்கிறேன் என்று மட்டும் சொன்னாராம்.

ஸ்டாலின் முதல்வர்
ஆனால், வைகோவுக்கு 20 சீட்கள் தரப்படுமா என்பது சந்தேகம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. காரணம், கூட்டணியில் மதிமுகவுக்கு தந்தால், விசிகவுக்கும் தர வேண்டும்.. இவர்களுக்கு தந்தால், காங்கிரஸ் டபுள் மடங்கு சீட்டுக்களை கேட்க தயாராகும் என்கிறார்கள்.. எனினும் திமுக கூட்டணி இப்போதைக்கு உறுதியாகா விட்டாலும், அவர்கள் அனைவரிடமும் உள்ள ஒரே நம்பிக்கையும், முழக்கமும், திமுகவை இந்தமுறை வெற்றி பெற வைப்பதும், ஸ்டாலினை முதல்வராக்குவதும்தான்!
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து












Click it and Unblock the Notifications